பூத்தானம் உற்றோனும் பூத்தானம்
பெற்றோனும் புரம் அட்டோனும்
காத்தானம் உற்றோனும் காத்தான் நம்
கருமம் எனக் கழறும் தேவன்
கூத்தான் அச்சுதற்கு ஆழி கூத்தானம்
கொடுத்ததினால் கொண்ட பேரான்
மூத்தானம் ஒழுகவரும் மூத்தான் அம்
சரண் பணிந்து முன்னி வாழ்வாம்.
தாமரைப் பூவை இருப்பிடமாகப் பெற்ற ப்ரம்னும் பூமியைத் தானமாகப் பெற்ற திருமாலும், முப்புரம் எரிந்த சிவபெருமானும், கற்பகச் சோலையை இருப்பிடமாகக் கொண்ட இந்திரனும், நம் செய் கருமங்களைக் காப்பாற்றும் கடவுள் என்று சொல்லுகின்ற தேவன்; விகடக்கூத்து ஆடிய திருமாலுக்குச் சக்ராயுதத்தைத் தானமாகக் கொண்டுத்ததினால் விகட சக்ர விநாயகன் என்ற திருப்பெயரைக் கொண்டவன்; மும்மதங்களும் ஒழுகும் யானை முகத்தைக் கொண்ட முதல்வனான விநாயகப் பெருமான் திருவடியைப் பணிந்து வாழ்வோம்.
No comments:
Post a Comment