மண் உறாதது சுவர் ஒரு
புறத்தது உள் மட்டத்து
எண் உயர்த்து உறும் தூம்பினோடு
இழி துளைத்து என்றூழ்
உண் ஒணா இறப்பினது உயர்வு
அகலம் நேர் பேர்ப்பது
அண்ணல் அம் தொழுக் கூவத்துக்கு
அணித்து நீர்த் தொட்டி
நீர்த் தொட்டியானது மன் விழாத சுவர் ஒரு புறத்தில் அமைந்தது ஆகவும், அடிமட்டம் உயர்ந்து தண்ணீர் வெளியே செல்லும் துவாரத்துடன் அழுக்கு நீர் வெளிச் செல்லத் தாழ்ந்த மற்றொரு துவாரம் உடையது ஆகவும், சூரியனின் வெப்பம் படாத தாழ்வாரத்தை உடையது ஆகவும், உயரமும் அகலமும் அளவொத்து இருப்பது ஆகவும், பசுத்தொழுவத்துக்கும் கிணற்றுக்கும் பக்கமாக அமைந்துள்ளதாகவும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment