Saturday 13 December 2008

வாங்கித்தின்று வீங்கிச்சாதல்/ Boom and bust of global banking system

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய உலகமயமான பொருளாதார சூழலில், அமேரிக்காவில் ஒருவன் உணவு உண்டால், இந்தியாவிலோ, இந்தோனேசியாவிலோ ஒருசிலருக்கு வங்கி இருப்பு அதிகரிக்கும், ஒரு சிலரின் வாழ்வாதாரம் சிதையும் என்ற அளவுக்கு வலைபின்னப்பட்டுள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி பொருளாதார பின்னடைவு போன்றவற்றை பார்த்து மக்கள் கதிகலங்கியுள்ளனர். வங்கியினர் தலையை பியித்துக்கொண்டும், பங்கு வர்த்தகத்தினர் விழி பிதுங்கியும் உள்ளனர். அமேரிக்காவில் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு கார்களில் குடும்பம் நடத்தும் சூழல், ஆஸ்த்ரேலியாவில் கப்பல் கண்டயினர்களில் குடும்பம் நடத்தும் சூழல், ஐரோப்பாவில் வங்கி திவால் நிலைகளை தொடர்ந்து வேலையிழப்பு அதனால் தலை தூக்கும் நாசி மற்றும் பாசிச குழுக்கள் என அரசும், வர்த்தகத்தினரும், மக்களும் இப்படி அல்லாடும் நிலைக்கான காரணம் என்ன?

