Sunday 15 March 2009

LK Series Introduction வாழ்க்கைக்கொல்லிகளும், வாழ்வாதாரக்கொல்லிகளும் - முன்னுரை



"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சவுக்கிமா? யாரும் இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே!!" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளில் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது. அவர் யாருக்கு சொன்னார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் இயற்கையில் ஒரு பொருளோ, உயிரினமோ இருக்க வேண்டிய இடத்தில் இல்லையேல், அந்த உயிருக்கோ அல்லது இருப்பிடதிற்க்கோ ஆபத்து!

முதலை நீருக்குள் இருக்கும் வரை அதற்க்கு பலம். யானைக்கு நிலத்தில் இருக்கும் வரை பலம். முதலை நிலத்திற்கு வந்தால் யானைக்காளில் மிதி படும். யானை நீருக்குள் சென்றால் முதலை வாயில் அகப்படும். இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே!

இதே கதை மனிதர்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் பரவிய யூத மற்றும் தமிழினம் போகும் இடம்களிலெல்லாம் வேரூன்ற முற்ப்பட்டு குட்டு பட்ட கதை வரலாறும், நடப்பும் தெரிவிக்குமொன்று. போகுமிடத்தில் அந்த இடத்துடன் ஒத்து போகும் தன்மை மேற்குறிப்பிட்ட இனங்களுக்கு கிடையாது (பழைமையான இனமாதலால்). தங்களது கலாச்சாரத்தை, திறமையை பறைசாற்றி வெற்றி பெற்றாலும், அந்நிய நிலம்மென்பதால் ஆபத்து இருக்கத்தானே செய்யும். ஒரு நாலள்ளது ஒரு நாள் அவர்கள் அதன் பாதிப்பில் பீடிக்கத்தான் படுவார்கள். ஹிட்லர் யூதர்களை கொன்றது, இன்று தமிழர்களை மலேசியா மற்றும் இலங்கையில் முதலை வாயில் அகப்பட்டது போல் இருப்பது போன்றவை சான்றுகள். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக, போன இடத்தில் பிறரது வாழ்வாதாரத்தையும் சிதைக்க முற்படாமல் இருப்பது, மிகவும் நமக்கும் நல்லது அந்த ஊருக்கும் நல்லது. இல்லையேல், ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் புழுபோல் பரவி சுரண்டி பிறரது வாழ்வுதனை அழித்து எங்கள் சாம்ராஜியத்தில் ஆதவன் மறைவதில்லை என்று சூழுரைத்த போது தனது இருப்பிடத்தை இரண்டாம் உலகப்போரில் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது போல் ஆகிவிடும். ஆகையால், அவரவர் இருக்குமிடத்தில் இருப்பது எவ்வளவு முக்கியமென்பது விளங்குகிறது.

இந்த ஒப்புமை இயற்கையில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், பருப்பொருட்களுக்கும் பொருந்தும். பூசணிக்காய், அத்திக்காய் கதை அனைவருக்கும் தெரிந்ததே! வழிப்போக்கன் ஒருவன் காடு வழியே செல்கையில் ஒரு பூசணிக்கொடியை காண்கிறான். அதில் மிகப்பெரிய பூசணிக்காய் இருக்கிறது. சற்றுநேரத்தில், மிகப்பெரிய அத்திமரத்தை காண்கிறான். அதில் மிகச்சிறியதாய் காய்கள் பல இருக்கிறது. அதைப்பார்த்து, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இயற்கையில். சிறி கோடியில் பெரிய பூசணி, பெரிய விருட்சத்தில் சிறிய கனி, என்று நகைக்கிறான். களைப்பில் அத்தி மரத்தினடியில் அமர்கிறான். உறங்கிபோகிறான். ஆழ்ந்த தூக்கத்திலிருக்கையில் ஒரு அத்திப்பழம் அவன் மூக்கு மீது விழுகிறது. பதறி எழுந்த அவன் விழுந்தது ஒரு சிறிய அத்திப்பழம் என்பதை கண்டு சாந்தப்படுகிறான். அப்போது நினைத்துப்பார்த்தான். இவ்வளவு பெரிய மரத்த்தில் பூசணி போன்று பழமிருந்து மூக்கில் விழுந்திருந்தால் என்னவாகுமென்று. இயற்கையில் எவை எங்கு இருக்க வேண்டுமோ அவை அங்கே சரியாக இருக்கிறது. நாம தேவையின்றி நம்முடைய சிந்தைக்கு தகுந்தாற்போல் மட்ட்ரிவைக்க ஆசைப்படுகிறோம். மாற்றியும் வைக்கிறோம். மாற்றி வைக்கையில் பூசணிக்காய் மூக்கில் விழுந்த கதையாகத்தான் இருக்கும் விளைவுகள். அதனால் எவரும் இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே!

