மீசுரம் மாறாது ஓது மேன்மை பெறு சடையபர
மேசுர பண்டித குருவின் விளங்கு மலர் அடிகளையும்
பூசுரரிலே சைவ புரந்தர பண்டிதர் தாளும்
பாசுரம் கொண்டே பாடிப் பல்காலும் வணங்குவமால்
வேதத்தின் சுரங்கள் மாறாது ஓதும் மேலான சடைய பரமேசுர பண்டித குருவின் விளங்கிய மலர்ப் பாதங்களையும், அந்தணரில் சிறந்த சிவாகம பண்டிதர்களின் திருவடிகளையும் இனிய பாடலல் பாடித் துதித்துப் பலகாலமும் வணங்குவோம்.
No comments:
Post a Comment