Monday 26 January 2009

குடியரசு தினம் என்னும் சடங்கு



அனைவருக்கும் வணக்கம்,

சும்மா பார்மாலிட்டிக்கு குடியரசு தின நாள் நல்வாழ்த்துக்கள். என்ன பாக்குறீங்க! என்ன தேச துரோகின்னு திட்டிடாதீங்க! குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய ஒருமைப்பட்டு தினம், கொடி நாள், இப்படி பல சடங்குகள் இந்தியா என்னும் தேசியத்தில் உண்டு. இந்தியாவில் உள்ள பல கலாச்சார சடங்கு சம்பிரதாய பண்டிகைகளை போலவே இந்த தேசிய தினம்களும். உலகமயமான தேசியத்தில் கலாச்சார பண்டிகை நாட்களும், தேசிய தினங்களும் அதன் உற்சாகத்தை இழந்துவிட்டன. இவை வெறும் விடுமுறை நாட்கள் அவ்வுளவே! அதைத்தாண்டி வேறுஎதுவும் இருப்பதாக தோன்றவில்லை.


இந்திய என்னும் தேசியம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நிலைத்து நின்றுவிட்டது! வெளிப்போக்கிற்க்கு? உள்ளே(மக்கள் மனதில்) என்றோ நீங்கி விட்டது. மக்கள் மனதில் உள்ள தேசியம், குடியரசு என்பது நாட்டை ஆளும் பிரதமர், குடியரசுத்தலைவர், அதற்க்கு கீழுள்ள மந்திரிகள். தாங்கள்தான் குடியரசின் ஆதாரங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து நீங்கி விட்டதா? அல்லது நீக்கப்பட்டு விட்டதா? என்ற கேள்வி பல நாட்களாக என் மனதில் உண்டு.


1990 வரை அனைத்திற்கும் அரசை எதிர்பார்த்தோம், அதன் பிறகு அரசு சார தனியார் நிறுவனங்களை எதிர்பார்த்திருக்கிறோம். இப்படி எதற்கும் பிறரையே எதிர்பார்க்கும் நாட்டு மக்களை குடியரசு நாட்டு குடிமக்கள் என கூறுவதற்கு என் நா கூசுகிறது. மக்கள் சக்தி என்பது இந்த நாட்டில் கிடையாது. சமூகம் கட்டமைப்பு என்பது சிறிய அளவில் இருந்தால் மக்களின் பலம் அதிகரிக்கும். சமூக கட்டமைப்பு என்பதே பல கோடி பேரை கொண்ட மொழி, இன, மாநில, தேசியவாத குழுக்களாக, ஒற்றைகால் விரலில் நிற்கும் பயில்வான் போல உள்ளது. பயில்வான் போல ஒரு போக்கு காட்டி நாங்கள்தான் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு என்று கூறிக்கொண்டு, நம் பலவீனங்களை சரிசெய்துகொள்ளாமல், வெறும் பொருளாதாரா கணக்கு காட்டி உலகையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி வருகிறோம்.

விரைவில் அமெரிக்க நிதிநெருக்கடி போல, நமது நெருக்கடிக்குட்டுகளும் வெளிப்படும். இந்திய குடியரசு என்பது கேள்விக்குறியாக்கப்படும். மக்கள் மீண்டும் ஒரு குடியரசை கிராமங்களில் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஓங்குக மக்களின் அறிவு! தழைக்க மக்களின் நீதி! வாழ்க கிராமிய குடியரசுகள்!


2 comments:

  1. ஒரு பக்கம் மேற்கத்திய நாகரீகத்திற்கும் மறுபக்கம் மனிதாபிமானம் அற்ற சுழ்நிலைக்கு வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் குடியரசு தினம் என்பது வெறும் விடுமுறை நாளே... இந்நிலை மாறுவதும் வெகு கடினமே... "இயற்கை தன் பொறுமையை இழக்கும் வரை"!!!

    ReplyDelete
  2. செல்வம்,அறச்சலூர்Wednesday, January 26, 2011 5:28:00 pm

    ஜான் பெர்கின்ஸ்-ன் புதுப் புத்தகம் ' அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு'படித்தால் உலகில் உள்ள குடியரசுகள் மீது 'நல்ல நம்பிக்கை' வரும்.
    படியுங்கள்.

    ReplyDelete