என்னடா! தலைப்பில் வாழ்க்கைக்கொல்லி, வாழ்வாதாரக்கொல்லி என்று சொல்லிவிட்டு சவுக்கியமா! பரமசிவன், செயல்-விளைவுன்னு உலர்ரான்னு பாக்காதீங்க! இவ்வளவு பீடிகையை முன்னுரையா கொடுக்கலைன்னா நான் சொல்ல வர்ற விஷயம், அதன் ஆழம் இன்றைய சிந்தனையாளர்களுக்கு புரியாது.

விசயத்துக்கு வரேன்!!

இன்றைய விவசாயத்தில் நாம் இயற்கையை கண்ணா பின்னாவென்று மாற்றி விட்டிருக்கிறோம். அதன் ஆழம் வெறும் பூசணிக்காய்-அத்திப்பழ கற்ப்பனையில் ஆரம்பித்து பாக்டீரியா-பருத்திவரை சென்று இன்று மூலக்கூறுகள்-இனம் என்று ஒப்புமைப்படுத்தி மாற்றிப்பார்க்கிற பார்க்கிற அளவுக்கு சென்றிருக்கிறது.

தப்பு சைஸ் என்னவாயிருந்த என்ன? விளைவ பாருங்க எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் அப்படீன்னு ஒரு திரைப்பட வசனமொன்று நியாபகம் வருது.

நாம என்னமோ இத எடுத்து இங்க விளைய வச்சா என்ன ஆயிடும்ன்னு யோசிக்கிறோம். ஆனால், மிகச்சிறியதாக தெரிகிற அந்த யோசனை, அதன் விளைவை காட்டும் போது நாம் புரியாமல் யோசித்து அதனை ஆராய்ந்து மூலத்தை கண்டுபிடிக்கையில் நாம் வியந்து போய் அதனிடமிருந்து மீளமுடியாமல் தவிக்கிறோம். அவையே நமக்கு அச்சுரத்தலாகவும், வினையாகவும் முடிந்து விடுகிறது. சுருக்கமாக சொன்னால் நம் வாழ்க்கைகொல்லியாகவும், வாழ்வாதாரக்கொல்லியாகவும் போய்விடுகிறது.

அப்படி இன்றைய விவசாயத்தில் மனிதன் ஏற்படுத்தியிருக்கும் பல வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரக்கொல்லிகளின் (Killers of life and livelihood) தன்மைகள் மற்றும் விளைவுகள் பற்றி எழுதவிருக்கிறேன். அதற்கான முன்னோட்டமே இந்த பீடிகைக்கட்டுரை!!

முதல் வாழ்வாதாரக்கொல்லி இனிப்பானது, ஆனால் அதன்............ பொறுத்திருங்கள்!!!!!!!!

Friday 13 March 2009

"வான் பொயிக்காவிடினும், தான் பொய்க்கும் காவிரி"




இந்த கட்டுரையை படிக்கும்அனைத்து துப்பில்லாத, சொரணகெட்ட ஆசாமிகளுக்கு வணக்கம். நம்மால் எவனாவது அற்புதமாக படம் காட்டினால், வன்மையாக சாடினால் அவர்களுக்கு விசில் அடித்து கை தட்ட மட்டுமே முடியும். ஏன் செய்கிறான்? எதற்கு செய்கிறான்? என்று எண்ணி அதற்க்கு ஏற்ப செயல்பட முடியாது. பொம்மலாட்டம் நாடகங்கள் நடத்தி வெள்ளையனை வெளியேற்ற எழுச்சி ஏற்படுத்த முடிந்தது. இன்றோ அதை விட மிக சாதகமான ஊடகங்கள் வந்தும் ஒரு போராட்டம் கூட நடந்தமுடியவில்லை. என்னத்தை பறித்தாலும் நாம் ஊமையாகவே இருக்கிறோம். உன் வீடு தீ பிடித்து எரிகிறது என்று ஒரு நாடக நடிகன் பதறி நடித்து காண்பிக்கிறான். மக்கள் ஆ....அருமை என்று கைதட்டுகின்றனர். என்ன கொடுமை சார் இது? எவ்வளவே நமது மனநிலை. நாம என்ன விதமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று புரியவில்லை. இந்த கட்டுரையை படித்ததோடு போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வளவு பேச வேடியிருந்தது. தலைப்பிற்கு வருவோம்!

