எந்தக் காலும் ஓர் இயற்கையில்
செயற்கையும் இணங்கி
வந்து உற்றால் பொனின் மலர் மணம்
மலிந்தது போலாம்
முந்தக் கேட்பது முறைமையே
ஆயினும் முன்னின்று
அந்தத் தாரியில் நடப்பதே
அரும்பலன் அமையும்
எக்காலத்திலும் இயற்கையில் செயற்கையும் ஒத்து வந்து விடுமானால், அந்த அமைவு பொன் மலர் மணம் நிறைந்தது போன்றதாம். ஒரு காரியத்தை தொடங்குமுன் அதன் செயல் முறைகளை, அறிந்தார் வாய்மொழி கேட்டுக் கொள்ளுதல் முறைமையே ஆனாலும், கேட்ட பின்பு அந்த வழியில் முன்னின்று நடப்பதே அரும் பலனைத் தரும்.
No comments:
Post a Comment