Saturday 31 January 2009

உணவு ஏற்றுமதி-இறக்குமதி தேவையா?



எல்லாத்துக்கும் நமஸ்காரமுங்க!

நமஸ்காரம்கிறது தமிழ் இல்லைன்னு யாரும் கருப்பு, சிவப்பு கொடி புடிச்சிடாதீங்க! சரி நாம தலைப்புக்கு வருவோம். எல்லாம் காலகொடுமைங்க! இந்த மாதிரி தலைப்பு எல்லாம் பேச வேண்டிஇருக்கு. ஒரு காலத்துல வாணிகம் செய்றவங்க பொன், மாணிக்கம், மரகதமுன்னு பல அறிய வகை பொருட்களைத்தான் ஏற்றுமதி இறக்குமதி செய்வாங்க! இப்ப எல்லாம் நம்ம ஊரு படமட்டை முதல் மாம்பழம் வரை கூட ஏற்றுமதி ஆகுது. எல்லாம் ரொம்ப சீக்கிரமா சென்றடையும் வசதி இருப்பதால் எல்லாம் நடக்குது. முன்னைஎல்லாம் கடல் பயணம்கிறது திரும்பாபயணமா இருந்துச்சு. ரோமானியர்கள் அரபிகடலை தாண்டிவரும்போது ஓட்டை உடைசல் பலகைகளை பிடித்துகொண்டு இறங்கிய காலமுண்டு. இன்று அப்படிப்பட்ட கஷ்டங்கள் இல்லை. எரிவாயு, திரவ எரிபொருள் போன்றவை மிக எளிதாக கிடைப்பதால் அதை எங்குவேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்பதால் மனிதனுக்கு அவனது ஆசைக்கு ராஜபோக வாழக்கைக்கு எல்லையிலாமல் அடிப்படையான உணவு முதல் ஆடம்பர உணவுவரை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறோம். அதில்பொருலாதார தடை, தரம் என பல விதிமுறைகள்.

சூரியன் - இவர்தான் பூமியின் உயிர்களுக்கு சக்தி கொடுப்பவர். உலகில் உணவு என்பதே சூரியனின் பார்வையால்தான் உற்ப்பத்தியாகிறது. துருவ நாடுகளில், அதனை ஒட்டியுள்ள நாடுகளில், பாலைநிலங்களில் வாழும் மக்களுக்கு சூரியனின் கருணை கொஞ்சம் குறைவு. உணவு உற்பத்தி குறைவாக இருக்கும் . அதனால் பஞ்சம் பட்டினி என்பது அடிக்கடி நிகழும் வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்போது நாடோடிகலாகும் மக்கள் கூட்டம். அதுவும் மக்கள் தொகை அபரிதமானால் சொல்லவே வேண்டியதில்லை. இப்படித்தான் நடந்தது ஏகாதிபத்திய நாட்களுக்கு முன். ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை பெருக்கம், உணவு உற்பத்தி குறைவு, நோய், முதலான காரணங்களால் அங்கிருந்த அரசர்களுக்கு பிறநாடுகளின் மீது படையெடுத்து மக்களுக்கு செல்வத்தை உணவை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. விளைவு, கடல் பயணங்களில் பல நிலங்களை (இன்றைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க, ஆசிய என புகுந்தனர்) பல நாடுகளில் குடியேறினர். உள்ளூர் வாசிகளை ஒழித்தனர். உருளைக்கிழங்கை முதலில் கண்டுபிடித்து ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். குதிரைக்கும் மக்களுக்கும் உணவானது. பல அரியவகை உணவுகளை (தேயிலை, காபி, கரும்பு சர்க்கரை ) என பலவற்றை அடிமைகளை கொண்டு உற்பத்தி செய்து (ஏகாதிபத்திய) நாடுகளிலிருந்து கொண்டு சேர்த்தனர். செல்வத்தை பெருக்கினர். சுகமாக வாழமுற்ப்பட்டனர். ஆனால் மக்களுக்கு எல்லாம் தங்குதடையின்றி கிடைத்ததால் தொகை பெருகியது. அதற்க்கு விவசாயத்தை பெருக்கினர். அறிவியலில் பல சாதனங்களை கண்டுபிடித்து உணவு உறப்பத்தியை செயற்கையாக பெருக்கினர். இப்படி இருக்கையில், நிலத்தடி எரிபொருள் கண்டுபிடித்தது மிகவும் சாதகமாகி உலகம் முழுவதும் தொழிநுட்பம் சார்ந்த வளர்ச்சி என்று கூறி ஏகாதிபத்தியத்தை பொருளாதார தொழிநுட்ப ஏகாதிபத்தியமாக மாற்றி விட்டனர்.


இந்த செயற்கையான பொருளாதாரமும், தொழினுட்பமும் படைத்த சாதனை மக்கள் தொகை பெருக்கம். அதுவும் உலக அளவில்.

