1 விருக்ஷம்
தர்மார்ந்த காமமோக்ஷத்தை அடைய விரும்புவோர் ஜனங்களுக்கு ஸ்நானபானாதிகளுக்கு உபயோகமுள்ள ஒரு கிணறு வெட்டுவது உத்தமம். அப்படிப் பத்துக்கிணறுகள் வெட்டுவதைக்காட்டிலும் ஜனங்கள் இறங்கி அதினின்றும் ஜலம் எடுக்கும்படியான ஒருவாவிவெட்டுவது மேலானது. அப்படி 10-வாவி வெட்டுவதைக்காட்டிலும் சகலப்ராணிகளும் இறங்கி தண்ணீர் குடிக்கவும் ஸ்நானம்செய்யவும் உபயோகமான ஒரு குளம் வெட்டுவது நலம். அப்படி 10 குளம் வெட்டுவதைக்காடிலும் ஒரு சற்புத்திரனை அடைவது மேலானது. அப்படி 10 சற்புத்திரர்களை பெருவதைவிட சகலபிராணிகளுக்கும் நிழலைக் கொடுக்கக்கூடிய ஒருவிருக்ஷத்தைப் பயிர் செய்வது சிரேஷ்டம். அப்படிப்பட்ட அநேக விருக்ஷங்களைப் பயிர் செய்யும்மனிதர்கள் எப்பொழுதும் புண்ணீய லோகத்தில் வஸித்துக்கொண்டு ஸ்கலபோகபாக்கியங்களையும் அடைந்து களித்துவாழ்வார்களென்று மகரிஷிகள் அநேக கிரந்தங்களில்முறையிட்டிருக்கிறார்கள்.
1 விருக்ஷம் (மரம்) = 10 சற்புத்திரர்கள் (மகன்) = 100 குளங்கள் = 1000 வாவிகள் = 10,000 கிணறுகள்
இ.எ. 1 விருக்ஷம் (மரம்) = 10,000 கிணறுகள்
ஆதாரம்: விருக்ஷ சம்ரக்ஷன தீபிகை
No comments:
Post a Comment