Friday 5 June 2009

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம்


உலக சுற்றுச்சூழல் தினம்

வருடா வருடம் இப்படி ஒரு தினத்தை நினைவு தினமாக வைத்து, திவசம் கொடுக்கும் மேற்கத்திய மக்களுக்கு ஒரு கேள்வி!

. ஆமா நீங்கல்லாம் முடிவே பண்ணிடீங்களா? இந்த மாதிரி பிரச்சனைகள் இறந்து போனவை என்று. ஏன் இப்படி திவசம் கொண்டாடி, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கிறீர்கள்?

நாம் எந்நாளும் சிந்திக்க வேண்டிய விஷயம் சுற்றுசூழல் பற்றியது. நாம் இன்று செய்து கொண்டிருக்கும் நாசத்திற்கு எதிர்காலம், நம்மை தண்டிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், மாற்றங்களுக்காக அடியெடுத்து வைக்க முயலுங்கள். சுற்று சூழல் சிந்தனைகளை வாழ்க்கையில் திருக்குறள் போல் கடை பிடியுங்கள். (திருக்குறளையே யாரும் கடை பிடிக்கிறதில்ல!...இதுல இது வேறையா? ).


சொல்வதை செய்யுங்கள். உணர்வதை நடைமுறைப்படுத்த பழகுங்கள். நமக்கு எந்நாளும் சுற்றுசூழல் தினமே.

எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

திண்ணமாக எண்ணுவோம்! மாற்றமாக இருப்போம்!

No comments:

Post a Comment