Showing posts with label Greek Goddess. Show all posts
Showing posts with label Greek Goddess. Show all posts

Sunday, 5 May 2013

DEMETER - தான்யலக்ஷ்மி of Greece

நம்மூர் சாமிகளைப்போலவே கிரேக்கம், ரோம் நாகரிகங்களில் இருந்து வருகிறது. யூத-ஆப்பிரகாமிய மதங்களின் தீவீரத்தால் இயற்கை சார்ந்த தெய்வங்கள் உலகிற்கு அவ்வளவாக தெரிவதில்லை. 

நம்மூரில் அஷ்டலக்ஷ்மிகளில் தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, ஐஸ்வர்யலக்ஷ்மி, ஆதிலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, 

லக்ஷ்மி என்பது கஞ்சத்தனத்திற்கும், ஊதாரித்தனத்திற்கும் இடைப்பட்ட சீராக செல்வத்தை வைத்திருக்கும் ஒரு நிலை. மேலே குறிப்பிட்ட அஷ்டவிசயங்களும்  அங்ஙனமே. வீர வரவேண்டிய இடத்தில் வர வேண்டும். வீரத்தை எல்லா இடத்திலும் காட்டக்கூடாது. வீரத்தை காட்டாமலும் இருக்ககூடாது. இப்படி வீரத்தை செல்வமாக ஆக்குபோது நமக்கு நன்மை கிட்டும். 

இது போல கிரேக்கத்திலும் செயலுக்கு சாமிகள் உண்டு. உதாரணமாக, தான்யலக்ஷ்மி என்னும் சாமியைப்போல் அங்கே டிமிடர் (DEMETER) Goddess of Grain  உண்டு. இப்படி உலகில் ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையோடு ஒன்றி வாழும்போது இத்தகைய வழிபடு முறை உருவாகி, இயற்கையை காக்கும்விதமாக இருந்து வருகிறது. 

லக்ஷ்மியையே இன்று  Sustainability என்கிறார்கள்  நவீன விஞ்ஞானிகள்.