Saturday 23 May 2009

வேளாண்பல்கலை கல்வியும், விவசாய வேடதாரிகளும் (sorry) பட்டதாரிகளும்


கல்வி என்பது யாதெனில்.....!! சிந்திக்க ஒரு நிமிடம்:

மத்திய
பேருந்து நிலையம், மதுரை. ஒரு முதியவர் பக்கத்தில் ஒரு சிறியவன். பெரியவர் பேச ஆரம்பிக்கிறார். எங்கடப்பா போற? நான் காலேஜுக்கு போறேன். என்ன படிக்கிற? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அப்படியென்ன புரியாத விஷயம். நீ படிச்சத புரிய மாதிரி மித்தவங்களுக்கு சொல்ல முடியலைன்னா அப்புறம் நீ இத்தனை வருஷம் படிச்சு என்ன பிரயோஜனம்? அந்த பையனுக்கு தூக்கி வாரிப்போட்டது. மிகவும் எளிமையான மிகவும் தெளிவான கேள்வி. இந்த கதையை யாரோ கூற, எங்கோ கேட்ட ஞாபகம் (வயசாகுதுல்ல மறந்திடுச்சு, யாரும் கண்டுகாதீங்க) ! ஆனால், இது எனது கல்லூரி வாழ்க்கை மற்றும் சிந்திக்கும் திறனையே மாற்றியது என்றால் அது மிகையில்லை.

எனது அனுபவமும், விவசாய கல்வியும்:

விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும், விவசாயத்தை பிரதானமாக (குடுமபத்தின் அன்றாட செலவுக்கு) செய்யவில்லை எங்கள் குடும்பம். அப்பா ஆசிரியரானதால், அந்த வருமானத்தில் விவசாயமும் (முதலீடும்), குடும்பமும் ஓடியது. இரண்டாவது வருமானம் இல்லையெனில் விவசாயத்தை செய்ய இயலாது. அதில் வரும் சொற்ப லாபம் அடுத்த முதலீட்டிற்கு குடும்ப செலவுகளுக்கும் கட்டுபடியாகாது.

அம்மா முழுக்க முழுக்க விவசாயத்தையும், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டாள். வீட்டில் எப்போதும் ரெண்டு மாடு இருக்கும். முன்னெல்லாம் பத்து பதினைந்து உறுப்பிடிகள் இருந்தது (ஆடு, மாடு, எருமை, கோழி என). வீட்டில் சான எரிவாயுக்கலன் இருப்பதால் என் அம்மா மாடுகளை இன்று விற்க முற்ப்படவில்லை. இதுவரை எங்கள் வீட்டில் சிலிண்டர் வாயு வாங்கியது கிடையாது. அப்பாவிற்கு, இரண்டு வேலை காலையில் எழுந்து மாடுகளுக்கு நீர்காட்டுவது முதல் பால் கண்டு சென்று ஊற்றுவது வரை செய்து விட்டு பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும், பின்பு மாலையில் திரும்ப இதே வேலை. நிலத்தில் எதுவும் பயிரிட்டிருந்தால் அவற்றை மேற்ப்பார்வையிடுவது, வேலைக்கு தேவையான வேலையாட்களை கொண்டு சேர்ப்பது என்பது அப்பாவின் வேலையாக இருந்தது. முன்பெல்லாம் 2001 வரை மூன்று போகம் நெல் விளையுமாதலால் வருடம் முழுவதும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வேலை ஓயாது. எப்போது அது ரெண்டு ஒன்று என்று ஆகிவிட்டதால் வேலையும் குறைவு. மானாவாரி நிலத்திற்கு நீர் வருடம் நான்குமாதமே வருவதால் அதில் பெரிய வேலையும் வருமானமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு குடும்ப சூழலில், விவசாயம் மற்றும் பள்ளிபடிப்பு (ஆங்கில வழி) என்று எனது இளமை கழிந்தது.

விடுமுறை நாட்கள் முதல் கொண்டு காடு, வயல், ஆடு மாடு மேய்ப்பது என சுற்றித்திரிந்தேன். எனக்கு என ஒரு பூந்தோட்டம், அதில் பல பாடங்களை பள்ளியில் படிக்கும் போதே கற்றுகொண்டேன். விதைகளை சேகரிப்பதும், அறிய வகை செடிகளை கொண்டு சேர்ப்பதும் எனது பள்ளிபருவத்தின் பொழுது போக்கு.

என்னை எப்போதும் வீட்டில் இதற்க்கு படி அதற்க்கு படி என்று வற்புறுத்தியது கிடையாது. பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் காலத்தில் எந்த ஒரு பெரிய குறிக்கோளுமின்றி பொறியியல் மற்றும் வேளாண் படிப்பிற்கு விண்ணப்பித்தேன் (மருத்துவத்திற்கு மதிப்பெண் குறைவானதால் செல்லவில்லை). வேளான்பல்கலையில் தோட்டகலை தொழிநுட்ப பாடத்தை எடுத்தேன். முதன்முறையாக வணிகம் சார்ந்த தொட்டகலைய ஊக்குவிக்க பல்கலையில் மேற்கொண்ட முயற்சி. அதனால் வாய்ப்புகள அதிகம் என்று சேர்ந்தேன். என்னுடன் இருபது மாணவர்கள் இத்தனை எடுத்திருந்தார்கள். அதில், பத்து மாணவர்கள், பத்து மாணவிகள். அனைவரும், பல்வேறு சூழ்லில் வளர்ந்தவர்கள். பெரும்பாலும் (75%) நகரத்திலும், விவசாயம் அல்லாத கிராம சுழலிலும் வளர்ந்தவர்கள்.

களபயிற்சியும், தொழிற்கல்வியும் :

இவர்களுக்கு விவசாயத்தை ஏன் செடிகளை புரிந்து கொள்வதிலேயே சிரமம் இருந்தது. "ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்" அது எங்கள் கல்லூரியில் நிதர்சனமாக பார்த்தேன். பாடம் பயிவிக்கும் முறையில், ஆங்கிலேயரது பணியை கையாளும் பல்கலை, எப்போதும் வெறும் ஏடுகளையே வைத்து கற்போரை உறங்க வைத்தது. மாணவர்களின் பின்புலம் தெரியாமல் அவர்களுக்கு போதனை செய்து கொண்டிருப்பது போன்ற விபரீதம் எங்கும் நிகழாது. நேரமும், பொருளும்தான் விரையம்.

மருத்துவம் பயிலும் மாணவர்கள் களபயிற்சி என்பதை ஒரு வருடம் செய்கிறார்கள். அவையும் செய்வதற்கு எளிதானதால், கல்லூரிகளாலும் அதனை செவ்வனே வழங்க முடிகிறது (ஒரு சதுர அறையில் பல கருவிகளையும் நோயாளிகளையும் கொண்டு முடித்து விடலாம்). அது போலவே பொறியியற்துறை. சாதனங்களும், பயில்விப்போறும் இருந்தால் போதும்.

களபயிற்சியும், வேளாண்கல்வியும் :

1960 களில்:

ஆனால், விவசாயம் என்பது பல்துறை சார்ந்தது. களபயிற்சி என்பது ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெரிய கிராமத்தில் இருந்தாலே ஒழிய அதிலிருக்கும் கஷ்ட நஷ்டங்களை மாணவர்கள் பயில முடியாது. விவசாய பல்கலை தொடங்கிய ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பாலும் விவசாய குடும்பத்தில் இருப்போரே விவசாயம் பயில வருவர். அதனால், களபயிற்சியின் முக்கியத்துவம் தேவைப்படவில்லை. பெயரிற்கு பாடத்தில் இருக்கும். அதனையும் ஏற்று மாணவர்களை மூன்று மாதம் கிராமத்தில் தங்கி கணக்கெடுக்க அனுப்புவர் (வெள்ளைக்காரன் கையாண்ட யுத்தி). விவசாய பல்கலை மாணவருக்கு அடிப்படை விவசாய கிராமிய சூழல் புரிந்ததால் பல துறைகளிலும் செம்மையான ஆராய்ச்சிகளை திட்டங்களை கொண்டுவர செய்படுத்த முடிந்தது.

2000 களில்:

ஆனால், இன்று நான் படிக்கும் இந்த காலகட்டம் அப்படியல்ல! விவசாயத்தை அறியாத புரியாத மாணவர்கள் விவசாய கல்லூரியில் விவசாயத்தை கற்க வேண்டும் என்று வரும்போது அவர்களுக்கு களபயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதனை உணராது, பல்கலையும் பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுதுகிறதே தவிர, இருக்கும் பாடத்திட்டம் மாணவர்களின் புரிதலை வளர்க்கிறதா? என்று ஒருநாளும் சிந்தித்த பாடில்லை. மாணவர்களும் ஒரு செயற்கையான சூழ்நிலையில் விவசாயத்தை படித்து விட்டு பின்பு மேற்ப்படிப்பிலும் சரி, வேலை செய்யும் போதும் சரி கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படித்ததிற்கும் வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லாமல் போய் விடுகிறார்கள். மாணவர்களை வேளாண்மையில் ஒரு குறிக்கோளுடன் செயல்பட வைக்காத பாடத்திட்டத்தினால் வேளாண்மை மேலும் நலிவுறும். போதிய அறிவில்லாத வேளாண் பட்டதாரிகளினால் அரசுக்கும் பயநில்லவிட்டாலும் விபரீதம் ஏற்படாவிட்டால் சரி.


விவசாய பல்கலையில் மாணவிகளின் சேர்க்கையும், வேளாண் முடக்கமும் :

ரெண்டாவது பெரிய கொடுமை பெண்களின் விவசாய படிப்பு. கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள். ஒரு பெண் ஒரு குடும்பதிற்க்கே கல்வி பயில்விப்பாள் என்றெல்லாம் கூறினார் பாரதிதாசன். இன்று வேளாண் பல்கலையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 70% விழுக்காடு. வேளாண், கிராமிய பொருளாதாரத்தின் அடிப்படையே பெண்கள்தான் என்று நினைக்கையில் இத்தகைய பெண்களின் வேளான்படிப்பு, கிராமத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கும் என்றே தோன்றும். ஆனால், இங்கும் கூட மேற்குறிப்பிட்ட விவசாய பின்னணிஇல்லாத குடும்பங்களிளிருந்தோ அல்லது விவசாயமிருந்தும் அதை பாராத பெண்கள்தான் அதிகம் சேர்கிறார்கள். அதிலும், அவர்கள் நோக்கம் வேளாண்மையை கற்பதல்ல. அக்ரி என்ற பெருமை, முடித்தால் வங்கி வேலை, நிழலோடு இருக்கலாம், கட்டிகொடுக்க எளிது என பல பெற்றோர்கள் விருப்பபடுவதால் இவர்கள் வந்து படிக்கிறார்கள். படித்து முடித்தும் திருமணமாகி எங்காவது சென்று தொழிந்து போகிறார்கள். இப்படி இருக்கிறது இவர்கள் நிலை.

முடங்கிய வேளாண்கல்வியும், விவசாய முன்னேற்றமும்:

இப்படி அடிப்படை புரிதல் இல்லாத தரம் குறைந்த வேளாண் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை பின்னாளில் அவர்களையே பயில்விக்க பணியமர்த்துகிறது. கிழிந்தது கிருஷ்ணகிரி! இத்தகைய அடிப்படை புரியதல் இல்லாத ஆசிரியர்களிடம் பயிலும் போது மனம் வெதும்பியதுண்டு. எதிர்த்து கேள்வி கேட்டு பின் பதில் தெரியாமல் முழிக்கும் இவர்களை கண்டு பரிதாபப்பட்டதுமுண்டு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வருடம் தோறும் ஆயிரகணக்கில் ஒன்றிக்குமுதவாத வேளாண் பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன். வேளாண்மை சீர் சீர் கெட இந்த வேளாண் பல்கலையும் விழிப்பில்லாமல் சீர்கெட்டு விட்டது. வேளாண்மையை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் பாணியிலேயே ஆராய்ச்சி கூடத்திற்குள் அடைத்து விட்டது.

திட்ட குழு தலைமை அதிகாரி திரு. மாண்டேக் சிங் அலுவாலியா ஒரு முறை ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்களால் அத்துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன. வேளாண்மை பயிலும் மாணவர்களால் ஏன் வேளாண்மை வளரவில்லை என்று கேள்வி எழுப்பினாராம். எங்கிருந்து வளரும். வேளாண் மாணவர்களுக்கு புரிதல்லளிக்காத, நம்பிக்கையளிக்காத வேளாண் கல்வியால், அதனை பயின்று வெளி வந்த பட்டதாரிகளால் எப்படி நாட்டிற்கு ஸ்திரமான திட்டங்களை வளர்ச்சிப்பணிகளை, ஆய்வுகள் மேற்க்கொள்ள முடியும்?


