ஆர்க்கும் நல் தெய்வம் பசு எனும்
ஆகம மறைகள்
ஏர்க்கும் நல்தெய்வம் இதனின் ஊங்கு
இல்லையாம்: எண்ணி
நீர்க்கும் புற்கும் நல் நிழலுக்கும்
நேரம் முன் இயற்றிப்
பார்க்கும் தந்தொழில் பின்படில்
உழும் தொழில் பலிக்கும்
ஆகமங்களும், வேதங்களும் யாவர்க்கும் நல்ல தெய்வம், பசு என்றே கூறுகின்றன. ஏர்த்தொழிலுக்கும் இதனை விட நல்ல தெய்வம் வேறு இல்லை என்று எண்ணி உழவன் அவை அருந்தும் நீர், மேயும் புல், தங்கும் நிழல் ஆகிய வசதிக்கு உரிய நேரத்தையும் செயலையும் முன்னர் அமைத்து, தனது தொழில் நலங்களைப் பின்னால் வைத்துக் கொள்வானேயானால் அந்த உழவனுக்கு உழுதொழில் சித்திக்கும்.
No comments:
Post a Comment