நன்செய் புன்செய் வல் ஏற்று
பாயும் நல்நிலங்கள்
முன்செய் புண்ணியம் உடையற்கு இம்
மூன்றும் வந்து அடைந்தும்
என் செய் கிற்பதோ எருது இன்றேல்
அவ் எருத்தினையும்
பின் செய் புல்லினைப் பேணி என்று
அப்புல்லைப் பேசும்.
நன்செய், புன்செய், ஏற்ற நீர் பாயும் தோட்டம் ஆகிய மூன்றும் முன் செய்த புண்ணியம் உடையவனுக்கு வந்து சேரும். அப்படி அமைந்தாலும் எருதுகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அவ் எருதுகளை வ்ளம் குன்றாமல் செய்யும் புல்லைப் பாதுகாப்பாய். அப்புல்லைப் பற்றிச் சொல்லுவோம் என்று போதாயனார் கூறுவார்.
No comments:
Post a Comment