காலத்திற்கும், மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வேளான்கல்வியை மாற்றியமைக்க விட்டால் விவசாயத்தை முன்னேற்ற நல்ல செயலாளர்களை நாடு உருவாக்க முடியாது. இதை கருத்தில் கொண்டு பல்கலையும் முடிவெடுக்க வேண்டும், பெற்றோரும், பள்ளி முடித்த மாணவர்களும் யோசித்து வேளான்பல்கலையை தேர்வு செய்வது உசிதம்.

தீர்வுகளாக நான் எண்ணுவது!

. வேளான்பலகலையில் மாணவர் சேர்க்கைக்கு தனியாக தேர்வுகள், முக்கியமாக வாய்முறைதேர்வுகள் நடத்தி, மாணக்கரின் ஆர்வத்தை புரிந்து இடம் கொடுக்கலாம். (பல்கலையில் சேருவோரின் எண்ணிக்கை குறைவதால் இந்த முடிவு சில வருடங்களில் எடுபடாது. பொறியியல் சேர்க்கை பனாலாகும்போது இந்த முடிவை மேற்க்கொண்டு மாணவர்களை வடிகட்டலாம்).

. வேளான்பல்களை மாணவர்களுக்கு தனித்தனியாக குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு பட்டம் அறுவடை செய்யும் வரை ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி அன்றாட வேலைகளில் தினமும் ஈடுபட்டு வேளாண்மையின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொள்ளும்வகையிலான களப்பயிற்சியை முதலாண்டு இறுதியிலேயே கொடுக்க வேண்டும். (நம் நாட்டில் இன்னும் 1000 விவசாயிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் இதை முன்னிறுத்துகிறேன். (குறும்பிற்கு, ஆனால் உண்மை: ----> மேலும் பேராசிரியர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்). இல்லையேல், விவசாய படிப்பிற்கு சேரும் போதே வேளாண்மையில் முக்கியமாக பட்டறிவு அனுபவம் இருக்க வேண்டும் என்று கொண்டு வரலாம்.

. வேளாண் படங்களுக்கான தேர்வை எழுதி கையொடிய விடாமல் அவர்களது பாட புரிதலை அலசும் வகையில் வாய்மொழிதேர்வாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (இதற்கும் ஆசிரியர்களுக்கு ஒரு புரிதல் தேவை).

. வேளாண் மாணவர்களுக்கு சுயமுடிவெடுக்கும், சுதந்திரமான சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டிய சில பாட திட்டங்கள் தேவை. அவர்களது, சமூக சிந்தனையை, செயல்பாட்டை வளர்க்க இது உதவும்.


. பல முற்போக்கு விவசாயிகளுடன் சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்தலாம். பல அரசாங்க வேளாண் வணிக மற்றும் செயலாக்க விரிவாக்க பணியாளர்களின், வேளாண் தொழிலதிபர்களின், கிராம முன்னேற்ற பணியாளர்களின், தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பணியாளர்களின் கலந்துரையாடல்களையும் வேளாண்கல்லூரிகளில் கொண்டு சேர்க்கலாம்.

. பள்ளியிலேயே விளையாட்டை விவசாய களபயிற்சியை பாடமாக வைக்கலாம்.

. விவசாய, சுற்றுசூழியல் மற்றும் இதர பயன்பாட்டு விஞ்ஞான பாடங்களை ஒரு பாடமாக வைக்கலாம்.


முடிவாக, முதலில் குட்டு போட்ட பெரியவரின் கூற்றே எனதும். புரிதல்லில்லாத ,பிறருக்கு புரிய வைக்க இயலாத கல்வியை கற்று என்ன பயன். "விழலுக்கு இரைத்த நீராகி விடும்". இவை படிப்போருக்கும், படிக்க வைப்போருக்கும் (பெற்றோர், ஆசிரியர் மற்றும் செயலாக்குனர்) புரிந்தால் சரி!!!