Friday, 13 March 2009

"வான் பொயிக்காவிடினும், தான் பொய்க்கும் காவிரி"
இந்த கட்டுரையை படிக்கும்அனைத்து துப்பில்லாத, சொரணகெட்ட ஆசாமிகளுக்கு வணக்கம். நம்மால் எவனாவது அற்புதமாக படம் காட்டினால், வன்மையாக சாடினால் அவர்களுக்கு விசில் அடித்து கை தட்ட மட்டுமே முடியும். ஏன் செய்கிறான்? எதற்கு செய்கிறான்? என்று எண்ணி அதற்க்கு ஏற்ப செயல்பட முடியாது. பொம்மலாட்டம் நாடகங்கள் நடத்தி வெள்ளையனை வெளியேற்ற எழுச்சி ஏற்படுத்த முடிந்தது. இன்றோ அதை விட மிக சாதகமான ஊடகங்கள் வந்தும் ஒரு போராட்டம் கூட நடந்தமுடியவில்லை. என்னத்தை பறித்தாலும் நாம் ஊமையாகவே இருக்கிறோம். உன் வீடு தீ பிடித்து எரிகிறது என்று ஒரு நாடக நடிகன் பதறி நடித்து காண்பிக்கிறான். மக்கள் ஆ....அருமை என்று கைதட்டுகின்றனர். என்ன கொடுமை சார் இது? எவ்வளவே நமது மனநிலை. நாம என்ன விதமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று புரியவில்லை. இந்த கட்டுரையை படித்ததோடு போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வளவு பேச வேடியிருந்தது. தலைப்பிற்கு வருவோம்!

என்னடா "வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி" ங்கிற பழமொழியை மாற்றி "வான் பொயிக்காவிடினும் தான் பொய்க்கும் காவிரி" ன்னு எழுதி இருக்கான்னு பாக்குறீங்களா? ஆங்கிலத்தில், “Man makes the environment“ ன்னு ஒரு பழமொழி உண்டு. தன் சூழ்நிலையை மனிதனே தீர்மானிக்கிறான்ன்னு அர்த்தம். ஆமா சார் இன்று இருக்கும் அனைத்து சுற்றுசூழல் பிரச்சனைக்கும் மனிதனே காரணம். காவிரி அதற்க்கு ஒரு நல்ல சான்று. காவிரியில் தண்ணி வரல்லைன்னு போராடுற மனுசங்க, ஏன் வரலை யார் காரணம் அப்படின்னு யோசிக்கிராங்களா? மழை பெய்யல! கர்நாடகத்துல தானி விடலன்னு சாக்கு சொல்றாங்க! உண்மை என்னங்க? இதோ எனக்கு தெரிந்த உண்மைகள் சில!

௧. மேற்கு தொடர்ச்சிமழை காடுகளை மற்றும் சமவெளிக்காடுகளை விவசாயத்துக்காக அழித்தது. அதனால் நின்று மெதுவாய் ஓடை, அருவியாய் வருடம் முழுவதும் வரும் நீர் அரை நாளில் ஓடி பாய்ந்து கடலில் கலக்கிறது. திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி வர காரணம்.

௨. நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகபடியான நீர் தேவை மிகுந்த பயிர்களை (கரும்பு, நெல்) முதலியவற்றை பயிரிட்டது.

௩. நகரப்பெருக்கம், தொழிற்ப்பெருக்கம் முதலியவற்றை ஏற்படுத்தி காவிரியின் ஆரம்பத்திலேயே நீரை உருஞ்சியது.

௪. கண் மண் தெரியாமல் காவிரிகரைகளில் ஆழ் துளை கிணறுகள் அமைத்து நீரை உருஞ்சியது.

௫. போதாததற்கு தொழிற்சாலை கழிவு நீரை, நகர கழிவை தங்கு தடையின்றி ஆற்றில் கலந்தது.


இவைனைத்தையும் செய்ததன் விளைவு.

௧. தஞ்சையில் சம்பா பயிர்கள் நடவில் காய்கிறது. அறுப்பில் நீரில் மூழ்குகிறது.

௨. ஆற்று நீரை உபயோகிக்கும் மக்கள் பல விதமான புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

௩. பயிர்களது விளைதிறன் பாதிக்கப்படுகிறது.

௪. மலைகளில் சமவெளிகளிலும் மண் அரிப்பு ஏற்பட்டு விலைநிலங்கள் பாழாகின்றன.

௫. மேலும் ஆற்றின் ஜீவன் ( Fresh water Ecosystem) கெடுகிறது.

௬. பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.

௭. மருத்துவமனைகள் பெருகி நகரமும் விரிவடைகிறது (உண்மைதானுங்க, யாரவது கொஞ்ச முனைப்பா மருத்துவமைனையை கணக்கில் எடுத்துபாரங்க பாதி நகரமா மருத்துவமனையாத்தான் இருக்கும்).


இப்படி காவிரி நீர் மனிதர்களுக்கு பொய்த்துபோயுள்ளது. நீரிருந்தும் அனைத்தும் பாழ். வான் பொய்ய்யவிடினும், தான் பொய்க்கும் காவிரி என்ற பழமொழியை நாமே உருவாக்கி வருகிறோம். இதற்க்கு மக்களாக ஒன்றிணைத்து தீர்வுகானதவரை நமக்கு விடிவு கிடையாது.


காவிரி ஆற்றின் இன்றைய நிலை பற்றிய சில ஆயிவுபுகைப்பட தொகுப்பினை பின் வரும் இணைப்பில் பார்க்கலாம்.

Fate and facts of காவிரி

http://picasaweb.google.com/ryskhtech/FateAndFactsOfCauvery#5312577839758993698

Noyyal River's Industrial pollution - Indian story

http://picasaweb.google.com/ryskhtech/NoyyalRiverSIndustrialPollutionIndianStory#

Erode's Kalingarayan canal pollution - An unpalatable reality

http://picasaweb.google.com/ryskhtech/ErodeSKalingarayanCanalPollutionAnUnpalatableReality#இந்த இணைப்பை பார்ப்பதோடு நிற்காமல் உங்களால் முடிந்த நல்ல அளவு இதிலிருந்து மீள வழிவகை செய்யுங்கள்.

8 comments:

 1. Most of the time when i am analysing any probelm whether it may simple or complex, every time interested to rearrange the sequence.. but i dont know where to start to resolve the problem????? if u have any suggestion please tell me

  ReplyDelete
 2. Kayalvizhi,

  Make a chart or a table of matrix and try to correlate the possible problems. Don't forget to enlist all possible problems which may linked to certain extent.

  Now try to find solution for each and correlate each solution to another you will find a overall picture how to solve it.

  This kind of three dimensional analysis will lead to a final solution. But, after finding the solution, for me question arises is how we are going to implement. Implementation seems to be idealistic for me, in this current world situation!

  I believe a good education and truthful education is needed to give the awareness for the people, which may take another generation but its worthwhile to start with that instead of toiling with these problems.

  நல்ல கல்வியால் நல்ல மாந்தரை உருவாக்குவோம்!

  ReplyDelete
 3. i felt so much for this because i m from pudukkottai. for us drinking water is from cauvery only. how i can solve this problem. i dont no what to do.

  ReplyDelete
 4. வானம் பார்த்த பூமியாக மாறிப்போனது 'கடைமடை' : விவசாயிகள் வேலை தேடி இடம் பெயரும் அவலம்

  டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, நீர் இருப்பு குறைவால் திறக்க வாய்ப்பில்லாமல் போனதால், கடைமடையில் விவசாய நிலங்களோடு, விவசாயிகளின் வாழ்க்கையும் கருகி, வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.


  மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து, இதுவரை 50 ஆண்டுகளில் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்ட ஆண்டுகள் மிக குறைவு. வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் கடைமடை மாவட்டங்களான திருவாரூர் மாவட்டத்தில், 90 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 87,500 ஏக்கரிலும் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி நடக்கும். குறுவை சாகுபடியை சார்ந்து, இரண்டு மாவட்டங்களில் ஏழு லட்சம் விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பம்ப் செட் பாசனத்தை நம்பி நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய நான்கு ஒன்றியங்களில் 27,500 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


  நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதியில் 62,500 ஏக்கரில் பம்ப் செட் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி நடவு துவங்கியுள்ளது. பம்ப் செட் பாசனத்தை நம்பி விதை விதைத்தல், நடவு நடுதல் என்று துவங்கிய இவர்களுக்கு அடுத்த கட்ட பயிர்வளர்ப்பிற்கு ஆற்று நீர் பாசனம் இம்முறை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில், மேட்டூர் அணை நீரை நம்பியே விவசாயம் உள்ளது. கடைமடை வடிகால் பகுதியான வேதாரண்யம், வேட்டைகாரனிருப்பு, தலைஞாயிறு, கீவளூர் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் பாரம்பரியமாகவே உப்பு நீர் ஆகும் . தற்போது கடலோரத்தில் இருந்து 4 கி.மீ., தூரம் முதல் 10 கி.மீ., தூரம் வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு கடல் நீரை விவசாய நிலங்கள் மத்தியிலும், அதே நீரை பாசன வாய்க்கால்கள் மூலம் கொண்டு வந்து தேக்கப்படும் வழக்கம் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவதால் கடைமடையில் 90 சதவீத விளைநிலங்கள் உவர்நிலங்களாக மாறி, ஒன்றரை லட்சம் ஏக்கரில் விளைநிலங்களின் நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. எனவே இப்பகுதியில் பம்ப் செட் பாசனம் என்பது சாத்தியமில்லாதது என்பது உண்மை.


  விவசாயிகள் தலையில் இடி விழ செய்ததைப் போல் பொதுப்பணித்துறை இந்தாண்டு அணை திறப்பு இல்லை என அறிவித்தது. தண்ணீர் வரத்து இல்லாமலும், சுட்டெரிக்கும் வெயிலாலும் குளங்கள்,குட்டைகள் வறண்டுப் போய் காட்சி அளிக்கிறது.இதனால் கால்நடைகள் நீரின்றி,மேய்ச்சலுக்கும் வழியின்றி செத்து மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைமடையில் விவசாயம் பொய்த்துப் போனதாலும், மாற்று தொழிலுக்கும் வழியில்லாமல் பட்டினிச் சாவில் இருந்து தப்பிக்க விவசாய தொழிலாளர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்ல ஆரம்பித்துள்ளனர். கடைமடையில் உப்பு நீர் புகுந்து விளை நிலங்கள் உவர் நிலங்களாக இருப்பதால் இப்பகுதியில் பருத்தி, நிலக்கடலை போன்ற மாற்றுப்பயிர் திட்டத்திற்கும் இடமில்லை. கடைமடையில் குறிப்பிட்ட ரக நெல்லைத் தவிர ஏனைய பயிர் சாகுபடிக்கு சாதகமான தட்ப, வெட்ப நிலையும் சாத்தியமானதாக இல்லை என்பதால் விபரீத முயற்சியில் எந்த விவசாயியும் இறங்க அச்சப்படுகின்றனர்.


  வீட்டு மனைகளான விளை நிலங்கள்: நாகை, திருவாரூர் மாவட் டங்களில் காவிரிப் பாசனம் பொய்த் துப் போன நிலையில் பெருகி வரும் மக்கள் தொகை, வீட்டு வசதி பிரச்னையும் சேர்ந்து 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட விளை நிலங் கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. குறிப் பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் பகுதிகளில், மனைப்பகுதிகளாகவும், நகரங்களாகவும் மாறிவிட்டன.

  http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4149

  ReplyDelete
 5. தினமணியில் குறிபிட்டுள்ள கட்டுரை முற்றிலும் அப்பட்டமான உண்மை!! ஆனால் உண்மை யாதெனில் அதற்கான பொறுப்புகளில் இருக்கும் அரசாங்கமும், வேளான் பல்கலையும் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை...

  மறுமலர்ச்சி - நிச்சயம்!!!

  பணத்தை நோக்கி
  படுவேகமாக
  பிசாசுகள் போல
  போய்கொண்டு இருக்கிறது-நமது
  பாரதம்!!!
  பஞ்ச பூதங்கள் தான்
  நம்மை ஆளும் திறன்
  படைத்தவை என்பதை மறந்தனர் - அவைகளால்
  படைக்கப் பட்ட, பேராசை கொண்ட
  மனித கூட்டம்!!!
  தற்போது பஞ்ச பூதங்களையும்
  தன்னால் கட்டி ஆளபட வேண்டும்-என்று
  தப்பட்டம் அடிக்கிறான்!!!
  இயற்கையின் பொறுமைக்கும் ஓர்
  எல்லை உண்டல்லவா!
  மனிதனின் தலைக்கனத்தை
  தட்டி, தவிடு பொடியாக்கும் - அந்நன்னாள்
  வெகு தொலைவில் இல்லை!!!

  ReplyDelete
 6. Excellent punch!!

  உப்ப தின்னவன் தண்ணி குடிப்பான்....கண் கெட்ட பின் சூர்யநமஸ்காரம்....

  Money can make all evils.It is a cateract between society vision and nature. We don't have good operator to clear this cateract, eventhough we have good diagonisers! Universities and Gov'ts were good diagonisers, but were poor operators. Let's be the operators or wait for the operators to emerge!

  ReplyDelete
 7. காவிரி ஆற்று மணல் கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தல்: விவசாயிகள் திடுக்கிடும் தகவல்

  ஜூன் 26,2009,00:00 IST
  http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=14404

  திருவாரூர்: டெல்டா மாவட்ட காவிரி ஆற்று மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள், கலெக்டர் சந்திரசேகரனிடம் புகார் தெரிவித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

  காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்பட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, மணல் குவாரியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்ல பொதுப்பணித் துறை தடை விதித்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மோகன் முக்தா எக்ஸ்போ பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி, பல நாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்தது. தூத்துக்குடி துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கு கடந்த ஜனவரி 6ம் தேதி வரை, 10 லட்சத்து 77 ஆயிரத்து 686 டன் ஆற்று மணல் கடத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கண்டு கொள்ளவில்லை. அதனால், பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடியில் தனிநபர் வழக்கு தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்ய தடை விதித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது.

  இந்நிலையில், அதே நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீழவாஞ்சூர் துறைமுகத்தில் இருந்து மணல் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் காவிரி உள்ளிட்ட பல ஆறுகளில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லாரிகள் மணல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மணல் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள காவிரி உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து எடுத்து, கீழவாஞ்சூர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பிற மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ மணல் அனுப்ப அரசு தடை விதித்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கீழவாஞ்சூர் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல, திருவாரூர் அடுத்த அலிவலம் கிராமத்தில் தனியார் நிலங்களில் இருந்து அரசு விதிமுறைகளை மீறி, 25 அடி ஆழத்திற்கு மணல் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. கடுவனாறை ஒட்டி மணல் எடுக்கப்படுவதால், வரும் ஆண்டு வெள்ளப்பெருக்கில் அலிவலம் பெரும் பாதிப்பு ஏற்படுமென கிராம மக்கள் அஞ்சுகின்றனர். இதற்கு கிராம மக்கள் பல முறை போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கீழவாஞ்சூர் துறைமுகம் மூலம் கடந்த வாரத்தில் மட்டும் வெளிநாடுகளுக்கு, மூன்று கப்பல்கள் மூலம் 12 ஆயிரம் டன் டெல்டா மாவட்ட மணல் கடத்தப்பட்டுள்ளது. அரசின் தடை விதிக்கப்பட்ட நிலையில், காவிரி ஆறுகள் உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து மணல் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடை செய்யாமல், தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது. மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளை, அரசு பறிமுதல் செய்ய வேண்டும். குவாரிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றிச் செல்ல வரும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

  ReplyDelete
 8. http://www.dinamalar.com/Tnsplnewsdetail.asp?News_id=4494


  காவிரி டெல்டா பகுதி மணல் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தல் : குவாரிகளில் எங்கு பார்த்தாலும் 10 அடிக்கு பள்ளம்

  குவாரிகளில் மணல் ஏற்றும் லாரிகள், நாகப்பட்டினத்திற்கு ரூட் பெர்மிட் போட்டு, எடுத்துச் செல்கிறது. காவிரி கோட்டப் பகுதி குவாரியில் இருந்து, மணல் எடுத்துச் செல்லும் லாரிகள் அனைத்தும், காரைக்கால் வழியாகத் தான் நாகப்பட்டினம் செல்ல வேண்டும். இதை சாதகமாக பயன்படுத்தி, மணல் லாரிகளை இடைத்தரகர்கள் இடைமறித்து, விலைக்கு வாங்குகின்றனர்.
  இவ்வாறு எடுத்து வரப்படும் ஒரு லாரி மணல், காரைக்காலில் 4,000 ரூபாய் முதல் 5,500 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. இந்த மணல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள கீழவாஞ்சூர் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கப்பல் மூலம் மாலத்தீவு, பர்மா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
  காவிரி டெல்டா பகுதி மணல், காரைக்காலில் வாங்கிய விலையை விட, வெளிநாடுகளில் இரண்டு மடங்கு கூடுதலாக விற்கப்படுகிறது. கீழவாஞ்சூர் துறைமுகத்திற்கு, காவிரி ஆறு கோட்ட குவாரிகளில் இருந்து தான், அதிகளவு மணல் கடத்திச் செல்லப்படுகிறது.
  அதே போன்று, திருவாரூர் அடுத்த அலிவலம் கிராமத்தில், கடுவனாறு ஆற்றுப் படுகைகளில், தனியார் நிலங்களில் தரைமட்டத்தில் இருந்து ஐந்து அடிக்கு கீழ், நல்ல மணல் கிடைக்கிறது. இதை, திருவாரூரைச் சேர்ந்த சில புரோக்கர்கள் பயன்படுத்தி, காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி.,க்கு எடுத்துச் செல்வதாகக் கூறி, காரைக்கால் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.
  தனியார் நிலங்களில், 15 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்படுவதால், கிராமத்தைச் சுற்றிலும் கிணறுகள் போல் காட்சியளிக்கிறது. இதனால், மழைக் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் என, கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
  அரசு மணல் குவாரியில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்லக் கூடாது என, கடந்த ஆண்டே, பொதுப்பணித் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்படியிருக்கும் போது வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்றால், அது பெரிய புதிராக இருக்கிறது. மத்திய அரசு கனிமவள அனுமதி இருந்தாலும், அது எப்படி இந்த அளவு தீவிரமாக மாநில அரசுக்கு தெரியாமல் நடந்தது என்பது புதிராக உள்ளது.
  இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, "மோகன் முக்தா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற கம்பெனியும் வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்து வந்தது.
  மாலத்தீவுக்கு மட்டும் மொத்தத்தில் 10 லட்சத்திற்கு அதிகமான டன் மணல் அனுப்ப மத்திய அரசின் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும், "கேபாக்சில்' அனுமதித்திருக்கிறது என்றும், தங்கள் கம்பெனியும் அந்த அடிப்படையில் மணல் ஏற்றுமதி செய்திருக்கிறது என்கிறது.
  மாலத்தீவுக்கு மணல் அனுப்பும் கப்பல் கம்பெனிகள் பல உள்ளன என்றும் ஆயிரக்கணக்கான டன் அனுப்புவதை ரகசியமாக செய்ய முடியாது என்றும் மோகன் முக்தா எக்ஸ்போர்ட்ஸ் தகவல் குறிப்பு விளக்குகிறது.
  மேலும், வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்வதை எதிர்த்து, தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது; வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்ய தடை விதித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது; அதனால், தூத்துக்குடி துறைமுகத்தில், வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்வது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

  - நமது சிறப்பு நிருபர் -

  Thanks to Special DINAMALAR reporter.

  -----------------------------------------------

  காவிரியை பொறுத்தவரை ஒரு நல்ல செய்தியை கூட காணமுடியவில்லையே! கமலஹாசன் ஆத்து மணல அள்ளுறது பூமித்த்ரோகம், தேசத்த்ரோகம்ன்னு என்னதான் ஏசினாலும் மக்களுக்கும், பணவெரிபிடித்த முதலைகளுக்கும், அதிகாரிகளுக்கும் இது இம்மி அளவு கூட மண்டையில் ஏறியது போல் தெரியவில்லையே.


  Mother Cauvery has been raveged from Top to bottom (starting from karnataka dams, Mettur, Kumarapalayam, Bhavani, Erode, Karur, THiruchi, Whole of old Thanjuavur areas), with various weapons like huge reservoirs to sediment its silt and breaking the fresh water eco system, dyeing wastes, bleaching wastes, sugarcane wastes, paint wastes from kerala pouring comfortably in cauvery, leather industry wastes, municipal wastes, sand looting, water lootting to namakkal regions, etc.

  Cauvery may rank top order for her ravage among India's other polluted and ill-treated rivers.

  ReplyDelete