ஆறுகால் உள் என்னினும்
அடர் மழையால் சேறு
ஏறலால் அங்கும் இயம்பிய
தொட்டி ஏற்றதுவாம்
ஊறு பன்னல் வித்து ஆதி
ஊட்டிடும் அனுப்பானம்
வேரும் வேண்டுமோ தாகத்துக்கு
இயற்றுதல் மேதை
ஆறும் வாய்க்காலும் பக்கத்தில் உள்ளன என்றாலும் அடை மழை காலத்தில் அவை சேற்று நீராக வரும். ஆதலால் அங்கும் தண்ணீர்த்தொட்டி அமைப்பது சாலப்பொருந்தும். ஆவினங்களின் தாக விடாய் நீங்க அந்த நீர்த்தொட்டியின் சுத்தமான தண்ணீரே போதுமானது பருத்தி விதை, தவிடு, பிண்ணாக்கு முதலான தீனி கூடத் தேவை இல்லை. ஆவினங்கட்கு நேரம் தவறாது நீர் ஊட்டுதலில் நீ புதன் போன்ற கணக்கனாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment