Friday, 20 April 2012
இணைய விரிவாக்கமும், இளைய தலைமுறை விவசாயமும்
இன்றைய விவசாயமும், இளைஞர்களின் நிலையும்
Tuesday, 27 April 2010
நீயா-நானா போட்டி!!! இயற்கையை மனிதனால் அடக்கி ஆள முடியுமா?

அனைவருக்கும் வணக்கம்! எல்லாதுக்கும் நமஸ்காரமுங்க!
நேத்தைக்கு விஜெய்தொலைக்காட்சியில் நீயா? நானான்னு? ஒரு விவாதம்நடக்கிறத பார்த்தனுங்க. "அண்ணன்" கோபிநாத் முடிஞ்சவரைக்கும் ரெண்டு பக்கமும்தனது வழக்கமான பாணியில்நழுவிக்கொண்டே இருந்தார். ஆத்துல ஒரு கால், சேத்துலஒரு கால். நமது காங்கிரஸ் ராசாக்கள் மாதிரி. எனக்கு சொஸியலிஸமும்வேணும், காபிடலிஸமும் வேணும்ன்னு நேரு மாமா அடம் பிடிச்ச மாதிரி. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மாதிரி. இந்த பயபுள்ளமன்னிக்கவும் "அண்ணன்" கோபிநாத்து ரெண்டு பக்கமும் ஜால்ரா போட்டபடிஇருக்காரு! என்ன பண்ணுவாறு பாவம்? அவருக்கு அவரது பொழப்பு. யாரையும்பகைச்சுக்க முடியாது. டி.வி. யும் நடத்தனும். அவரு நடுவுனிலைமையோடுபேசுராருன்னு யாரும் நெனச்சுகாதீங்க! அவரு பேசுர மாதிரி பேசினா விஜய்டி.வி. பிசினசுக்கு வேனா ஒத்துவரும். நடைமுறைக்கு ஒத்துவராது. எதாவதுநீதி இருந்துச்சா அங்க? கலைஞர் மாதிரி பேசி முடிசுட்டாரு "அண்ணன்" கோபிநாத்து! அண்ணன் அழகிரி மாதிரி இதுதான் இதுல்லைன்னு பேசுவாரா, அதஉட்டுபுட்டு இயற்கையும் தேவை நவீனமும் தேவைன்னு உடான்சு உடுரார். இதுக்கு சாலமன் பாப்பயாவும், கலைஞரும் தேவல! "அண்ணன்" கோபிநாத்துக்கு வர்ர செம்மொழி மாநாட்டுல "கலைஞர்" விருது கொடுக்கலாம். ரெண்டுமணிநேரம் பேசுனத வச்சு எது நீதியான வாதமுன்னு சொல்லமுடியல! ஒரு நீதியை ஒட்டி, எந்த ஒரு பொது வாத நிகழ்ச்சியின் தீர்ப்பும் இருக்கனம். நீதிபற்றியே இங்கு யாரும் பேசாமல் நடைமுறைக்கு எவ்வளவு ஒத்துவரும்ன்னுகேள்விகேட்டு அதற்கு தக்க முடிவெடுத்தால் தற்போதைய இந்தியா போல்குழப்பம்தான் மிஞ்சும் என்பது நிதர்சனம். ரெண்டு பக்கம்மும் பேசுவதுநடுவுநிலையுமல்ல! நீதியுமல்ல! மழுப்பல்! சந்தர்ப்பவாதம்! மொத்ததில்மக்களை குழப்பி விடவும், அறியாமையில் ஆழ்த்தவுமே இத்தகைய நீதியற்றமுடிவுகள் உதவும். இது வெறும் பொழுதுபோக்கே! இதற்காக தனது பொன்னானநேரத்தை செலவிட்ட இயற்கை விவசாய ஆர்வலர்களை கடிந்துகொள்கிறேன். மேலும், விவாத மேடையில், அரசியல் மேடையில் தீர்ப்பு வழங்குவது போல்நிகழ்ச்சியை முடித்த "அண்ணன்" கோபிநாத்துக்கு எனது ஆட்சேபங்கள்.
