Tuesday, 7 July 2009

புஞ்சைமேல் நஞ்சை VS நஞ்சைமேல் புஞ்சை

வாசகர்களுக்கு வணக்கம்,

நன்செய்! புன்செய் நிலம் என்ற பாகுபாடு, தமிழக விவசாயத்தில் காலங்காலமாக இருந்து வருகிறது. எனக்கு தெரிந்த வரை நன்செய் நிலம் (நன்மை+ செய்யும் + நிலம்) என்பது நல்ல நீர் மற்றும் மண் வளமிக்க நிலம். பொதுவாக ஆற்றுப்படுகைகளில், குல, ஏரிக்கரைகளில் காணப்படும் ஒன்று. நல்ல செல்லிப்பான பயிர் விளைச்சலை நித்தமும் தர வல்லமைமிக்க நிலங்களாகும். ஆற்றில் மேட்டுபகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் வண்டல்கள் படிந்து பூமியை வளமாக்கி இருக்கும்.

புன்செய் நிலமானது, பொதுவாக (புன்மை + செய்யும் + நிலம்) அவ்வுளவு செல்லிபான வளங்கள் இல்லாத பூமி. பெரும்பாலும், நீருக்கு மலையை நம்பியே இருக்கும், வருடத்தில் சிலகாலம் கிணற்றை நம்பி இருக்கும் அவ்வுளவே! இவை பெரும்பாலும் மேட்டுபகுதிகளில் ஆற்றின் நீர் பிடிப்பு ப்பகுதிகளில் அதிகமாக காணப்படும். கடுமையான மண் அரிப்பின் காரணமாக மண் வளமிழந்திருக்கும்.

ஆக, இதன் அடிப்படையில் இந்தியாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் நிலப்பரப்பை பார்த்தாலோ, கடலிலிருந்து நில மட்ட உயரம், மழை பெய்யும் அளவு ஆகியவற்றை கொண்டு நன்செய், புன்செய் நிலங்கள் எவைஎன்று நிர்ணயித்து விடலாம்.

அப்படி பார்த்தால், இந்தியாவில் கடலோர மற்றும் ஆற்றுப்படுகைகளே நன்செய் நிலங்கள். பின்னர் தக்கான பீடபூமி மற்றும் மத்திய இந்தியாவில் மலைப்பகுதிகள் பெரும்பாலும் மழையை நம்பிய புன்செய் நிலங்களே! இந்திய அரசின் புள்ளியியல் கணக்கின்படி 70% விழுக்காடு நிலங்கள் மழையை நம்பிய புன்செய் நிலங்களே.

அப்படி இருக்க சமீத்த்ய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இந்த புன்செய் -நன்செய் இயல்பில் ஒரு பெரும் மாற்றம் ஏற்ப்பட்டது. மேட்டுபகுதிகளில் இருந்து வரும்நீரை அங்குள்ள நிலங்களுக்கு உபயோகப்படுத்த எண்ணி அணைகள், நீர்பாசன திட்டங்கள் போன்றவற்றை அமைத்தனர். வளரும் மக்கள் தொகைக்கு உணவு உற்பத்தி என்ற பெயரில் இப்படிப்பட்ட யோசனையை முன்வைத்து வேளாண்மையின் இயல்பை மாற்றியது அரசு.

விளைவு!!

புஞ்சைமேல் நஞ்சை

மேட்டுபகுதியில், ஏற்படுத்தப்பட்ட புதிய நீர்பாசன திட்டங்கள் பல நஞ்சை பயிர்களான கரும்பு, நெல், வாழை போன்றவற்றை வளர்க்கு தூண்டியது. இதனால், புன்செய் காடுகளின் இயல்பு மாறியது. நிலங்களின் நாளடைவில் தன்மை பாதிக்கப்பட்டது. லாப நோக்கமான விவசாயம் மேலும் மண்ணின் மேல் ஒரு ரசாயனப்போரையே நிகழ்த்தி முடித்திருக்கிறது. விளைவு! மக்கள் அனைவரும் விவசாயம் செய்யா இயலாமல், லாபமில்லாமல் நகரங்களுக்கு பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். மண் இறுகி விட்டது. இலவச மின்சாரம், மற்றும் தொழில் வளர்ச்சி மற்றும் நகர மயமாக்கம் போன்றவைகளால் நிலத்தடி நீர் பாதாளம் சென்று விட்டது. இலையுதிகாடுகள் அழிந்துவிடும் சூழ்நிலையில் உள்ளது. கண்டாந்தரையில் என்ன செய்வது? போதாக்குறைக்கு மக்களும் புன்செய் உணவுகளை (கேப்பை, கம்பு, சோளம்) போன்றவற்றை விட்டு அரிசிக்கு மாறி கைகால் செத்து பொய் விட்டனர். இந்த திடீர் உணவு மாற்றத்தால் அதிகரித்தது நீரிழிவு நோயும், இதய நோய்களுமே! இவைதான் புஞ்சைமேல் நன்செய்யால் வந்த விளைவு.


நஞ்சைமேல் புஞ்சை:

இன்று நஞ்சை நிலங்களில் கடுமையான நீர் தட்டுபாடு நிலவுகிறது. நீர்ப்பிடிப்புபகுதிகளில் புன்செய் மேல் நஞ்சை பயிரானதால், நீர் கிடைக்காமல் கடை மடைப்பகுதிகள் தத்தளிக்கிறது. மிகப்பெரிய உதாரணம் காவேரி டெல்டா. தொழிலுக்கு (திருப்பூருக்கு), நகரவளர்ச்சிக்கு (சென்னை, பெங்களூரு, ஈரோடு, கோயமுத்தூர்) விவசாயம் (கீழ் பவானி, கர்நாடக அணைகள் ) என மேற்ப்பகுதிகளில் நீர்த்தேவை அதிகரித்ததால் கீழே நீர் வருவதில்லை. நீர் வந்தாலும் பட்டம் மாறி வரும்போது நெல்லும் பயிர் செய்ய முடியாது வேறு புன்செய் பயிரும் செய்ய முடியாது. அதனால் ,இப்படிப்பட்ட நன்செய் நிலங்கள் புன்செய் நிலம் போல் மாறி வருகின்றன. விவசாயமென்பது செய்ய முடியாது என்கிற நிலையில்தான் ஆற்றின் கடைமடைபகுதிகள் செல்கின்றன.


இந்த போக்கு மிக ஆபத்தானது. கடுமையான நீர் தட்டுப்பாடு, ஓரிரு தலைமுறைக்குள் மீட்டு வர முடியாத நிலத்தில் பொய் முடியும். அரசானது, இத்தனை கவனத்தில் கொண்டு இந்த நீர் பகிர்வு முறையை மாற்ற முற்ப்பட வேண்டும். ஒரே ஆற்றுப்படுகைகளில் உள்ள மக்களுக்குள் ஒரு நல்லிணக்கம் ஏற்படுத்த முற்ப்பட வேண்டும். பயிர் சாகுபடியை நிலம் மற்றும் நீர் வளத்திற்கு ஏற்பவும், மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். மேலும், நகரமயமாக்கம் கட்டுபடுத்தப்பட்டு, நீர்பிடிப்பு பகுதிகளில் permaculture போன்ற காடு-மற்ற்றும் விவசாயம் கலந்த விவசாய முறையை ஊக்குவிக்கவேண்டும்.

6 comments:

  1. Valid point yuva.. will our government take care of this.. but we have reached a state of no-return.. unless something drastic changes occur, nothing can be done much..

    ReplyDelete
  2. நிலத்தடி நீர் பாதாளம் சென்று விட்டது/


    India's Water Crisis- Must see - 3 mins

    The Economist reports how years of destructive farming practices
    threaten the gains of Punjab's green revolution.

    http://www.youtube.com/watch?v=ECehO0iwr1o


    Thanks to Pradeep Chandrasekaran for quoting this point in another forum.

    Punjab region of India and Pakistan were facing severe drought, salinity and degradation of soil fertility because of improper cropping pattern and practices. Its going to become another example like Mesapatomian civilization.

    ReplyDelete
  3. absolutely correct. But who is responsible for this? Anyway your article is an eye opener if we go through this seriously. Well done Mr. Senthil.

    ReplyDelete
  4. http://www.agriculturetheaxisoftheworld.com/2010/04/blog-post.html

    ReplyDelete