Sunday 13 November 2011

உழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால், விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் ஆங்கிலேயர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் காலம், காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.பசுக்கள் அழிந்தால், இந்தியர்கள், உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரை சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு, 54 குவிண்டால் அளவுக்கு சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760ல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்ல, பசுவதை கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். முதல் பசுவதைக் கூடம் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு, 30 ஆயிரம் பசுக்கள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடி பசுக்களை கொன்றார். அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன், இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவு என்ற போர்வையில் கொல்லப்பட்டன.அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு உற்பத்தி நடந்தது. 1910ம் ஆண்டு நம்நாட்டில், 350 பசுவதைக் கூடம் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும், நாம் ரசாயன உரத்திற்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம்நாடு சுதந்திரம் அடைந்த பின், பசுமை புரட்சி என்ற பெயரில், பெருமளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை காந்தியிடம், ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், "இந்தியா சுதந்திரம் அடையும் அந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார். 1929ம் ஆண்டு, நேரு ஒரு பொதுக் கூட்டத்தில், "நான் இந்தியாவின் பிரதமரானால், இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், 1947க்குப் பின், 350 பசுவதைக் கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு, "முன்னேறி' விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக் கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. டில்லியில் மட்டும், 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன. இங்கு மட்டும் நாளொன்றுக்கு, இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.நமது நாட்டு பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள், நல்ல உடல் சக்தியுடன், நோய் எதிர்ப்பு திறன், வெயிலை தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்களை சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாக செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தக கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில், இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.விளைநிலம் குறைந்தால் என்ன, குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலாளர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என, அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது, வருங்கால சந்ததிகள் தான்.

அறிவியலாளர்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளி விவரப்படி, நம் நாட்டில் உள்ள, 73 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவிற்கு உடல் உழைப்பை நமக்கு கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், இதேஅளவு சக்தியை உற்பத்தி செய்ய ஆகும் நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருட்களை சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஒரு ஆண்டுக்கு, 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்கு கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால், 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால், மரங்கள் அதிக அளவிற்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த, 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால், நமக்கு, 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். அவற்றை இயக்குவதற்கு, 2 கோடியே, 37 லட்சத்து, 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கும்.இயற்கை நமக்கு தந்த செல்வங்களான, கால்நடைகளை கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை, சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று, ரசாயன உரம் இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.ஒரு நவீன மாடு வதை கூடத்திற்கு, அதை சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம்நாட்டில் இயற்கையின் கொடையாக கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? Email: tawt2011@gmail.com

- டாக்டர் கே.வெங்கடேசன் -செயலர்,தமிழ்நாடு பிராணிகள் நல அமைப்பு, மதுரை. 

நன்றி : தினமலர் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348085

Cow Slaughter — The Brahmastra of the British

Posted by Madhava Gosh under Cows and Environment 
The Two most astonishing things for the British who invaded India were:
1)      The Indian gurukula system.
2)      The Indian agriculture system.
The then Governor of British India Robert Clive made an extensive research on the agriculture system in India.
The outcome of the research was as follows:
1)      Cows were the basis of Indian agriculture and agriculture in India cannot be executed without the help of cow.
2)      To break the Backbone of Indian agriculture cows had to be eliminated.
The first slaughterhouse in India was started in 1760, with a capacity to kill 30,000 (Thirty thousand only) per day, at least one crore cows were eliminated in an years time.
He estimated that the number of cows in Bengal outnumbered the number of men. Similar was the situation in the rest of India.
As a part of the Master plan to destabilize the India, cow slaughter was initiated.
Once the cows were slaughtered, then there was no manure and there is no insecticide like cow urine.
Robert Clive started a number of slaughter houses before he left India.
A hypothesis to understand the position of Indian agriculture without slaughter houses:-
In 1740 in the Arcot District of Tamil Nadu, 54 Quintals of rice was harvested from one acre of land using simple manure and pesticides like cow urine and cow dung.
As a result of the 350 slaughterhouses which worked day and night by 1910. India was practically bereft of cattle. India had to approach England’s doorstep for industrial manure. Thus industrial manure like urea
and phosphate made way to India.
by Shyamasundara (das) ACBSP  (USA)
After India attained independence in the name of “Green Revolution” there was extensive use of industrial manure.
Before British left India. The daily news paper Guardian interviewed India.
To one of the questions Gandhiji answered, that the day India attains Independence, all the slaughter houses in India would be closed.
In 1929 Nehru in a public meeting stated that if he were to become the prime minister of India, the first thing he would do is to stop all the slaughterhouses.
The tragedy of the situation is since 1947 the number has increased from350 to 36,000(thirty six thousand) slaughter houses.
Today, the highly mechanized slaughterhouses Al-kabir and Devanar of Andhra Pradesh and Maharastra has the capacity to slaughter 10,000(ten thousand) cows at a time.
It’s a warning signal to one and all in India to rise to the occasion!!! 
Source: http://walkingthefenceline.wordpress.com/2008/07/29/cow-slaughter-the-brahmastra-of-the-british/

No comments:

Post a Comment