பொன் நிலம் தனில் புரந்தரன் போல்
புவிக்கு எல்லாம்
மன்னன் ஆகிலும் நீதி இன்றேல்
வலி அழிவான்
எந் நிலங்களும் பல உளான் ஏனும்
ஈடு ஏற்றும்
புன்னிலம் கொளான் பொலிவு எலாம்
வை அழல் போலும்.
பொன்னுலக இந்திரன் போல உலகுக்கு எல்லாம் ஒருவன் மன்னன் ஆனாலும் அவனிடம் நீதி இல்லையானால் அவன் வல்லமை அற்றவன் ஆவான். அது போல உழவன் பல நிலங்களை உடையவனாக இருந்தாலும் குடும்பத்தை முன்னேற்றம் செய்யும் புல் நிலத்தை வளம் செய்து கொள்ளான் என்றால் அவன் செல்வப் பெர்க்கு எல்லாம் வைக்கோல் போரில் பற்றிய தீ அப்போரை அழிப்பது போல் அழித்து விடும்.
No comments:
Post a Comment