Monday 14 September 2009

தமிழக மற்றும் இந்திய விவசாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள்!


தமிழக மற்றும் இந்திய விவசாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள்!

விவசாயத்தில் காலங்காலமாக சிறந்து விளங்கிய தமிழகம் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக சந்தித்து வரும் பல பிரச்சனைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.


கண்ணுக்கு தெரிந்த பிரச்சனைகள்:

அதிலென்ன, கண்ணுக்கு தெரிந்த பிரச்சனை என்று நீங்கள கேட்கலாம். பொதுவாக விவசாயிகளும், பத்திரிக்கைகளும் மேம்போக்காக அலசும் பிரச்சனைகள் இவை.

முதலாவது: விவசாய வேலைக்கு தொழிலாளர் பிரச்சனை. (கொடுமைடாசாமி, "ஆள்" பிரச்சனைன்னு சொல்லிட்டா கெட்ட வார்த்தையாயிடும். "ஆள்" என்றால் அடிமை என்கிற மாதிரி ஒரு அர்த்தம் இருக்கிறதாம், பகுத்தறிவுமற்றும் கொடி பிடிக்கும் அமைப்பினர் பல இடங்களில் பேசியதைபார்த்திருக்கிறேன்). ஆள் பிரச்சனைக்கிறது, வராமையா இருக்கும்? பொறக்கிற குழந்தையனைத்தும் படிக்க போயிடுதுங்க! இருவத்தி நாலு வயசு வரைக்கும் படிக்குதுங்க! அப்புறம் சொக்கா மடியாத வேலை தேடுதுங்க! எதோ, கிராமத்துல இருக்கிற பெருசுங்க வேலை செய்யலைன்னா உவ்வா இருக்காது சாமியோவ்.

இரண்டாவது: தண்ணீர் பிரச்சனை. இது இருப்பதுதான். ஆனால், கடந்த சிலபல வருடங்களில் அதிகமாகியுள்ளது. காரணம்,
--->கணக்கில்லாமல் பாசன வசதிகளை பெருக்கியது.
--->கண்மூடித்தனமாக பாரம்பரிய பயிர்களை, ரகங்களை அழித்து தண்ணீர்அதிகம் வேண்டுகிற பயிர்களை பயிரிட்டது.
--->நகரப்பெருக்கம் மற்றும் அபரிதமான தண்ணீர் வீணடிப்பு (சமையல் கட்டில், துவைக்கையில், கக்கூசில், இப்படி பல).
---> தொழிற்ச்சாலைகள் பெருக்கம். (போர் போட்டு உறிஞ்சி தண்ணீரை பாழாக்கிஆற்றில், குளத்தில், நிலத்தில் விட்டு மேலும் பல பிரச்சனைகளைஉண்டாக்குவது).

மூன்றாவது: கட்டுபிடியாகாத விலை. ஆமாம், செம்மறியாட்டு கணக்கா ஒரே பயிரை பயிரிட்டு தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்வது விவசாயிகள்தான். மேலும், அரசு ஒரு பயிரின் பரப்பை முன்னர் சொன்னது போல பல இடங்களுக்கு நீர் பாசனம் மூலம் பரப்பி அதிகம் உற்பத்தி செய்து விலையை குறைத்து நகர வாசிகளுக்கு வசதி செய்தி தருவது. மேலும், வெளிமாநில இறக்குமதி, வெளிநாட்டிலிருந்து உலகமயமாக்கத்தினால்இறக்குமதி என்று கூறி மேலும் உள்ளூரானை நசிவுற வைப்பது.

