ஆவுண்ட உணவின் சாரம்
அருந்தும் நீரால் மிக்குண்டு
நாவுண்டு தாகம் உண்டு
நல்ல நீர் ஆசை உண்டு என்று
ஓர்வு உண்டே மறந்து நீட்டித்து
உறுகண் நீரால் செய்யற்க
கோவுண்டு களித்திட்டாலும்
கொடுமை சிவது நன்று அன்றால்.
ஆவினம் உண்ட உணவின் சத்தானது குடிக்கின்ற நல்ல நீரினால் தான் மிகுவது உண்டு. அவைகட்கு நாவும், தாகவிடாயும், நல்ல நீர் ஆசையும் உண்டு என்பன யாம் அறியாதனவா? நீ மறதியால் கால் தாமதம் செய்து, நீர் ஊட்டுதலில் அவைகளுக்குத் துன்பம் செய்யாதே! அவ்வாறு தாமதித்து நீர் ஊட்டினாலும் அது குடித்து மகிழும் என்றாலும் அப்படி ஆவினங்களைக் கொடுமைப்படுத்துவது நல்லதல்ல. காலா காலத்தில் தண்ணீர் ஊட்டுவாயாக.
No comments:
Post a Comment