நவீன விவசாயமா? இயற்கை விவசாயமா?
இயற்கை விவசாய அணி:
நவீன விவசாயத்தின் ஏகாதிபத்திய வாயிலான தோற்றம், பண்டைய காலஇந்தியாவின் விவசாய அமைப்பு மற்றும் வாழ்க்கை பிணைப்பு, அதன் பிறகுஏற்பட்ட பேராசை சார்ந்த பொருளாதார அமைப்பின் விளைவு முதலியவற்றைஎடுத்து வைக்க முற்பட்டனர் இயற்கை விவசாய அணி. இன்னும் இதன்விளைவுகளை அடிப்படை கோளாறுகளை எளிமையாக விளக்கி இருக்கலாம். ஆணித்தணமாக எடுத்துரைத்திருக்கலாம். அதற்குரிய சந்தர்ப்பத்தை அண்ணன்கோபி வழங்கினாரா? இல்லை இயற்கை அணி சந்தர்ப்பத்தை கோட்டைவிட்டனரா? இல்லை இத்தகைய ஆழ்ந்த விசய ஞானம் இல்லையா? போன்றவைஎனக்கு தெரியவில்லை. எனினும், அனைவருக்கும் எனது நன்றிகள்! வாழ்த்துக்கள்! உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, என்றும் ஒற்றுமையாகஇருங்கள். தொடர்பில் இருங்கள். உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்துஒரு உன்னத பணியாற்றுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
நவீன விவசாய அணி:
இவர்கள் வேறு யாருமல்ல! 1835 ஆம் ஆண்டு "லார்டு மெக்காலே" கண்டகனவை, நனவாக்கிக்கொண்டிருக்கும் பிரிடிஷ் இந்தியாவின் ஒன்பதாம்தலைமுறை. இவர்கள் தேசிய நலன் என்று கூறிக்கொண்டு பாரதத்தின்தனித்தன்மையை அழிக்க முயற்சிக்கும் த்ரோகிகள். இவர்கள் குழப்பத்தில்இருக்கும் அணியல்ல! அறியாமையில் இருக்கும் அணி. அராஜக பாணியைநிகழ்ச்சி முழுவதும் கையாண்டனர். நான் சொல்வேன் நீ கேள் என்ற ஏகவசனத்தை இருவர் மூன்றுமுறை உமிழ்ந்தனர். நான் எஃஸிகுடிவ். நான்சொல்கிறென். அதன் படி நீங்கள் மஞ்சள் பயிரிடுங்கள் என்று ஒருபிதற்றல்வாதி கூற அதற்கு மறுப்பு தெரிவித்த ஆத்தூர் இயற்கை விவசாயி; நீங்கள் வந்து எனது பக்கத்து நிலத்தில் செய்து காட்டுங்கள் என்று கூற! எதற்காக அவ்வாறு கூறினார் என்று தெரியாமல் அண்ணன் கோபிநாத்து குறுக்குகேள்வி கேட்க, அதற்கு அந்த விவசாயி கூறிய பதிலின் சாராம்சம், பின்னனிதெரியாமல் அண்ணன் கோபிநாத்து வினவ, "லார்டு மெக்களே" அணி கெக்கபிக்க என்று சிறுகுழந்தை பாணியில் கொக்கானி காட்ட; இதைக்கண்டு அந்தவிவசாயி நொந்து போனார். அறிவிழந்த மக்களிடையே நல்கருத்தைபேசிவிட்டோமே என்று அந்த நிமிடம் கடிந்து கொண்டிருப்பார். இப்படிப்பட்டஉருப்படாத கூட்டத்தில் கணேசன் என்ற "லார்டு", ஐரோப்பிய பூச்சி மருந்துபுள்ளி விவரங்களை அள்ளி வீசியது. மேலும், தான் ஐரோப்பாவிலிருந்து நேரேவாரேன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டது, விவாத அரங்கின்விதிகளுக்கு மாறனது. மேலும், தவறான புள்ளிவிவரங்களை கொடுத்துசுல்தான் இஸ்மாயிலிடம் மாட்டிகொண்டது, நல்ல பாடம்.