நான்காவது: விளச்ச்சல் குறைவது. பின்ன குறையாமைய இருக்கும். பூமியதாய கும்பிடசொன்னாங்க பெரியவங்க. ஆனா, நாம்ப ஒரு பொருட்டா கூடமதிக்கல. நாற்ப்பது வருடமா உப்பு, பூச்சிகொல்லின்னு தூள் கிளப்பினோம். விளைவு பூமி செத்து போச்சு. ஒன்னும் வேலைய மாட்டிங்குது. பூசியடிக்குது. எதுக்கும் கட்டுபடரதில்லசத்து கெட்ட பூமியில போடுற யூரியாவும் தங்கறதில்ல. மாட்டுகுப்பை ஒரு சாங்கியதுக்காவது காட்டினாதான கொஞ்சமாவது மண்ணுக்கு உசிர் இருக்கும். விளைச்சல் குறையவே செய்யும்.


கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகள்:


ஐந்தாவது: "Hardworkophobia"ங்கிற சமூக வியாதி. உழைக்க்கிதுக்கு யாரும் முன்வரதில்லை. கேவலமா நெனைக்கிறாங்க. இந்த வியாதி மூதேவியின் வாரிசு. இந்த வியாதிய ஒழிச்சாத்தான் மக்காகளுக்கு பின்னால சோறு கிடைக்கும். உடல் உழைப்பே இல்லாமல் பழகி விட்டால் ஒரு நாள் எரிபொருள் கிடைக்காமல் அவதியுறும் காலம் வருகையில் இந்த கையாலாகாத தனத்தால் மடிந்து போவரோன்னு தோனுது.

ஆறாவது: உடலில் பலமில்லாமை. இப்பல்லாம் எங்கீங்க வேலை ஆளுங்கஒழுங்கா வேலை செய்யுறாங்க? சீக்கிரம் கல்சி போயுடுறாங்க. முடியறதில்லை. முடியாம போகாமயா இருக்கும். ஒழுங்க உள்ளூர் ராகி, கம்புன்னு தின்னுகிட்டுஇருந்தவங்கள பாளிஷ்டு அரிசி சோறு போட்டு அவிங்கள கெடுத்துபுட்டீங்க. பத்தாதற்கு யூர்ரிய, போச்சிகொல்லின்னு அடிச்சு அதன் சத்தையும்ஒன்னுமுல்லாம ஆக்கி புட்டீங்க. எங்கிருந்து வரும் வேலை செய்யுறதுக்குபலம். கள்ளு குடிச்சுக்கிட்டு இருந்தாங்க அவிங்களுக்கு சீமா சரக்கு கொடுத்துஈரலையும் கெடுத்தாச்சு. இதய நோய், நீரிழிவு, வாதம்ம்ன்னு பல வியாதிகளும்பரவி இருக்கு.

ஏழாவது: சுற்று சூழல் சமச்சீர் இழந்தமை. இது ஒரு பய புள்ளைக்கும்புரியறதில்ல. மருந்து வேணும்ன்னா கட்டுக்குள்ள பொய் தேடுற ஆளுங்கமருந்துக்கு கூட காட வஜ்ஜிருக்கனம்ம்ன்னு தோணாதா? காடுங்கிறது ஒருசமச்சீரான சுற்றுசூழல். தீமை நன்மை செய்யும் விலங்கினங்களும்தாவரங்களும் சமமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழல் இருந்தாதான நம்மஊருல கொசுவாவது இல்லாம இருக்கும். நாமதான் தவளைங்களையே பூச்சிமருந்தடிச்சும் அது அன்டுரதுக்கும் ஒரு இடம் வைக்காம நமக்கு வேனும்ம்ன்னுஎடுத்துக்கிட்டோம். எங்கிருந்து பூச்சி சாகும், பயிர் வளரும். இன்னும் கொஞ்சநாளுல பாம்பு, கிளி, இப்படி எல்லாமே அழிசிபுடுவோம்ம்ன்னு நெனைக்கிறேன். கண் கெட்டாத்தான் புத்தி வரும்.

