Thursday 19 April 2012

கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம்


கீழிருக்கும் இரண்டு செய்திகள் இரண்டும் கல்விதுறை சம்பந்தமானது. ஏற்க்கனவே இந்த கல்விமுறை உருப்படாத கல்விமுறை என்று பலரும்., பலமுறை விவாதித்துகொண்டிருக்க இதில் நடக்கும் ஒழுங்கீனங்களும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் வேறுவிதமாக இருக்கிறது. படிக்கும் போது பள்ளியில் காப்பியடித்து பாஸ் ஆகி பின்பு கல்லூரிகளில் தற்கொலை செய்துகொள்வதற்கா படிக்க வேண்டும். 

திருவள்ளுவர் அதனால்தான் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பத்து பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கத்தை கற்றுத்தரும் பள்ளிகள் வியாபார கேந்திரங்களாக மாறிய பிறகு இன்றைய தலைமுறையின் எதிர்காலத்தை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் தேடிக்கொண்டிருக்கிறோம். 

ஒரு சோறு பதம் 
தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.......more

தற்கொலையை தடுக்க 20 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர்: கல்வியாளர்கள் யோசனை
 உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, 20 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர் என்ற வீததில் அந்தந்த கல்லூரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் யோசனை தெரிவிதுள்ளனர்
 "பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் கிராமப்புற மாணவர்கள், உயர் படிப்புகளில் சேரும்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக தமிழ் வழியில் படிது வரும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்........more

நன்றி : தினமணி 

No comments:

Post a Comment