Showing posts with label மரபாள புராணம் - ஏர்ப்படலம். Show all posts
Showing posts with label மரபாள புராணம் - ஏர்ப்படலம். Show all posts

Thursday, 4 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-20

மாட்டுக்கு ஆகலா வயிற்றினுக்கு உழைத்திடின் அவற்றின்

பாட்டுகும் ஆகவும் மிகும்பலன் அதில் பகிர்ந்து எடுத்தது

ஆள் தொக்கால் விலை எத்துணை அத்துணை சரியாய்

ஊட்டற்கு ஆவன விலை கொண்டு ஊட்டு உணவு உளவேனும்

மாட்டின் வயிற்றுனுக்கும் உதவாத மிளகாய், புகையிலை முதலிய பணப் பயிர்களின் பொருட்டு அந்த மாடுகள் பாடுபடுவதால் அவைகளின் வேலைகளுக்காகப் பணப் பயிரில் அதிகமாகக் கிடைத்த பொருள்களைப் பங்கு செய்து எத்தனை ஆள்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த மாடுகள் செய்திருக்கின்றன எனபதை எண்ணி வேறு உணவுப் பயிர்களின் வருமான் மிகுதியில் பருத்தி விதை, பிண்ணாக்கு முதலியன விலைக்கு வாங்கிச் சத்துள்ள அவ்வுணவை அவைகளுக்கு ஊட்டுவாயாக.

Wednesday, 3 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-19

நெல்லையே பெரிது என்பவன் நெல் தர நின்ற

வல்ல காரணம் அறிகிலன் வரும் வழி அறிவான்

புல்லையே பெரிது என்பவன் புல்தராப் பலன் வேறு

இல்லை ஆதலின் இதை மறந்தான் உழவு இழந்தான்.


நெல்லையே பெரிதாகப் பேசுபவன் நெல் வருவாய்க்கு உரிய காரணம் அறியாதவன் ஆவான். புல்லை மதித்துப் பேசுபவன் நெல்லும் பிற தானியங்களும் வரும் வழிகளை அறிந்தவன் ஆவான். எனவே உழவுத்தொழிலில் புல்லை மதித்துப் போன்று பலன் தருவது வேறு எதுவுமில்லை. இந்தப் புல்லின் வளத்தைப் பெருக்க மறந்தவன் உழவுத் தொழிலை மறந்தவன் ஆவான்.

Tuesday, 2 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-18

ுண்டகம் முதலிய மூடும் புல் குறை

உண்டிலன் உதவிலன் உலுத்தவன் கைப்பொருள்

மிண்டிய புல்லினும் மிகுத்த காலிகள்

திண்திறல் இலாதவன் சென்னிவன் சுமை.

முள் செடி முதலியன மூடியுள்ள புல் குறையானது தானும் உண்ணாது, பிறருக்கும் உதவாத உலொபியின் கைப்பொருள் போல வீணானதாம். நெருங்கி அடர்ந்த புல்களாயினும் அப்புல்லை மேயும் அளவுள்ள கால் நடைகளுக்கு மேல் அதிக கால் நடைகளை மேய விடுவானே ஆனால் அது சுமை சுமக்கும் திறம் இல்லாதவன் தலையில் சுமத்தும் பெருஞ்ச்சுமை போன்று பயனற்றதாம்.

Monday, 1 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-17

ொற்குறை பசுக்குறை புருவையின் குறை

ெற்குறை பால் தயிர் நெய் எருக்குறை

ொற்குறை யாவையும் தொடர்ந்து சூழும்கால்

ுற்குறை இலாமையில் புகுந்த வன்குறை


ொன், மாடு, ஆடு, நெல், பால், தயிர், நெய், எரு முதலான இவற்றின் குறைகளால் உழவனின் புகழுக்கும் குறைவு உண்டாம். இவை யாவும் எதனால் ஏற்பட்டவை என்று ஆராயுமிடத்து புல் பரப்பு நிலம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வலிய குறையாம்.