எட்டாவது: அவரச பணம் & பணபேராசை. நான் உழைக்கவும் மாட்டேன், நிலத்தை பராமரிக்கவும் மாட்டேன், மாடும் வழக்க மாட்டேன், தண்ணீர் வளங்களையும் கண்டுக்க மாட்டேன் ஆனா எனக்கு காசு வர்ற மாதிரி பயிர் வேணும், அதுவும் நிறைய விளையணம், அதுக்கு அரசாங்கம் மான்யம் குடுக்கனம், விலை குறைஞ்சா நிர்ணயம் பண்ணனம், நஷ்ட ஈடு கொடுக்கனம் இப்படின்னு போர்க்கொடி கூக்குரல் போடுவோம். நகரத்துல இருக்கிரவனாவது காசு கொடுத்து வாக்கனம் அவன் எப்படி இவன அடிச்சு முழுங்கி பேங்க் பேலன்ஸ எத்தலாமுன்னு யோசிக்கிறான். பேராசை பேரு நஷ்டமுங்க! அத புரிஞ்சிக்கோங்க மக்கா!

எனக்கு இப்படி அஷ்டம காரணங்கள்தான் இப்போதைக்கு வருது. உங்களுக்கு பஞ்சவிய, நவகவியா, த்சகவியான்னு யோசிக்கிற ஆளுங்க மாதிரி யோசிஜீங்கன்னா இன்னும் நவ, தச, துவாதசகாரனங்கள சேத்திக்குங்க!

3 comments:

  1. //
    அவரச பணம் & பணபேராசை
    //

    உண்மை தான் ஒரு டீ கடையில எந்த வித முதலீடும் இல்லாம வேலை மட்டும் பார்த்தா 1000-3000 மாதம் கிடைக்கும்.. இங்க் 6 மாசம் முதலீடு பண்ணி, கடுமையா உழைச்சா எதாவது தேறலாம் ( அதுவும் பெரிய கேள்வி குறி தான்)..


    மிகச்சரியா அலசி இருக்கீங்க.. சிலர் விவசாய வேலையை இன்னும் கொத்தடிமை வேலையா தான் நினைச்சுகிட்டு இருக்காங்க..

    நமக்கு நாமே சூன்யம் வச்சு கிட்டு இருக்கோம், அது மட்டும் நல்லா தெரியுது..

    இந்த தளத்தின் தொடர் வாசகன். தொடர்ந்து எழுதுங்கள் :)

    ReplyDelete
  2. பூமியின் இயற்கை ஓட்டத்திற்கு சரியான மக்கட்தொகை 1 பில்லியனாம். இப்பவே 6 1/2 பில்லியன் தாண்டியாச்சு. மூலப் பிரச்சினை அத சரி பண்ணாம எதிர்காலத்தில என்ன பண்ணாலும் வெலைக்கு ஆகாது தானே....

    ReplyDelete
  3. I liked this one very much. Really fantastic. The way you have analyzed each and every problem as well as the attitudes of the present farmers and agricultural laborers is amazing.
    The colloquial language and satire is superb. இது ஒரு பய புள்ளைக்கும்புரியறதில்ல. மருந்து வேணும்ன்னா கட்டுக்குள்ள பொய் தேடுற ஆளுங்கமருந்துக்கு கூட காட வஜ்ஜிருக்கனம்ம்ன்னு தோணாதா? காடுங்கிறது ஒருசமச்சீரான சுற்றுசூழல். தீமை நன்மை செய்யும் விலங்கினங்களும்தாவரங்களும் சமமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழல் இருந்தாதான நம்மஊருல கொசுவாவது இல்லாம இருக்கும். நாமதான் தவளைங்களையே பூச்சிமருந்தடிச்சும் அது அன்டுரதுக்கும் ஒரு இடம் வைக்காம நமக்கு வேனும்ம்ன்னுஎடுத்துக்கிட்டோம். எங்கிருந்து பூச்சி சாகும், பயிர் வளரும். இன்னும் கொஞ்சநாளுல பாம்பு, கிளி, இப்படி எல்லாமே அழிசிபுடுவோம்ம்ன்னு நெனைக்கிறேன். கண் கெட்டாத்தான் புத்தி வரும்.
    well done senthil.

    ReplyDelete