இவர்கள் பேச்சிலும் நாகரிகமற்ற தன்மையை கையாண்டதுமுதலே இவர்களது அநீதியான போக்கு புலப்படுகிறது. உணவுப்பாதுகாப்புவேண்டும் என்று கரைந்த காகங்களை நல்ல விதமாக பதிழட்டிகொடுத்தானர்நியாயமான் அணியினர். வாழ்க்கைமுறை மாறவேண்டும் என்ற நீதியைவியாபார பக்கிகளுக்கு, ஆழமரத்தடியில் வைக்க வேண்டிய விவாத்ததைவடபழனியில் பலபலக்கும் ஜொலிஜொலிக்கும் அரங்கில் எடுத்துறைத்தால்எவ்வாறு ஏறும்? விஜய் டிவி. டீமுக்கு கிராமச்சூழல் அலர்ஜியா? அன்னியவாழ்க்கை முறை, முறையற்ற அநாவிசய வாணிப முறை, ஒவ்வாதபயிரிடுமுறை போன்றவையே இன்றய இயற்கை சீரழிவிற்கு, சமூக, ஆரோக்கிய சீரழிவிற்கும் காரணம் என்ற உண்மையை, நவீனவேளாண்மையாளர்களே உணர்ந்து விட்ட சூழ்நிலையில், "லார்டு மெக்காலே" அணியின் பிதற்றலைக்கண்டு எரிச்சல்தான் வருகிறது.
திமிர்பிடித்த அராஜக பேச்சாளர் நீலகண்டன்:
இப்போதுதான் தலைப்புக்கு வரேன். "லார்டு மெக்காள்லெ" அணியின்அறிவார்ந்த கருத்தாலோசகராக ஒருவர் வந்திருந்தார். Ex. Director நீலகண்டன், Madras Institute of Development Studies (MDIS). உலகை தவறான பாதைக்குஅழைத்துச்சென்றவர்கள், இந்த பொருளாதார கத்துகுட்டிகள். "அர்த்தஸாஸ்திரம்" கொடுத்த பாரத மக்கள், "லார்டு மெக்காலே" வின் சதிக்குபின்பு, அனைத்தையும் மறந்து நீலகண்டன் போன்ற பொருளாதாரசர்வாதிகாரியாகவும் மாறியுள்ளனர். இந்த மனிதரின் பேச்சு "அவதார்" படத்தில்வரும் கொடுமைகளை நினைவுபடுத்தியது. "Development" அதாவதுமுன்னேற்றம்" என்ற ஆங்கில வார்த்தையை கூறி, உலகில் "Development" அடைந்த நாடுகள் அனைத்தும், அனைத்து சிக்கல்களுக்கும் ஆளாகியுள்ளன, இந்தியா விதிவிலக்கல்ல என்றார். மேலும், "மனிதன் பிற உயிரினங்களைபோலல்லாது அனைத்தையும் இயற்கையையும் கட்டுக்குள் கொண்டு வரும்ஆற்றல் படைத்தவன்" என்று கூறி தன் அராஜகத்தை தலைக்கனத்தை, டார்வின், மார்ஃஸ் போன்றோரின் சித்தாந்தத்தை நினைவுபடுத்தினார்.
We didn't achieved development, we have progressed economically; Its nothing but growth; Its not development; Its cancerous; Not wholistic என்று இன்றய மேற்கத்தியஅறியவியல் Economic Growth மற்றும் Development ரெண்டிற்குமான வித்யாசத்தைகண்டுணர்ந்து "we need sustainable economic growth" என்றுகூறிக்கொண்டிருக்கையில் இந்த "முன்னாள்" இயக்குனர் "Development" பத்திடமாரம் அடித்து அதில் இயற்கையை வெல்வோம் என்று கூறியது, அவர்மார்ஃஸ் காலத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டியது. Indians economic theories and books were copied, including with its spelling mistakes என்று ஒருவர்கூறியது மீண்டும் இவர் மூலம் நினைவுக்கு வந்தது. இவர் போன்ற அராஜகம்மிகுந்த, இயற்கை விரோத, கொடூரமான, பொறுப்பில்லாத மனிதர்கள் சிலர்இன்னும் காசுக்காக கைக்கூலி வேலை பார்ப்பதால் மரபணு மாற்றுதொழினுட்பம், கலைக்கொல்லிகள் என்று பல வந்தவண்ணம் உள்ளன.
மனிதனை ஒரு அன்னிய சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது. மனிதன்இயற்கையே! மனித செயல்களும் இயற்கையே! ஆனால், அவன் செயல்களில்இருக்கும் சாத்வீகமும், வக்கிரமுமே அவனை வேறுபடுத்துகின்றன. சாத்வீகமாக பயபக்தியுடன் இருக்கிற சமூகம், ஆக்குகிறது. வக்கிரத்துடன்பயத்திலும், வெறியிலும், லோபத்திலும் மூழ்கிய சமூகம், அழிக்கிறது. நம்மைநாமே அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தேவை. அதை விடுத்துஇயற்கையை அடக்கி ஆள்வோம் என்று கூறுவோரை மனிதர்களாகவேஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவென்ன?
பயத்திற்கும், பயபக்திக்கும் வித்தயாசம் உண்டு.
பயத்தால், "மனிதன் பிற உயிரினங்களை போலல்லாது அனைத்தையும்இயற்கையையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்தவன்" போன்றபேச்சுக்கள்,இயற்கை விரோத ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் நடக்கும். கடந்தகாலத்தில் 200 வருடத்தில், கண்டுபிடிக்கப்பட்ட பல விசயங்கள் பயத்தலும், போர்க்காலங்களில்ளும், அறியாமையலும் நிகழ்ந்தவையே. சுருக்கமாகசொன்னால், "விநாச காலே விபரீத புத்தி".
பயபக்தி என்பது பயத்தை நீதியின் (தன்னை வாழ் வைப்பன, காப்பனஎ.கா.முன்னோர்கள்,மண்,நதி,சமுத்ரம்,மரம்,தான்யம், பசு முதலியன) மேல்வைத்து அதனை காத்து வாழ்வது. பயபக்தியால் இயற்கை காக்கப்படும். அதனால், இயற்கை விவசாயம் செய்தால் உணவுப்பற்றாக்குறை வரும் என்றஅச்சம் தவிர்த்து இயற்கை வளங்களை பயபக்தியுடன்பாதுகாக்கத்தொடங்கினால், ப்ரதேச வாழ்க்கைமுறைகளை கடைபிடித்தால் எந்தகெடுதலும் நடவாது. இதனை, மக்கள் உணர்வது என்னாளோ????
Thursday, 1 April 2010
எதிர்காலம் சாமியப்பன் (alias) சட்டை அணியா சாமியப்பன்
Introduction
http://www.youtube.com/watch?
1
http://www.youtube.com/watch?
2
http://www.youtube.com/watch?
3
http://www.youtube.com/watch?
4
http://www.youtube.com/watch?
5
http://www.youtube.com/watch?
6
http://www.youtube.com/watch?
7
http://www.youtube.com/watch?
8
http://www.youtube.com/watch?
9
Friday, 19 March 2010
Life Killer Series 7: "Botany of Desire - A Mono-culture insight"

Please kindly spend some 30 minutes to watch the part of the documentary in youtube
Monday, 14 September 2009
தமிழக மற்றும் இந்திய விவசாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள்!

விவசாயத்தில் காலங்காலமாக சிறந்து விளங்கிய தமிழகம் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக சந்தித்து வரும் பல பிரச்சனைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.
அதிலென்ன, கண்ணுக்கு தெரிந்த பிரச்சனை என்று நீங்கள கேட்கலாம். பொதுவாக விவசாயிகளும், பத்திரிக்கைகளும் மேம்போக்காக அலசும் பிரச்சனைகள் இவை.
