Friday, 23 January 2009

இறக்குமதியாகும் வறட்சி
அனைவருக்கும் வணக்கம்,

நீர் என்பது வாழ்விற்கு எவ்வளவு ஆதாரமான விஷயம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், அத்தகைய நீர் இன்று பல விதங்களில் முக்கியமாக மனிதனின் பேராசைக்காக விரையமாகப்படுகிறது. ஒரு பக்கம் நீராதாரங்களை அழிக்கிறோம். காடுகளை அழித்தல், அளவுக்கு அதிகமாக விவசாய நிலங்களை நீர்பிடிப்பு பகுதிகளில் விரிவு படுத்தல், நிலத்திற்கும், நீர் அளவுக்கும் ஒவ்வாத நீர் தேவை மிகுந்த பயிர்களை பயிர்இடுதல் என பல முறைகளில் நீராதாரங்களை அழிக்கிறோம். அதோடு நில்லாமல் நகரமயமாக்கம் என்ற பெயரில் ஒழுங்கான நிர்வாகம் இல்லாத தன்மையால் நீரிணை விரையம் செய்கிறோம். பல் துலக்கி இரவு உறங்கும் வரை பல வழிகளில் வீட்டிலேயும், அலுவலகங்களிலேயும் மற்ற பிற இடங்களிலும் நீர் விரையமாகிறது. சேமிப்பு என்பது சிறிதும் கிடையாது. நீருக்கும், அதன் உபயோகத்திற்கும் சரியான மதிப்பீடு இல்ல்லாததால் அதன் விலை நமக்கு தெரியவில்லை. நீர் என்பது இயற்கையின் வரப்பிரசாதம் அதற்க்கு யாரும் விலை சொல்ல முடியாது, என்பது போன்ற வாதங்களை கேட்டாகிவிட்டது. நீரென்பது வரபிரசாதமே! ஆனால் அதற்க்குஎன ஒரு விலையுண்டு. “Something will never comes out of nothing“ என்பது போல, நீரென்பது தானாக வந்து விடுவது கிடையாது. இயற்க்கை ஆதாரம் அது. நாம் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதன் மட்டுமே அதனை உரிமை கொண்டாட முடியாது. நீரிணை தவறாக உபயோகப்படுத்துவது, மனிதனின் சுய நலத்திற்கு மட்டுமேபயன் படுத்துவது, பேராசைக்காக பயன் படுத்துவது போன்றவை, முக்கியமாக மேற்சொன்ன உபயோகங்களுக்கு எந்த வித மதிப்பும் இடாமல் இலவசமாயி பயன் படுத்துவதால் இன்று ஏற்ப்பட்டுள்ள விளைவுகள் ஏராளம்.

இன்று நமக்குள்ளும் (இந்தியாவிற்குள்) உலக அளவிலும் ஏற்ப்பட்டுள்ள உணவு பழக்க வழக்க மாற்றம் நமது நீராதாரங்களை அழிக்கிறது என்று கூறினால் யாரேனும் நம்புவீர்களா? ஆம், ஒரு தலைமுறையில் இந்தியாவில் இருக்கும் அனைவரும் அரிசி, கோதுமை காலாச்சாரத்திர்க்கும், பணப்பயிர் செய்து ஏற்றுமதி என்ற கலாச்சாரத்திற்கும் மாறியதன் விளைவு இன்று இந்தியா முழுவதும் நீர்த்தேவை பன்மடங்கு அதிகரித்து கடுமையான பஞ்சத்தின் பிடியில் இருக்கிறோம்.

உழவன் சூழ்நிலைக்கும் நீரிருப்புக்கும் ஏற்ப உணவு உற்ப்பத்தி செய்து வந்த வேளையில்இந்த பஞ்சம் இருந்ததில்லை. பெரும்வாரியாக மானாவாரியாக பயிர்களை விளைவித்தும், அரு சில இடங்களில் குளம் - கிணறு, ஆறு முதலிய நீராதாரங்களை கொண்டு விளைவதை விளைவித்து உண்டு வந்தோம். மேற்க்கத்திய விவசாயம் புகுந்தவுடன் லாபநோக்கான விவசாயத்தில், உணவு உற்பத்தி பெருக்கம், ஏற்றுமதி, தொழிநுட்பம் என்ற பெயரில் நமது நீராதாரங்களை தவறாக கையாட்டுவிட்டோம். பெரும்பாலானோர் அரிசி உணவிற்கு மாறியதன் விளைவு நீர்த்தேவை அதிகமான அரிசியை எங்கும் பயிரிட ஆரம்பிக்க விளைவு நீர் விரையம். பணத்திற்காக கரும்பினை மானாவாரி நிலங்களில் பயிரிட ஆரம்பித்தோம். இப்படி பல இடங்களில் இயற்க்கைக்கு ஒவ்வாத பல முறைகளை கையாண்டு வருகிறோம். அத்தோடு நில்லாமல் நீர் நிர்வாகத்தை அரசுமயமாக்கி மக்களுக்கு நீரின் முக்கியத்துவம் பற்றி அறியாமல் செய்து விட்டோம். நீரின் அருமையை சமூக நீண்டநாளைய பயன் அடிப்படையில் ஒருவரும் உணரவில்லை. இதன் விளைவு மிக மோசமாக இருக்கும். இன்று பல மேலை நாடுகளில் நீரின் உபயோகத்தை அதன் மதிப்பை சரியாக கணக்கிட்டு பொருளாதார உற்ப்பத்தியில் சேர்க்க முயல்கிறார்கள். அப்படிப்பார்க்கும்போது, நீர்த்தேவை அதிகம் மிகுந்த பயிரினை பெரிய அளவில் ஒரு பகுதியோ, நாடோ உற்பத்தி செய்து பிற பகுதிகளுக்கு முக்கியாக பெருநகரங்களுக்கு அனுப்புமாயின் அந்த நாடோ பகுதியோ வறட்சியை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்கள். இப்படி இறக்குமதி செய்து மனிதனின் ஆடம்பர தேவைக்கு உற்பத்தி செய்யயப்படும் உணவுகள் இயற்க்கை ஆதாரங்களை அழிப்பதால் இவை ஏற்றுமதி செய்து பெரும் காசைக்காட்டிலும் மிகவும் மோசமான சிதைவை அடைவதாக கூறுகிறார்கள். அந்நாடு வறட்சியை விலைகொடுத்துவாங்குகிறது , அதன் எதிர்காலத்தை இப்போது விற்க தொடங்கி விட்டது என கூறுகிறார்கள் நவீன பொருளாதார நிபுணர்கள். „Virtual water trade“ என்ற முறையில் இத்தனை குறிப்பிடுகிறார்கள். இது பற்றிய குறும்படம் ஒன்று கீழ் இணைக்கப்பட்டுள்ளது.


„For every action there is an equal and opposite reaction“ பருப்பொருள் உலகில் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு வளையம் போல். ஒரு வளையத்தின் ஒரு இடத்தை சூடுபடுத்தினால் எதிர்ப்பகுதிக்கு சூடு பரவுவதுபோல், உலகில் எந்த ஒரு செயலுக்கு எதிர் விளைவு உண்டு. அது உடனேயும் தெரியலாம் பல வருடங்களோ, நூற்றாண்டுகளோ கழித்து தெரியலாம். அது போலவே, இன்று நாம் செய்து வரும் நீர் முறைகேடுகளுக்கு நாளைய பலனை அனுபவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment