Sunday 1 January 2012

ஆனில்மேய ஐந்தும்நீ இராமா! - பஞ்சகவ்யம்



திருச்சந்த விருத்தத்தில் திருமழிசை ஆழ்வார்,   
ஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ
யானும்நீ, அதன்றிஎம் பிரானும்நீ; இராமனே!

(ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் (பஞ்சகவ்யம்) = பசுதரும் பயன்கள்-பால், தயிர், நெய், கோமியம், சாணம், கடற்பயன் = அமுதம், பவழம் போன்றன)
என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே’ என வேண்டுகிறார்.

திருமழிசைஆழ்வார் திருச்சந்த விருத்தத்தில் ஒரு பாடலில் " இராமா நீயே எனது ஊணில் உயிராய் விளங்குகிறாய். எனது உணர்வு முழுவதும் நீயே. நான் உறங்கும் போது உணர்வற்றுத்தான் இருக்கிறேன். ஆனால் உறக்கம் நீங்கி எழுந்ததும் என் நினவுகளெல்லாம் அற்றுவிடாமல் தொடர்ந்து வரும் உணர்வும் நீதான். தூய்மை என்றால் அதன் உருவமே பசுவின் ஐந்தினைக் (பஞ்சகவ்யம் எனக்) குறிப்பர். அந்த ஆவின் ஐந்தும் நீயே. அதாவது உன்னை தூய்மையின் இருக்கையாகப் பார்க்கிறேன். இம்மண்ணுலகும் வானுலகும் நீயே. வளமான கடலும் நீயே. அக்கடல் அளிக்கும் மேகமும் மேகம் பொழியும் மழையும், மழையால் பெருகும் ஆறும் ஆற்றால் வரும் வளமும் வளத்தால் வரும் செல்வமும் உயிர்களும் நீயே. அவை அனைத்தும் நீயேதான். ஏன் நானாக இயங்குவதும் நீதான். அது மட்டுமல்ல பெருமானே என்னுடைய பெருமானும் நீதான் இராமனே" என்கிறார். 

No comments:

Post a Comment