Sunday 31 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-16

இரும் பொருள் விளைவு ஒன்றால் எய்தச் சாலுமோ

அரும் பொருள் தருவதற்கு அமைந்து நின்றது

பெரும் குறை அது த்ரும் பேறுகோள் இன்றேல்

பெரும் குறையே அதில் பிறிது என் ஊதியம்

பெரிய பொருளாதாரம் தானிய விளைவு ஒன்றாலேயே அடைய முடியுமோ? அதனை ஒரு உழவன் பெரிய புல் பரப்பாலே தான் அடைய முடியும். அந்தப்புல் குறை தரும் பேற்றை அவன் அடைவில்லையானால் அது பெரிய குறைபாடே. அப்புற்குறையை விட அவனுக்கு ஊதியம் வேறு என்ன உண்டு? ஒன்றுமில்லையாம்.

Saturday 30 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-15


நாம் பலங்கொடு கழித்தலும்

குறைப்புல்லும் நக்கி

மேம்படும் தொழிற்கு உதவலால்

பிறவற்றில் மிகுவித்து

ஓம்பும் நல்விலை அடையலன்

எனில் உழவில் கண்

ஆம் பெரும் செலவால் அடை

அரும் பயன் என்னாம்

நாம் விளை பொருள்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு கழித்தவைகளான தட்டை, உமி, சக்கை, தவிடு ஆகியவற்றை உண்டு, குறைவில் உள்ள புல்லையும் மேய்ந்து ஆவினங்கள் நமது தொழிலுக்குப் பெரிதும் உதவுகின்றன. அப்பொருட்களால் பசுவினக்களைக் காப்பாற்றி நல்ல விலைப் பொருளை அடையாதவன், உழவுத் தொழிலால் உண்டாகும் பெரும் கூலிச் செலவுகள் போக விளை பொருள்களால் என்ன பயன் அடைவன். அவை கட்டுபடியாகா. எனவே பசுவினங்களை காப்பாற்றி விற்பனை செய்யும் பொருளே நல்ல பயன் தரும்.

Friday 29 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-14

குறையும் பாலுமே கோக்களைப்

பெருக்குவ என்ன

இறையும் எண்ணிலன் இரண்டிலும்

பிற பயன் ஏற்றின்

முறையில் வட்டி வேட்டு அரும் பெறல்

முதலினை இழக்கும்

அறிவிலாளனே அவன் உழும்

தொழிற்கு உளன் ஆகான்.

ஆவினங்களை வளம் பெறச் செய்பவன் புல் குறையும் பாலும் தான் என்று சிறிதும் எண்ணாமல் குறைப் புல்லை தீனிவரிக்கு விடுவது, பாலைக் கறந்து விலை செய்வது ஆகிய வேறு செயல்களில் அவற்றைப் பயன்படுத்துவானே ஆனால் அந்த உழவன் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்து நிற்கும் அறிவற்றவனுக்கு ஒப்பாவான். அவன் உழவுத் தொழிலுக்குத் தகுதி பெற்றவன் ஆகான்.

Thursday 28 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-13


ொன் நிலம் தனில் புரந்தரன் போல்

ுவிக்கு எல்லாம்

ன்னன் ஆகிலும் நீதி இன்றேல்

வலி அழிவான்

எந் நிலங்களும் பல உளான் ஏனும்

ஈட ஏற்றும்

ுன்னிலம் கொளான் பொலிவு எலாம்

அழல் போலும்.

ொன்னுலக இந்திரன் போல உலகுக்கு எல்லாம் ஒருவன் மன்னன் ஆனாலும் அவனிடம் நீதி இல்லையானால் அவன் வல்லமை அற்றவன் ஆவான். அது போல உழவன் பல நிலங்களை உடையவனாக இருந்தாலும் குடும்பத்தை முன்னேற்றம் செய்யும் புல் நிலத்தை வளம் செய்து கொள்ளான் என்றால் அவன் செல்வப் பெர்க்கு எல்லாம் வைக்கோல் போரில் பற்றிய தீ அப்போரை அழிப்பது போல் அழித்து விடும்.

Wednesday 27 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-12

ன்செய் புன்செய் வல் ஏற்று

ாயும் நல்நிலங்கள்

ுன்செய் புண்ணியம் உடையற்கு இம்

மூன்றும் வந்து அடைந்தும்

என் செய் கிற்பதோ எருது இன்றேல்

அவ் எருத்தினையும்

ின் செய் புல்லினைப் பேணி என்று

அப்புல்லைப் பேசும்.

ன்செய், புன்செய், ஏற்ற நீர் பாயும் தோட்டம் ஆகிய மூன்றும் முன் செய்த புண்ணியம் உடையவனுக்கு வந்து சேரும். அப்படி அமைந்தாலும் எருதுகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அவ் எருதுகளை வ்ளம் குன்றாமல் செய்யும் புல்லைப் பாதுகாப்பாய். அப்புல்லைப் பற்றிச் சொல்லுவோம் என்று போதாயனார் கூறுவார்.