Wednesday 8 December 2010

அந்தணர் நூலும், அரசன் கோலும்



வெள்ளாலமைக்கு நீர் என்பது அவசியமான ஒன்று. முன்பெல்லாம், வான்பார்த்த வெள்ளாமையாத்தான் இருக்கும். விராட புராணம் படிப்பதும், மாரியம்மன் பண்டிகை எடுப்பதும், மழைகஞ்சி டுப்பதும், கிடாவெட்டுவதும், அரசனை சவம் போல தூக்கிசெல்வதும், யாகம் வளர்ப்பதும் மழை பெய்ய வழி செய்ததது. இன்று அவ்வாரே சிலவிடங்களில் நடக்கிறது.

ஆனாலும், மழை குறைந்துவிட்டது, பருவமழை பொய்த்து விட்டது, பருவநிலை-காலநிலை மாறிவிட்டது என்று கூறி அரசாங்கம் மற்றும் அறிஞர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் மக்கள்ஏனோ வானத்தைப்பார்க்க மறந்து விட்டார்கள். நிலத்திற்குள் பார்த்துகொண்டிருகிரார்கள். நூறு அடிமுதல் ஆயிரத்து ஐநூறு அடி வரை ஆல்துழை கிணறுகள் நீரைக்கொனருகின்றன. அதை வைத்து வணிக பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. மின்சாரம் இலவசம் என்பதால் இதெல்லாம் நடக்கிறது. நீர்சிக்கணம் என்பது எள்ளளவும்கிடையாது.

நீர்சிக்கணம் கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியில் நுண்ணீர் பாசன முறைகள் மான்யத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சொட்டு நீர் பாசன முறை மக்களிடையே இன்று வரவேற்ப்பை பெற்று பின்பற்றப்படுகிறது. இன்றும் அதே போன்றே பயிர்கள் பயிரிடப்படுகின்றன. கூடுதல் நிலைநாள் பயிர் செய்யப்படுகின்றன. விளைச்சல் அதிகமாக எடுக்கிறார்கள். லாபம் அதிகரிக்கிறது. ஆனாலும், நிலத்தடி நீர் கீழ சென்று கொண்டுதான் இருக்கிறது. நீர் உபயோகம் குறைந்தபாடில்லை. நீர் தேவை நுண்ண்ணீர் பாசனம் வந்தாலும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும். Water conservation is not observed after micro-irrigation. மனிதனின் பேராசைக்கும் உண்டோ எல்லை.

ஆட்சியாளர்கள் இந்திய நதிகளை இணைக்கிறோம், படுஹைகளை இணைக்கிறோம், மரபணுக்களை விதைக்குள் நுழைக்கிறோம், நாலாயிரம் அடி துளையிட்டு நீரை கொணர்கிறோம், என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கிவிட்ட சூழ்நிலையில், விவசாய உற்பத்திபெருகிவரும் தேசிய மற்றும் சர்வதேச நகரங்களின் உணவு மற்றும் நுகர்வு ஆடம்பரத்தை நோக்கி இயற்கை வளங்களை இறுதிகட்டமாக நகர்த்த ஆயத்தமாகிவிட்டனர் என்று தோன்றுகிறது. i.e. mobilizing the natural resources for the national and international markets irrespective of the threshold level of our natural resources depletion. There is no end for human lavishness, selfishness and greediness.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

இன்று அந்தனருமில்லை, மன்னவனுமில்லை. இருவர்வேசத்தையும் வைசியர்கள் அரகேற்று நடத்தி வருவதால்தான் இந்த புலம்பல்.

ஆறில்ல ஊரும் பாழ். அந்தணரில்ல சபையும், மன்னவநில்லா குடியும் பாழ். ஓங்குக வள்ளுவம்.


No comments:

Post a Comment