மூலகாரணம் அமேரிக்காவில் ஏற்ப்பட்ட சப் - பிரைம் நெருக்கடி. அதனால் அமெரிக்காவை வைத்து பின்னப்பட்ட பிற உலக நாடுகளும் அதன் பாதிப்பை ஏற்றிருக்கின்றன.
இத்தகைய நெருக்கடி நவீன பொருளாதாரம் ஆரம்பித்தகாலத்திலிருந்தே நிகழ்ந்து வந்திருக்கிறது. நிலத்தின் மதிப்பை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அது அல்லாது பல தனியார் துறையினரின் வியூக அடிப்படையில் மதிப்பை ஏற்றி விட்டு பின் பலூனை உடைப்பது போல் குறைத்தால் இப்படிப்பட்ட சுனாமி தான் நிகழும். அமெரிக்க தனியார் வங்கிகள் சுண்டல் விற்ப்பவன், தெருக்கூட்டுபவன், சரைப்பவன் என அனைத்து நடுத்தர மக்களுக்கும் திருப்பி அளிக்கும் தகுதியற்ற அனைவருக்கும் கடனை குறைந்த வட்டியில் வாரியிறைத்தது. எதற்கு? அமெரிக்க பொருளாதாரம் வீழாமல் இருக்க! வாங்கும் சகதி அதிகரிக்க! வாங்கும் சக்தி அதிகரிக்க பணத்தை அச்சடித்து(மறைமுகமாக உலக வர்த்தகம் என்ற பெயரில்) செலவு செய்ய கொடுக்கும் நாடு அமெரிக்காதான். வங்கிகள் கொடுத்த பணத்தில் அனைவரும் வீடு கட்ட ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து அபரிதமான விற்றது (நமது பட்டி தொட்டிகளெல்லாம் கோடிக்கணக்கில் விற்றது போல்) . பின்பு வியூக அடிப்படையில் சென்ற மதிப்பு திடீரென வீழ தொடங்கியது. கடன் கொடுத்த வங்கிகளின் சொத்து மதிப்பு பங்கு மதிப்பு காத்தாய் போனது. பின்பு என்ன மஞ்ச நோட்டீஸ்தான். இது அங்கு நடக்க உலகமே ஆடுவானேன்? என்ற கேள்வி வரும். ஆமா! கடன் கொடுத்தது யாருன்னு நீங்க கேக்கனும்மா இல்லையா? அமெரிக்க வங்கிகளில், மேற்க்கு ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்தவர்கள் இந்திய, ச்சீனா, தாய்லாந்து, மலேசியா, சிங்கபூர், ஜப்பான் போன்ற சேமிக்கும் நாடுகள். அமெரிக்க பெருச்சாளிகளுக்கு பொருட்களை கொடுத்து கொடுத்து டாலரை வாங்கி வைத்துக்கொண்டு அதை திரும்ப அமெரிக்க நிறுவனக்களுக்கு கொடுத்து வைத்த புத்திசாலிகள் நாம் . அமெரிக்கர்கள் டாலரை என்ன செய்வது என்று தெரியாமல் (உள்ள எதையுமே உற்பத்தி பண்றதில்லை), கடன் கொடுத்து வாங்கி தின்று வீங்கி சாவும் வழிக்கு தள்ளி விட்டனர். அது சரி அமெரிக்க வங்கிகளுக்கு ஏன் அப்படி ஒரு கடன் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது? அதற்க்கு காரணம் அமெரிக்க டாலரை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தம். டாலருக்கு மதிப்பு இருப்பது போல ஒரு செயற்கையான மதிப்பு இருந்தாலே ஒழிய எந்த மடையனும் வர்த்தகம் செய்ய மாட்டான். அதோடு அல்லாமல், டாலரை உலக நாடுகள் மறுத்தால் அவர்களின் பொருளாதாரம் பாதிக்கும். இந்த இரண்டையும் நம்பி அமெரிக்க வங்கிகள் கடன் கொடுத்தன. அதனையும் நம்பி நாமும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவிலும், வளர்ந்து வரும் பல வளரும் பொருளாதார நாடுகளிலும் முதலீடு செய்தோம். பெரும்பான்மையான முதலீடு ரியல் எஸ்டேட். அதுவும் வியூக அடிப்படையிலான மதிப்பு .இதனை எந்த நாட்டு அரசாங்கமும் கட்டுபடுத்த முற்ப்படவில்லை. விளைவு இப்போதுசுண்டக்கா வியாபாரம் மாதிரி வீடு வியாபாரம் மாறி விட்டது. சம்பாதிச்சு போட்ட காசு அனைத்தும் காத்த கரைஞ்சு சுண்ணாம்பு காப்பியா பல்ல இளிக்குது! வேனும்தா இந்த வீக்கமும், வெடிப்பும். சும்மாவா சொன்னாங்க, எந்த செலவு செஞ்சாலும் ஒரு வரைமுறை இருக்கானும்ன்னு? வீடு கட்ட, சொகுசு கார் வாங்க செலவு பண்ணினா இப்படித்தான் ஆகும்கிறது ஒரு படிப்பினை. இனிமேனாச்சும் மக்கள் முழிச்சு எதுலா போட்ட பணம் போகாதுஅப்படின்னு யோசிக்கணும். அதுக்குசோத்துக்கு லாட்டரி அடிக்கிற காலம் வர வேண்டும்.

அது சரி அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதைப்பற்றி என்ன பேசிகிறார்கள் , பிரச்சனை தீருமா என்பது பற்றி பின் வரும் பட தொகுப்புகளில் Fred Harrison என்ற பத்திரிக்கையாளர் மற்றும் பொருளாதார விமர்சகர் விளக்குகிறார். சுருக்கமாக அவர்சொல்வது நிதி நெருக்கடியை போக்க வங்கிகளை தேசியமயமாக்குவது, டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காக்க வாளியில் தண்ணீரை எடுத்து ஊற்றுவது போல் என்று முடித்து விட்டார்.

$45 Trillion Wealth Wipe Out


Documentary # 1 - Gordon Brown's Cover Up



Documentary # 2 - Messing With Our Minds



The Renegade Economist Press Conference


Boom Bust 'n Bankers


Funny mail, I received on the subject..

Global Economic Crisis FAQ - Funny!!

This post looks funny, because it was created by the author to ease the shocking situation we are facing ahead and also have offered the Vision in the final questionairre.

With so much fear mongering and news coverage about the global financial crisis, I thought I should step in and make it clear to my readers what is really happening. When things go wrong on an epic, never-seen-before scale, you can always rely on the Pointless Wanderings blog to bring some clarity, continuity and calm into your lives. So, without wasting any of your time like all the news channels are doing, here is a quick FAQ.

Q: What's happening, like, really?

A: Nothing much, I'm doing good. I saw the movie Rock On the other day and it was the….

Q:No, about this Global Financial Crisis thing. What's happening there?

A: Oh, like that. Hehe… So what has happened is that the global financial system has ground to a halt. The LIBOR has shot up, the CDOs are frozen, and the Fed is promising to buy Commercial Paper now, to let businesses roll over their short term debt.

Q: Huh?

A: OK, here's a simpler analogy. Imagine a giant airplane mid air. Now imagine that its run out of fuel. And imagine that the plane's landing gear is damaged. And half of the wing is broken off. And the pilot is drunk. And you're over the Indian Ocean, 500 kms from land. And the water is infested with sharks.That's the state of the global economy right now.

Q: But aren't the governments going to "bail out" all the banks?

A: Not really. The word "bail-out" is actually a cricket metaphor, as in "taking the bails out to dismiss the batsman". What the government is calling a bailout is actually a massive nationalization of all the banks. Earlier, only evil dictators and socialist governments used to do it, but now nationalizing banks is suddenly in fashion, because everyone else is doing it.

Q: But that's not what all the analysis on TV says. They're saying that the governments are "rescuing" the banks.

A: Before I can answer that question, lets first understand what "analysis" means. Its actually an ancient Greek word, meaning "The process of pulling things from one's ass : anal-lysis". All the talking heads on TV are pulling stuff from their behind and filling up the time because the producers of their news programs have to show something to fill time between the ads.

Q: So, how did all this start?

A: This all started with the sub-prime crisis. The sub-prime crisis happened when the traders on wall street could not come up with prime numbers (you know, like 7, 13, 39 etc…), so that they had to settle for a number that was lesser than a prime number. Hence the word sub-prime. What happens when you use numbers that are less than prime numbers is that your mathematical models break down, to the point where you have to divide by zero. And the division by 0 causes all hell to break lose.You can try it on your calculator. Try dividing any number by 0. The calculator will show an error. That's what has basically happened in the financial markets.

Q: So what is going to happen now?

A: Well, nothing much. A few more European banks are going to collapse, followed by a huge set of layoffs in the financial sector, which is going to hurt the IT outsourcing companies very hard, and that's going to trigger a recession everywhere. Entire countries like Iceland and Argentina are going to go bankrupt.Other than that, everything is going to be OK.

Q: Oh My God! What are we going to do now? What can I do to survive this crisis?

A: You probably should start learning some skills that will be useful when the world goes back to the pre-industrial era.

Use the checklist below to determine how likely you are to survive this financial crisis. Answer each question with a YES or a NO

1. I know how to grow my own vegetables and riceYES ____ NO ______

2. I have some carpentry or blacksmith skillsYES ____ NO ______

3. I have the capacity to do physical labor, and don't just sit in front of a computer all day, a skill that is entirely useless when the world runs out of electricityYES _____ NO ____


If you answered YES to at least one question, you should survive fine. If you answered NO to all of the questions, now would be a good time to read the wikipedia article on farming.--

1 comment:

  1. First Published : 06 Jun 2009 11:35:00 PM IST

    Last Updated :

    தில்லியில் அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ""மக்கள் நுகர்வை அதிகரிக்க வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். மேலும், ""இதன் மூலம் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க முடியும்'' என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.


    சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நுகர்வுக் கலாசாரம். அதாவது, அதீதமான நுகர்வு.

    நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது அந்நாட்டின் அன்றைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இதே கருத்தைத்தான் முன்வைத்தார்.


    ஒன்று அமெரிக்க மக்களின் மீதான அதன் தாக்கம்; மற்றது உலகின் பற்றாக்குறை'' என்றார். ""நெருக்கடிச் சூழலில் செலவழிக்கச் சொன்ன நான், சூழல் மாறியதும் சேமிக்கச் சொல்லத் தவறிவிட்டேன்'' என்றார்.

    பழக்கம் ஏற்படுத்தும் பெரிய துன்பம் இதுதான்: அடிமையாதல். பொருள்களை வாங்குவது என்பதைத் தாண்டி "ஷாப்பிங்' என்பது அங்கு ஒரு பழக்கமாகிவிட்டது. அவர்கள் பின்பற்றும் "கடன் பொருளாதார முறை' இதை ஊக்குவிக்கிறது. ஆனால், அதுவே இன்று அவர்களுடைய பொருளாதாரத்தை சகதியில் தள்ளிவிட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். அமெரிக்காவில் மட்டுமல்ல; வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் - வளர்ந்துகொண்டிருக்கும் பல நாடுகளிலும் நுகர்வுக் கலாசாரம் திட்டமிட்டே வளர்த்தெடுக்கப்படுகிறது. சிறப்பு தினங்கள், அழகிப் போட்டிகள், அலங்கார ஆடை அணிவகுப்புகள், பொருட்காட்சிகள்; பண்டிகைக்கால தள்ளுபடிகள் என்று மக்களை ஈர்க்கும் ஒவ்வொன்றும் வியாபாரிகளை நோக்கி இழுக்கும் மாயக் கயிறுகளாகவே பின்னப்படுகின்றன.

    நம்முடைய கிராமப்புறங்களில், ""கையில காசில்லாதவனுக்கு கடைத்தெருவுல என்ன வேலை'' என்ற சொலவடையை மிக சகஜமாகக் கேட்கலாம். ஆனால், இப்போது இங்கேயும்கூட சூழல்கள் மாறுவதைப் பார்க்கிறோம். தொலைக்காட்சி நேர்காணல்களில், ""உங்களுடைய பொழுதுபோக்கு என்ன'' என்ற மரபான கேள்விக்கு, பலரும் ""ஷாப்பிங் செய்வது'' என்று சொல்லிவைத்ததைப்போல பதிலளிப்பதை சகஜமாகப் பார்க்கிறோம். இசை கேட்பது; புத்தகங்கள் வாசிப்பது போன்று "ஷாப்பிங்' செய்வது இங்கும் ஒரு பழக்கமாக உருமாறுவதைப் பார்க்கிறோம்.

    பொதுவாக, நுகர்வுக் கலாசாரத்தை வளர்த்தெடுக்க சந்தையும் பொருளாதாரமுமே பிரதான நோக்கங்களாக இருக்கின்றன. ஆனால், நுகர்வுக் கலாசாரத்தின் விளைவு பொருளாதாரத்தில் மட்டும் தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. தனி மனித வாழ்க்கையிலும் சமூகத்திலும் அது பெரிய பாதிப்புகளை உருவாக்குகிறது.

    வாங்குவது, மேலும் வாங்குவது, அந்தஸ்தைக் காட்ட வாங்குவது, வாங்கும் பொருள்களை வைப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடுவது, வாங்கும் திறனுக்கு வருவாய் போதாதபோது கடன் வாங்குவது, கடனுக்காக வட்டி கட்டுவது, கடனை அடைக்க கூடுதல் வேலை பார்ப்பது, உடலும் மனமும் நெருக்கடிக்குள்ளாகும்போது மனித உறவுகள் சிதைவது என்று அதீத நுகர்வுக் கலாசாரம் முதலில் தனி மனித வீழ்ச்சிக்கு வித்திடுகிறது; கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்படும்போது அடுத்து, பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடுகிறது. அதிகம் நுகர்கின்ற நாடு முன்னேறிய நாடு; அதிகம் நுகர்கின்ற மனிதன் முன்னேறுபவன் என்கிற சித்தாந்தம் அனேகமாக தோற்றுவிட்டது. சர்வதேசப் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் இன்று நாம் அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இன்றைய பிரதிபாவின் வார்த்தைகள் நேற்றைய புஷ்ஷின் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன.

    Nandri: Dinamani

    ReplyDelete