இன்ன பல்சிறப்பு ஏர்த் தொழிற்கு
உள் எனில் அடியேன்
தன்னர் இத்தொழில் நடத்துதற்கு
இலக்கணம் நவில்க என்று
உன்னரும் பல உயிர்களை
ஊட்டுதற்கு அமைந்தோன்
அன்ன மாதவன் அடிமலர்
முடிஉற அணிந்தான்.
மரபாளன் போதாயன முனிவரை நோக்கிப் பெரியீர்! பல தொழில்களையும் நடத்தும் சிறப்பியல்புகள் உழவுத்தொழிலுக்கு உள்ளனவானால் அத்தொழிலை யான் நன்கு நடத்துவதற்கு உரிய இலக்கணத்தை அடியேனுக்கு நவில்வீர்களாக என்று அவர் திருவடிகளை வணங்கிக் கேட்டனன்.
No comments:
Post a Comment