Monday 25 October 2010

மரபாள புராணம் - ஏர்ப்படலம் - நீர் - செய்யுள் - 10

ஆதி ஈறு ஒழிந்து அல்லன

பூதத்தால் நோய் என்று

ஓதினார் அவற்றுளும் உதகம்

ொளற்கு உரிய

ஆதலால் அதை அகலமாய்

உரைப்பது என் அறிவால்

தீ திலாத நற் சலத்தினைத்

ினம் தெரிந்து ஊட்டு

பஞ்ச பூதங்களில் முதலும் கடைசியுமான நிலம், ஆகாயம் இரண்டும் அல்லாத நெருப்பு, காற்று, நீர் என்ற மூன்றும் எல்லா உயிர்கட்கும் நோய் செய்யும் என்பர் மருத்துவ நூலோர். மூன்றில் தண்ணீர் தடை இல்லாமல் எல்லாச் சீவ வர்க்கங்களாலும் ஏற்றுக் கொள்ளுதற்கு உரியது. ஆதலால், அதனை விரிவாகச் சொல்ல வேண்டுவதில்லை. நீ நல்ல நீரை ஆவினங்களுக்கு நேரம் தெரிந்து ஊட்டுவாயாக.

No comments:

Post a Comment