கிடை கிடத்தலும் வண்டல்
கூடலும் கெடு கந்தம்
உடையது ஆதலும் சுடுதலும்
தாம் உழக்குதலும்
அடை வடாதிகள் அழுகலும்
அடை நிலக் கேடும்
மிடறு அழுந்தலும் மிகக் குனிந்து
அருந்தலும் விடுக்க
கால் நடைகள் குடிக்கும் தண்ணீர் கிடை கிடத்தலும், சேறு படிதலும். துர்நாற்றம் வீசுதலும், சூரிய வெப்பத்தால் சுடுதலும் கால் நடைகள் தம் காலாற் குழப்புதலும், இலை, பூ முதலியவை விழுந்து அழுகிக் கிடத்தலும், நீர் அமைந்த களர் நிலக்கேடும் குடிக்கும் போது குரல்வளை அழுந்துதலும் மிகக் குனிந்து குடித்தலும் தவிர்க்கப்பட்ட வேண்டும்.
No comments:
Post a Comment