முதலாவது: விவசாய வேலைக்கு தொழிலாளர் பிரச்சனை. (கொடுமைடாசாமி, "ஆள்" பிரச்சனைன்னு சொல்லிட்டா கெட்ட வார்த்தையாயிடும். "ஆள்" என்றால் அடிமை என்கிற மாதிரி ஒரு அர்த்தம் இருக்கிறதாம், பகுத்தறிவுமற்றும் கொடி பிடிக்கும் அமைப்பினர் பல இடங்களில் பேசியதைபார்த்திருக்கிறேன்). ஆள் பிரச்சனைக்கிறது, வராமையா இருக்கும்? பொறக்கிற குழந்தையனைத்தும் படிக்க போயிடுதுங்க! இருவத்தி நாலு வயசு வரைக்கும் படிக்குதுங்க! அப்புறம் சொக்கா மடியாத வேலை தேடுதுங்க! எதோ, கிராமத்துல இருக்கிற பெருசுங்க வேலை செய்யலைன்னா உவ்வா இருக்காது சாமியோவ்.
இரண்டாவது: தண்ணீர் பிரச்சனை. இது இருப்பதுதான். ஆனால், கடந்த சிலபல வருடங்களில் அதிகமாகியுள்ளது. காரணம்,
--->கணக்கில்லாமல் பாசன வசதிகளை பெருக்கியது.
--->கண்மூடித்தனமாக பாரம்பரிய பயிர்களை, ரகங்களை அழித்து தண்ணீர்அதிகம் வேண்டுகிற பயிர்களை பயிரிட்டது.
--->நகரப்பெருக்கம் மற்றும் அபரிதமான தண்ணீர் வீணடிப்பு (சமையல் கட்டில், துவைக்கையில், கக்கூசில், இப்படி பல).
---> தொழிற்ச்சாலைகள் பெருக்கம். (போர் போட்டு உறிஞ்சி தண்ணீரை பாழாக்கிஆற்றில், குளத்தில், நிலத்தில் விட்டு மேலும் பல பிரச்சனைகளைஉண்டாக்குவது).
மூன்றாவது: கட்டுபிடியாகாத விலை. ஆமாம், செம்மறியாட்டு கணக்கா ஒரே பயிரை பயிரிட்டு தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்வது விவசாயிகள்தான். மேலும், அரசு ஒரு பயிரின் பரப்பை முன்னர் சொன்னது போல பல இடங்களுக்கு நீர் பாசனம் மூலம் பரப்பி அதிகம் உற்பத்தி செய்து விலையை குறைத்து நகர வாசிகளுக்கு வசதி செய்தி தருவது. மேலும், வெளிமாநில இறக்குமதி, வெளிநாட்டிலிருந்து உலகமயமாக்கத்தினால்இறக்குமதி என்று கூறி மேலும் உள்ளூரானை நசிவுற வைப்பது.
நான்காவது: விளச்ச்சல் குறைவது. பின்ன குறையாமைய இருக்கும். பூமியதாய கும்பிடசொன்னாங்க பெரியவங்க. ஆனா, நாம்ப ஒரு பொருட்டா கூடமதிக்கல. நாற்ப்பது வருடமா உப்பு, பூச்சிகொல்லின்னு தூள் கிளப்பினோம். விளைவு பூமி செத்து போச்சு. ஒன்னும் வேலைய மாட்டிங்குது. பூசியடிக்குது. எதுக்கும் கட்டுபடரதில்லசத்து கெட்ட பூமியில போடுற யூரியாவும் தங்கறதில்ல. மாட்டுகுப்பை ஒரு சாங்கியதுக்காவது காட்டினாதான கொஞ்சமாவது மண்ணுக்கு உசிர் இருக்கும். விளைச்சல் குறையவே செய்யும்.
கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகள்:
ஐந்தாவது: "Hardworkophobia"ங்கிற சமூக வியாதி. உழைக்க்கிதுக்கு யாரும் முன்வரதில்லை. கேவலமா நெனைக்கிறாங்க. இந்த வியாதி மூதேவியின் வாரிசு. இந்த வியாதிய ஒழிச்சாத்தான் மக்காகளுக்கு பின்னால சோறு கிடைக்கும். உடல் உழைப்பே இல்லாமல் பழகி விட்டால் ஒரு நாள் எரிபொருள் கிடைக்காமல் அவதியுறும் காலம் வருகையில் இந்த கையாலாகாத தனத்தால் மடிந்து போவரோன்னு தோனுது.
ஆறாவது: உடலில் பலமில்லாமை. இப்பல்லாம் எங்கீங்க வேலை ஆளுங்கஒழுங்கா வேலை செய்யுறாங்க? சீக்கிரம் கல்சி போயுடுறாங்க. முடியறதில்லை. முடியாம போகாமயா இருக்கும். ஒழுங்க உள்ளூர் ராகி, கம்புன்னு தின்னுகிட்டுஇருந்தவங்கள பாளிஷ்டு அரிசி சோறு போட்டு அவிங்கள கெடுத்துபுட்டீங்க. பத்தாதற்கு யூர்ரிய, போச்சிகொல்லின்னு அடிச்சு அதன் சத்தையும்ஒன்னுமுல்லாம ஆக்கி புட்டீங்க. எங்கிருந்து வரும் வேலை செய்யுறதுக்குபலம். கள்ளு குடிச்சுக்கிட்டு இருந்தாங்க அவிங்களுக்கு சீமா சரக்கு கொடுத்துஈரலையும் கெடுத்தாச்சு. இதய நோய், நீரிழிவு, வாதம்ம்ன்னு பல வியாதிகளும்பரவி இருக்கு.
ஏழாவது: சுற்று சூழல் சமச்சீர் இழந்தமை. இது ஒரு பய புள்ளைக்கும்புரியறதில்ல. மருந்து வேணும்ன்னா கட்டுக்குள்ள பொய் தேடுற ஆளுங்கமருந்துக்கு கூட காட வஜ்ஜிருக்கனம்ம்ன்னு தோணாதா? காடுங்கிறது ஒருசமச்சீரான சுற்றுசூழல். தீமை நன்மை செய்யும் விலங்கினங்களும்தாவரங்களும் சமமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழல் இருந்தாதான நம்மஊருல கொசுவாவது இல்லாம இருக்கும். நாமதான் தவளைங்களையே பூச்சிமருந்தடிச்சும் அது அன்டுரதுக்கும் ஒரு இடம் வைக்காம நமக்கு வேனும்ம்ன்னுஎடுத்துக்கிட்டோம். எங்கிருந்து பூச்சி சாகும், பயிர் வளரும். இன்னும் கொஞ்சநாளுல பாம்பு, கிளி, இப்படி எல்லாமே அழிசிபுடுவோம்ம்ன்னு நெனைக்கிறேன். கண் கெட்டாத்தான் புத்தி வரும்.
எட்டாவது: அவரச பணம் & பணபேராசை. நான் உழைக்கவும் மாட்டேன், நிலத்தை பராமரிக்கவும் மாட்டேன், மாடும் வழக்க மாட்டேன், தண்ணீர் வளங்களையும் கண்டுக்க மாட்டேன் ஆனா எனக்கு காசு வர்ற மாதிரி பயிர் வேணும், அதுவும் நிறைய விளையணம், அதுக்கு அரசாங்கம் மான்யம் குடுக்கனம், விலை குறைஞ்சா நிர்ணயம் பண்ணனம், நஷ்ட ஈடு கொடுக்கனம் இப்படின்னு போர்க்கொடி கூக்குரல் போடுவோம். நகரத்துல இருக்கிரவனாவது காசு கொடுத்து வாக்கனம் அவன் எப்படி இவன அடிச்சு முழுங்கி பேங்க் பேலன்ஸ எத்தலாமுன்னு யோசிக்கிறான். பேராசை பேரு நஷ்டமுங்க! அத புரிஞ்சிக்கோங்க மக்கா!