என்னடா "வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி" ங்கிற பழமொழியை மாற்றி "வான் பொயிக்காவிடினும் தான் பொய்க்கும் காவிரி" ன்னு எழுதி இருக்கான்னு பாக்குறீங்களா? ஆங்கிலத்தில், “Man makes the environment“ ன்னு ஒரு பழமொழி உண்டு. தன் சூழ்நிலையை மனிதனே தீர்மானிக்கிறான்ன்னு அர்த்தம். ஆமா சார் இன்று இருக்கும் அனைத்து சுற்றுசூழல் பிரச்சனைக்கும் மனிதனே காரணம். காவிரி அதற்க்கு ஒரு நல்ல சான்று. காவிரியில் தண்ணி வரல்லைன்னு போராடுற மனுசங்க, ஏன் வரலை யார் காரணம் அப்படின்னு யோசிக்கிராங்களா? மழை பெய்யல! கர்நாடகத்துல தானி விடலன்னு சாக்கு சொல்றாங்க! உண்மை என்னங்க? இதோ எனக்கு தெரிந்த உண்மைகள் சில!

௧. மேற்கு தொடர்ச்சிமழை காடுகளை மற்றும் சமவெளிக்காடுகளை விவசாயத்துக்காக அழித்தது. அதனால் நின்று மெதுவாய் ஓடை, அருவியாய் வருடம் முழுவதும் வரும் நீர் அரை நாளில் ஓடி பாய்ந்து கடலில் கலக்கிறது. திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி வர காரணம்.

௨. நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகபடியான நீர் தேவை மிகுந்த பயிர்களை (கரும்பு, நெல்) முதலியவற்றை பயிரிட்டது.

௩. நகரப்பெருக்கம், தொழிற்ப்பெருக்கம் முதலியவற்றை ஏற்படுத்தி காவிரியின் ஆரம்பத்திலேயே நீரை உருஞ்சியது.

௪. கண் மண் தெரியாமல் காவிரிகரைகளில் ஆழ் துளை கிணறுகள் அமைத்து நீரை உருஞ்சியது.

௫. போதாததற்கு தொழிற்சாலை கழிவு நீரை, நகர கழிவை தங்கு தடையின்றி ஆற்றில் கலந்தது.


இவைனைத்தையும் செய்ததன் விளைவு.

௧. தஞ்சையில் சம்பா பயிர்கள் நடவில் காய்கிறது. அறுப்பில் நீரில் மூழ்குகிறது.

௨. ஆற்று நீரை உபயோகிக்கும் மக்கள் பல விதமான புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

௩. பயிர்களது விளைதிறன் பாதிக்கப்படுகிறது.

௪. மலைகளில் சமவெளிகளிலும் மண் அரிப்பு ஏற்பட்டு விலைநிலங்கள் பாழாகின்றன.

௫. மேலும் ஆற்றின் ஜீவன் ( Fresh water Ecosystem) கெடுகிறது.

௬. பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.

௭. மருத்துவமனைகள் பெருகி நகரமும் விரிவடைகிறது (உண்மைதானுங்க, யாரவது கொஞ்ச முனைப்பா மருத்துவமைனையை கணக்கில் எடுத்துபாரங்க பாதி நகரமா மருத்துவமனையாத்தான் இருக்கும்).


இப்படி காவிரி நீர் மனிதர்களுக்கு பொய்த்துபோயுள்ளது. நீரிருந்தும் அனைத்தும் பாழ். வான் பொய்ய்யவிடினும், தான் பொய்க்கும் காவிரி என்ற பழமொழியை நாமே உருவாக்கி வருகிறோம். இதற்க்கு மக்களாக ஒன்றிணைத்து தீர்வுகானதவரை நமக்கு விடிவு கிடையாது.


காவிரி ஆற்றின் இன்றைய நிலை பற்றிய சில ஆயிவுபுகைப்பட தொகுப்பினை பின் வரும் இணைப்பில் பார்க்கலாம்.

Fate and facts of காவிரி

http://picasaweb.google.com/ryskhtech/FateAndFactsOfCauvery#5312577839758993698

Noyyal River's Industrial pollution - Indian story

http://picasaweb.google.com/ryskhtech/NoyyalRiverSIndustrialPollutionIndianStory#

Erode's Kalingarayan canal pollution - An unpalatable reality

http://picasaweb.google.com/ryskhtech/ErodeSKalingarayanCanalPollutionAnUnpalatableReality#



இந்த இணைப்பை பார்ப்பதோடு நிற்காமல் உங்களால் முடிந்த நல்ல அளவு இதிலிருந்து மீள வழிவகை செய்யுங்கள்.