பந்த வாழ்க்கையைப் பாலர்கள்
ஆதியாய்ப் படிப்பாம்
சொந்த வாழ்க்கையைச் சொல் கவி
யால் வினவுவர் போல்
இந்த வாழ்க்கையோ ஏர் முதல்
வினாதற்கு ஏற்றமையால்
முந்த வைகறை கோவளம்
பார்ப்பது முறையே
ஒருவனின் குடும்ப வாழ்க்கையையறிய முதலில் அவனது குழந்தைகள் நலனைக் கேட்டும், ஒருவனின் கல்வியின் நலத்தை அவன் அறிந்த நூல்களைக் கேட்டும் அறிந்து கொள்ளுதல் போல இந்த உழவுத் தொழில் ஏரை முதலாக வைத்துக் கேட்டுத் தெரிவதற்கு ஏற்றதாக உள்ளதால் உழவன் அதிகாலையில் அந்த ஏரை நடத்தும் பசுவின் வளத்தைச் சென்று கவனிப்பது முறைமையாம்.
No comments:
Post a Comment