ஒருகாலத்தில் ஒழைக்கிற குடியானவனை பார்த்தால் எதுக்கு இப்படி மாடா ஒழைக்கிரீங்கன்னு கேட்டா, எல்லாம் கால்வயிறு சோத்துக்குதான் ன்னு பதில் வரும். இன்னைக்கு எவன் ஒழைக்கிறான்? எல்லாம் காசு சேர்ப்பதிலேயே குறியா இருக்கிறான். எப்படி எத அழிச்சு எத ஏற்றுமதி பண்ணி எப்படி பணக்காரனாவது. எப்படி வங்கி கணக்கா பெருக்கிரதுன்னுதான் குறியா இருக்கிறான். கஷ்டப்படாம சோறு திங்கனுன்னு நினைக்கிறான்.

ஊறுகாய ஐரோப்பிய ஆடம்பரத்துக்கும், அவன் கொடுக்கும் டாலருக்கும் ஏற்றுமதி பண்றோம், இவன் தேயிலை பானம் அருந்த இங்க காட்டை அழிக்கிறோம். இவன் மாம்பழம் தின்ன அங்க இருக்கிற மானாவாரி நிலங்களில் ஓட்டை போட்டு நெறி உறிஞ்சி இவன் கொடுக்கிற சொட்டு நீரையும் போட்டு இவனுக்கு ஏற்றுமதி பண்ணுறோம். மாபழம் திங்கலைன்ன, டீ குடிக்கலைன்னா செத்தா போயிடுறான். எல்லாம் இவனது ஆடம்பர வாழ்க்கைக்கு நாம நம்ம இயற்க்கை செல்வங்களை அடகு வைத்து வேலைசெய்கிறோம். ஆக மொத்தம் நாம் இவனது அடிமைகள். அப்புறம் இவன் பின்தங்கிய நாட்டுக்கு நிதியுதவின்னு புரளி பேசி ஐ.நா. சபை உலக வங்கின்னு ஏற்படுத்தி பிச்சை போடுவான். அதுல நம்ம கோமண உருவி அரசியல்வாதிகள் செத்த பணத்தில் போடும் வாய்க்கரிசியில் பங்கு கேட்பவர்கள் பலவற்றை சுரண்டி சுவிஸ் வங்கி கணக்கில் முடக்கி, பிறகு இருக்கும் கொசுறை வைத்து ஏதாவது செய்து விட்டு போலி அறிக்கை த்யார் செய்து அடுத்த செட்டில்மண்டுக்கு ரெடி பண்ணிடுவான்.

எப்படியோ ஆரம்பிச்ச ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் இன்று உலக பொருளாதாரம், உலக உணவு ஏற்றுமதி -இறக்குமதி ன்னு போய் இணைய வர்த்தகம் வரைக்கும் போய்டிச்சுங்க. எல்ல்லாம் காலக்கொடுமை. ஒன்னும் சொல்றதுக்கில்ல. நம்ம இயற்க்கை வளங்களை அதாவது நம்ம நிலங்கள் இன்னும் அடுத்த தலைமுறைக்கு சோறு போடும் வகையிலாவது விட்டுவிட்டுப்போவனம். எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா இந்த சந்ததியிலேயே அழிச்சிபுடகூடாது.

காலம் வருந்துங்க! ரொம்ப சீக்கிரமா வருது! ஊர் ஊருக்கு அங்கங்க உற்பத்தி செய்து தின்பதை மக்கள் ஏற்க்க்ப்போகிறார்கள். இந்த உணவு இறக்குமதி-ஏற்றுமதி வேலையையெல்லாம் நிறுத்த வேண்டும் மக்கள். அட உணவு இறக்குமதிங்கிறது, ஆந்திராவிலேர்ந்து அரிசியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து சாப்பிடருதும்தான். நாட்டை விட்டு நாடு போறது மட்டுமில்ல. தேவைக்கு ஏற்ப உற்பத்தி பண்ணி கொஞ்சம் சேமித்து சாப்பிடும் பழக்கம் வர வேண்டும். இந்த உணவு ஆடம்பரம் குறைய வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்தமாக அனைவரும் பட்டினிசாவை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும்.


3 comments:

  1. Yuva .. Nicely and correctly said... 100% I agree to this. But with out an proper Governing system what can we do for this ... ?

    ReplyDelete
  2. ஏனுங்க.. ஒரு காச்சல் தலைவலின்னு டாக்டர்கிட்ட போனா கொறஞ்சது 200 ரூபாயாவது வேணும்.. அரசாங்க பள்ளிக்கூடத்துக்கே பசங்கள படிக்க அனுப்புனா கூட, நோட்டு புக்கு, புஸ்தகம், அது இதுன்னு காசு தேவபடுது..
    பயணத்துக்கு சாதாரண டி.வி.எஸ் வாங்குனா கூட, மாசத்துக்கு கொறஞ்சது 500 ரூபாயாவது வேணும்..
    அப்படி இருக்கும்போது சம்பாதிக்காம எப்படிங்க இருக்க முடியும்..

    ReplyDelete
  3. உணவு ஏற்றுமதியில் லாபம் உள்ளதா?
    ஆர்.எஸ். நாராயணன்
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=490115&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE?

    ReplyDelete