Tuesday, 27 April 2010

நீயா-நானா போட்டி!!! இயற்கையை மனிதனால் அடக்கி ஆள முடியுமா?


அனைவருக்கும் வணக்கம்! எல்லாதுக்கும் நமஸ்காரமுங்க!

நேத்தைக்கு விஜெய்தொலைக்காட்சியில் நீயா? நானான்னு? ஒரு விவாதம்நடக்கிறத பார்த்தனுங்க. "அண்ணன்" கோபிநாத் முடிஞ்சவரைக்கும் ரெண்டு பக்கமும்தனது வழக்கமான பாணியில்நழுவிக்கொண்டே இருந்தார். ஆத்துல ஒரு கால், சேத்துலஒரு கால். நமது காங்கிரஸ் ராசாக்கள் மாதிரி. எனக்கு சொஸியலிஸமும்வேணும், காபிடலிஸமும் வேணும்ன்னு நேரு மாமா அடம் பிடிச்ச மாதிரி. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மாதிரி. இந்த பயபுள்ளமன்னிக்கவும் "அண்ணன்" கோபிநாத்து ரெண்டு பக்கமும் ஜால்ரா போட்டபடிஇருக்காரு! என்ன பண்ணுவாறு பாவம்? அவருக்கு அவரது பொழப்பு. யாரையும்பகைச்சுக்க முடியாது. டி.வி. யும் நடத்தனும். அவரு நடுவுனிலைமையோடுபேசுராருன்னு யாரும் நெனச்சுகாதீங்க! அவரு பேசுர மாதிரி பேசினா விஜய்டி.வி. பிசினசுக்கு வேனா ஒத்துவரும். நடைமுறைக்கு ஒத்துவராது. எதாவதுநீதி இருந்துச்சா அங்க? கலைஞர் மாதிரி பேசி முடிசுட்டாரு "அண்ணன்" கோபிநாத்து! அண்ணன் அழகிரி மாதிரி இதுதான் இதுல்லைன்னு பேசுவாரா, அதஉட்டுபுட்டு இயற்கையும் தேவை நவீனமும் தேவைன்னு உடான்சு உடுரார். இதுக்கு சாலமன் பாப்பயாவும், கலைஞரும் தேவல! "அண்ணன்" கோபிநாத்துக்கு வர்ர செம்மொழி மாநாட்டுல "கலைஞர்" விருது கொடுக்கலாம். ரெண்டுமணிநேரம் பேசுனத வச்சு எது நீதியான வாதமுன்னு சொல்லமுடியல! ஒரு நீதியை ஒட்டி, எந்த ஒரு பொது வாத நிகழ்ச்சியின் தீர்ப்பும் இருக்கனம். நீதிபற்றியே இங்கு யாரும் பேசாமல் நடைமுறைக்கு எவ்வளவு ஒத்துவரும்ன்னுகேள்விகேட்டு அதற்கு தக்க முடிவெடுத்தால் தற்போதைய இந்தியா போல்குழப்பம்தான் மிஞ்சும் என்பது நிதர்சனம். ரெண்டு பக்கம்மும் பேசுவதுநடுவுநிலையுமல்ல! நீதியுமல்ல! மழுப்பல்! சந்தர்ப்பவாதம்! மொத்ததில்மக்களை குழப்பி விடவும், அறியாமையில் ஆழ்த்தவுமே இத்தகைய நீதியற்றமுடிவுகள் உதவும். இது வெறும் பொழுதுபோக்கே! இதற்காக தனது பொன்னானநேரத்தை செலவிட்ட இயற்கை விவசாய ஆர்வலர்களை கடிந்துகொள்கிறேன். மேலும், விவாத மேடையில், அரசியல் மேடையில் தீர்ப்பு வழங்குவது போல்நிகழ்ச்சியை முடித்த "அண்ணன்" கோபிநாத்துக்கு எனது ஆட்சேபங்கள்.

நவீன விவசாயமா? இயற்கை விவசாயமா?

இயற்கை விவசாய அணி:

நவீன விவசாயத்தின் ஏகாதிபத்திய வாயிலான தோற்றம், பண்டைய காலஇந்தியாவின் விவசாய அமைப்பு மற்றும் வாழ்க்கை பிணைப்பு, அதன் பிறகுஏற்பட்ட பேராசை சார்ந்த பொருளாதார அமைப்பின் விளைவு முதலியவற்றைஎடுத்து வைக்க முற்பட்டனர் இயற்கை விவசாய அணி. இன்னும் இதன்விளைவுகளை அடிப்படை கோளாறுகளை எளிமையாக விளக்கி இருக்கலாம். ஆணித்தணமாக எடுத்துரைத்திருக்கலாம். அதற்குரிய சந்தர்ப்பத்தை அண்ணன்கோபி வழங்கினாரா? இல்லை இயற்கை அணி சந்தர்ப்பத்தை கோட்டைவிட்டனரா? இல்லை இத்தகைய ஆழ்ந்த விசய ஞானம் இல்லையா? போன்றவைஎனக்கு தெரியவில்லை. எனினும், அனைவருக்கும் எனது நன்றிகள்! வாழ்த்துக்கள்! உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, என்றும் ஒற்றுமையாகஇருங்கள். தொடர்பில் இருங்கள். உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்துஒரு உன்னத பணியாற்றுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

நவீன விவசாய அணி:

இவர்கள் வேறு யாருமல்ல! 1835 ஆம் ஆண்டு "லார்டு மெக்காலே" கண்டகனவை, நனவாக்கிக்கொண்டிருக்கும் பிரிடிஷ் இந்தியாவின் ஒன்பதாம்தலைமுறை. இவர்கள் தேசிய நலன் என்று கூறிக்கொண்டு பாரதத்தின்தனித்தன்மையை அழிக்க முயற்சிக்கும் த்ரோகிகள். இவர்கள் குழப்பத்தில்இருக்கும் அணியல்ல! அறியாமையில் இருக்கும் அணி. அராஜக பாணியைநிகழ்ச்சி முழுவதும் கையாண்டனர். நான் சொல்வேன் நீ கேள் என்ற ஏகவசனத்தை இருவர் மூன்றுமுறை உமிழ்ந்தனர். நான் எஃஸிகுடிவ். நான்சொல்கிறென். அதன் படி நீங்கள் மஞ்சள் பயிரிடுங்கள் என்று ஒருபிதற்றல்வாதி கூற அதற்கு மறுப்பு தெரிவித்த ஆத்தூர் இயற்கை விவசாயி; நீங்கள் வந்து எனது பக்கத்து நிலத்தில் செய்து காட்டுங்கள் என்று கூற! எதற்காக அவ்வாறு கூறினார் என்று தெரியாமல் அண்ணன் கோபிநாத்து குறுக்குகேள்வி கேட்க, அதற்கு அந்த விவசாயி கூறிய பதிலின் சாராம்சம், பின்னனிதெரியாமல் அண்ணன் கோபிநாத்து வினவ, "லார்டு மெக்களே" அணி கெக்கபிக்க என்று சிறுகுழந்தை பாணியில் கொக்கானி காட்ட; இதைக்கண்டு அந்தவிவசாயி நொந்து போனார். அறிவிழந்த மக்களிடையே நல்கருத்தைபேசிவிட்டோமே என்று அந்த நிமிடம் கடிந்து கொண்டிருப்பார். இப்படிப்பட்டஉருப்படாத கூட்டத்தில் கணேசன் என்ற "லார்டு", ஐரோப்பிய பூச்சி மருந்துபுள்ளி விவரங்களை அள்ளி வீசியது. மேலும், தான் ஐரோப்பாவிலிருந்து நேரேவாரேன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டது, விவாத அரங்கின்விதிகளுக்கு மாறனது. மேலும், தவறான புள்ளிவிவரங்களை கொடுத்துசுல்தான் இஸ்மாயிலிடம் மாட்டிகொண்டது, நல்ல பாடம்.

இவர்கள் பேச்சிலும் நாகரிகமற்ற தன்மையை கையாண்டதுமுதலே இவர்களது அநீதியான போக்கு புலப்படுகிறது. உணவுப்பாதுகாப்புவேண்டும் என்று கரைந்த காகங்களை நல்ல விதமாக பதிழட்டிகொடுத்தானர்நியாயமான் அணியினர். வாழ்க்கைமுறை மாறவேண்டும் என்ற நீதியைவியாபார பக்கிகளுக்கு, ஆழமரத்தடியில் வைக்க வேண்டிய விவாத்ததைவடபழனியில் பலபலக்கும் ஜொலிஜொலிக்கும் அரங்கில் எடுத்துறைத்தால்எவ்வாறு ஏறும்? விஜய் டிவி. டீமுக்கு கிராமச்சூழல் அலர்ஜியா? அன்னியவாழ்க்கை முறை, முறையற்ற அநாவிசய வாணிப முறை, ஒவ்வாதபயிரிடுமுறை போன்றவையே இன்றய இயற்கை சீரழிவிற்கு, சமூக, ஆரோக்கிய சீரழிவிற்கும் காரணம் என்ற உண்மையை, நவீனவேளாண்மையாளர்களே உணர்ந்து விட்ட சூழ்நிலையில், "லார்டு மெக்காலே" அணியின் பிதற்றலைக்கண்டு எரிச்சல்தான் வருகிறது.

திமிர்பிடித்த அராஜக பேச்சாளர் நீலகண்டன்:

இப்போதுதான் தலைப்புக்கு வரேன். "லார்டு மெக்காள்லெ" அணியின்அறிவார்ந்த கருத்தாலோசகராக ஒருவர் வந்திருந்தார். Ex. Director நீலகண்டன், Madras Institute of Development Studies (MDIS). உலகை தவறான பாதைக்குஅழைத்துச்சென்றவர்கள், இந்த பொருளாதார கத்துகுட்டிகள். "அர்த்தஸாஸ்திரம்" கொடுத்த பாரத மக்கள், "லார்டு மெக்காலே" வின் சதிக்குபின்பு, அனைத்தையும் மறந்து நீலகண்டன் போன்ற பொருளாதாரசர்வாதிகாரியாகவும் மாறியுள்ளனர். இந்த மனிதரின் பேச்சு "அவதார்" படத்தில்வரும் கொடுமைகளை நினைவுபடுத்தியது. "Development" அதாவதுமுன்னேற்றம்" என்ற ஆங்கில வார்த்தையை கூறி, உலகில் "Development" அடைந்த நாடுகள் அனைத்தும், அனைத்து சிக்கல்களுக்கும் ஆளாகியுள்ளன, இந்தியா விதிவிலக்கல்ல என்றார். மேலும், "மனிதன் பிற உயிரினங்களைபோலல்லாது அனைத்தையும் இயற்கையையும் கட்டுக்குள் கொண்டு வரும்ஆற்றல் படைத்தவன்" என்று கூறி தன் அராஜகத்தை தலைக்கனத்தை, டார்வின், மார்ஃஸ் போன்றோரின் சித்தாந்தத்தை நினைவுபடுத்தினார். "

We didn't achieved development, we have progressed economically; Its nothing but growth; Its not development; Its cancerous; Not wholistic என்று இன்றய மேற்கத்தியஅறியவியல் Economic Growth மற்றும் Development ரெண்டிற்குமான வித்யாசத்தைகண்டுணர்ந்து "we need sustainable economic growth" என்றுகூறிக்கொண்டிருக்கையில் இந்த "முன்னாள்" இயக்குனர் "Development" பத்திடமாரம் அடித்து அதில் இயற்கையை வெல்வோம் என்று கூறியது, அவர்மார்ஃஸ் காலத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டியது. Indians economic theories and books were copied, including with its spelling mistakes என்று ஒருவர்கூறியது மீண்டும் இவர் மூலம் நினைவுக்கு வந்தது. இவர் போன்ற அராஜகம்மிகுந்த, இயற்கை விரோத, கொடூரமான, பொறுப்பில்லாத மனிதர்கள் சிலர்இன்னும் காசுக்காக கைக்கூலி வேலை பார்ப்பதால் மரபணு மாற்றுதொழினுட்பம், கலைக்கொல்லிகள் என்று பல வந்தவண்ணம் உள்ளன.

மனிதனை ஒரு அன்னிய சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது. மனிதன்இயற்கையே! மனித செயல்களும் இயற்கையே! ஆனால், அவன் செயல்களில்இருக்கும் சாத்வீகமும், வக்கிரமுமே அவனை வேறுபடுத்துகின்றன. சாத்வீகமாக பயபக்தியுடன் இருக்கிற சமூகம், ஆக்குகிறது. வக்கிரத்துடன்பயத்திலும், வெறியிலும், லோபத்திலும் மூழ்கிய சமூகம், அழிக்கிறது. நம்மைநாமே அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தேவை. அதை விடுத்துஇயற்கையை அடக்கி ஆள்வோம் என்று கூறுவோரை மனிதர்களாகவேஏற்றுக்கொள்ள முடியாது.

முடிவென்ன?

பயத்திற்கும், பயபக்திக்கும் வித்தயாசம் உண்டு.

பயத்தால், "மனிதன் பிற உயிரினங்களை போலல்லாது அனைத்தையும்இயற்கையையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்தவன்" போன்றபேச்சுக்கள்,இயற்கை விரோத ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் நடக்கும். கடந்தகாலத்தில் 200 வருடத்தில், கண்டுபிடிக்கப்பட்ட பல விசயங்கள் பயத்தலும், போர்க்காலங்களில்ளும், அறியாமையலும் நிகழ்ந்தவையே. சுருக்கமாகசொன்னால், "விநாச காலே விபரீத புத்தி". ிி

பயபக்தி என்பது பயத்தை நீதியின் (தன்னை வாழ் வைப்பன, காப்பனஎ.கா.முன்னோர்கள்,மண்,நதி,சமுத்ரம்,மரம்,தான்யம், பசு முதலியன) மேல்வைத்து அதனை காத்து வாழ்வது. பயபக்தியால் இயற்கை காக்கப்படும். அதனால், இயற்கை விவசாயம் செய்தால் உணவுப்பற்றாக்குறை வரும் என்றஅச்சம் தவிர்த்து இயற்கை வளங்களை பயபக்தியுடன்பாதுகாக்கத்தொடங்கினால், ப்ரதேச வாழ்க்கைமுறைகளை கடைபிடித்தால் எந்தகெடுதலும் நடவாது. இதனை, மக்கள் உணர்வது என்னாளோ????


10 comments:

 1. இந்த காணொளியை பார்த்தேன். உங்கள் கருத்தென்ன?

  அதாவது இயற்கை விவசாயத்தை கொண்டே exponential-ஆக வளர்ந்து வரும் மக்கட்தொகைக்கு உணவளிக்க இயலுமா?

  ஆதாரத்துடன் விளக்குங்களேன்.

  ReplyDelete
 2. Well written Yuva.. actually, before we debate on nature vs modern (Naveenam), we need to understand what it means..

  Actually in the name of "Modern", the artificial, pesticide and exploitative farming is introduced and it became a defacto meaning.. but modern literally means according to present times..

  Modern can encompass natural & sustainable farming..

  So its not a question of nature vs modern.. rather, natural, self-sustainable farming Vs artificial, exploitative farming..

  Modern is irrelevant here..

  ReplyDelete
 3. Pradeep...

  உலகம் தட்டையானது என்று அவர் கூறினார் என்பதை வைத்து பிழைப்பு நடத்த ஒரு கூட்டம் படைபலத்தொடு தயாராக உள்ளது என்பது புலனாகியது. சிந்திக்கத்தெரியாத "மெக்காலே" ஜீவிகள். விவாத முடிவு மக்களைக்குழப்பும், திசைதிருப்பும் நாடகம்.

  ReplyDelete
 4. அதாவது இயற்கை விவசாயத்தை கொண்டே exponential-ஆக வளர்ந்து வரும் மக்கட்தொகைக்கு உணவளிக்க இயலுமா?

  Pradeep......

  தற்போதைய பொருளாதார, சமூக-பழக்கவழக்க முறையைக்கொண்டு எந்த விவசாயம் செய்தாலும் உணவளிகக் முடியாது.

  பகுதிபகுதிகளாக இந்தியாவை பிரித்து பிரதேச விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். பிரதேச தற்சார்பை கொண்டு வர பாடுபட வேண்டும். விவசாயத்தில் உடல் உழைப்பு கலாச்சாரம் பெருக வேண்டும். இல்லையேல், பெருகி வரும் மக்கள் தொகை தரமற்ற உணவுகளால் வியாதிகள் பீடித்தும், உணவின்றியும் அழிவார்கள்.

  Source: Quality of Indian Village culture and Quality of today's city culture(Universal).

  ReplyDelete
 5. Modern can encompass natural & sustainable farming..

  @Senthil

  Exactly told.... but, since it is undebated topic in public for long time, it was debated erratically in that show.

  ReplyDelete
 6. Farmers in every part of the world are having their own troubles. I dont know if Neelakantan has ever spoken to a farmer in USA or Europe. I suppose he doesn't know what an ordinary citizen in Europe thinks of our lifestyle. When poeple in europe are going towards organic food and lifestyle he is saying he has just now come down from Europe and reporting bla bla bla..... Utter nonsense. The our very oen PB (Once CPMB dir. I dont know what he is doing now.) He is also a coolie for hybrid seeds company. These are the people who should watch american documentaries like Food Inc., Thirst etc., and should know what farmers and common people in this part of the world are undergoing. I dont understand what kind of doctrates are these guys? Please an request to all of them who spoke.... Read and know a lot. Judgement will follow on its own.

  ReplyDelete
 7. //அதற்கு மறுப்பு தெரிவித்த ஆத்தூர் இயற்கை விவசாயி; நீங்கள் வந்து எனது பக்கத்து நிலத்தில் செய்து காட்டுங்கள் என்று கூற! எதற்காக அவ்வாறு கூறினார் என்று தெரியாமல் அண்ணன் கோபிநாத்து குறுக்குகேள்வி கேட்க,//


  எனக்கு விவசாய பின்னணி இல்லாததால் எனக்கும் புரியவில்லை நண்பா. நேரமிருந்தால் சுருக்கமாக விளக்குங்கள். உங்கள் ஆதாரங்கள் மின்னஞ்சலில் கிடைத்தது. நன்றி!

  ReplyDelete
 8. ///எனக்கு விவசாய பின்னணி இல்லாததால் எனக்கும் புரியவில்லை நண்பா. நேரமிருந்தால் சுருக்கமாக விளக்குங்கள். ///


  ஆத்தூர் இயற்கை விவசாயி தான் ஏழு வருடங்களாக மஞ்சள் சாகுபடி செய்வதாக கூறினார். குறைந்த செலவில் ரசாயனமில்லாமல் விளைச்சல் குறைவாக தரும் ஆத்தூர் மஞ்சளில் 30 குவிண்டால் எடுப்பதாக கூறினார். ரசாயனம் போட்டு செய்யும் போது 25 குவிண்டால் எடுப்பதே கடினம் என்றார். மேலும், எதிரணியினரை சவாலுக்கு அழைத்தார். அதற்கு தர்யாரென்று கூறிய வால்ட்டர் என்பவர், நாங்கள் சொல்வது போல் உங்கள் பண்ணையில் செய்ய வேண்டும் என்றார். அதற்கு ஆத்தூர் விவசாயி, நான் செய்ய மாட்டேன் நீங்கள்தான் செய்ய வேண்டும், அதுவும் எனது பக்கத்து தோட்டத்தில் செய்ய வேண்டும் என்றார். அது ஈன நீங்கள் செய்ய மாட்டீர்கள், பக்கத்து தோட்டத்தில் செய்ய சொல்கிறீர்கள் என்று கோபி வினவ, அதற்கு அவர் எனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதால் இவர்கள் கொடுக்கும் ரசாயனம் உரம் நல்ல விளைச்சல் கொடுத்து விடும் என்றார். அதற்க்கு கெக்க பிக்க வென்று சிரித்தனர் எதிரணியினர்.

  அவர் கூறிய பின்னணி, சவாலுக்கு தயார் எனது ஊரில் எங்கள் ரகத்தில் ரசாயனம் போட்டு விவசாயம் செய்யும் பண்ணையில் நீங்களே செய்ய வேண்டும் என்றார். தனது பண்ணையில் இயற்கை விவசாயம் செய்ததால் ஏற்பட்டுள்ள நல்ல மண்கண்டம், முதலில் நல்ல விளைச்சல் கொடுக்கும் என்பதாலும், ரசாயனம் தனது நிலத்தை கெடுக்கும் என்பதாலும் அவர் தனது பண்ணையில் செய்ய முடியாது பக்கத்து பண்ணையில் செய்யுங்கலேன்றார்.

  இதற்கு சிரித்தனர் கோபிநாத்தும் புரியாமல் கேள்விகேட்டார். இதற்கு சிரிப்பதற்கு என்ன இருக்கின்றது என்று நொந்து கொண்டார் விவசாயி.

  ReplyDelete
 9. பிரதீப்பின் கேள்விக்கு விவாதத்திலேயே பதில் இருந்தது.. ஒருவர் தனது நிலத்தில் முதல் முறை ரசாயன உரங்கள் கொண்டு விவசாயம் செய்தபோது லாபம் கிடைத்தது பற்றியும், நான்கே வருடத்தில் முதல் வருட மகசூலில் பாதிகூட கிடைக்காததையும் சொன்னார்.. அதுதான் பதில்.. இயற்கை விவசாயம் செய்து பண்பட்ட நிலத்தில் இன்று வரும் ரசாயன விவசாயி சவாலுக்கு அந்த வருடம் நல்ல மகசூல் காட்ட முடியும்.. ஆனால் மறு வருடத்துக்கு அந்த நிலம் பாழ் பட்டுபோகும்..
  அரும்பாடு பட்டு பண்படுத்திய நிலத்தை சவாலுக்காக பாழ் படுத்த முடியாது.. வீம்புக்கு வீணாகப்போக முடியுமா..

  நீலகண்டனின் முட்டாள்த்தனத்துக்கு ஒரு உதாரணம்..
  பனி படர்ந்த மலைகளிலும் கடலின் அடியிலும் மனிதனால் சமாளிக்க முடியும். யானையால் முடியுமா என்றார்.. என்ன கோமாளித்தனமான ஒரு உதாரணம்..
  சென்று வருவதற்கும் அங்கேயே வாழ்வதற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை..
  யானைக்கும் நல்ல கம்பளி போர்த்தினால் இமயத்தில் அது தாக்குப்பிடிக்காதா.. மனிதன் வெற்றுடலுடனோ, சாதாரண உடைகளுடனோ அங்கு சென்று வர முடியுமா.. என்ன அபத்தம்..

  ReplyDelete
 10. முதல் முறையாக தங்களது வலைதளத்திற்கு வந்தேன். அருமையான தகவல்கள் கண்டு மகிழ்ந்தேன். தங்களது முயற்ச்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  என்னுடைய விவசாயம் பற்றிய தளம் agasool.blogspot.com

  விஜய்

  ReplyDelete