நன்றி: பசுமை விகடன்
விவசாய வேலையை அடிமைத்தனம் என்று நினைக்கும் ஒரு முதல்வர். ம்ஹும்ம்.....முதல்வரின் திருவாரூர் வாழ்க்கை மற்றும் சம்பவங்களால் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரோ என்று நினைக்கிறேன்.
இல்லையே! கம்புட்டரை ஆதாரிக்கும், மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில்செம்மொழி கவிதை பாடும் கலைஞர் இவ்வளவு பழமைவாத சிந்த்தனைகொண்டிருப்பாரா? இருக்கவே இருக்காது. நிச்சயம் கலைஞர் விவசாயிகளைதனது பழைய காழ்ப்புணர்ச்சியுடன் பழி வாங்குகிறார் என்றே நினைக்கிறேன். அவருக்கு உள்ளுக்குள் ஏகோகப்பட்ட மகிழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். உடன் ஓட்டு வங்கியும் கிடைக்குமே.
ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். பரம்பரை விவசாயிகளை பழி வாங்கியாயிற்று. ஓட்டுக்கு அடித்தளம் அமைத்தாயிற்று.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.2.86 லட்சம் மோசடி
ReplyDeleteFirst Published : 18 Jul 2009 03:31:00 AM IST
Last Updated :
மதுரை, ஜூலை 17: மதுரை அருகே நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.2.86 லட்சம் மோசடி செய்த ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், எழுத்தர் ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மாத்தூர் கிராமம். இக் கிராமத்துக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள ரூ. 2.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணத்தை அப்பன் திருப்பதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊராட்சி நிர்வாகம் "டெபாசிட்' செய்தது.
இந்த டெபாசிட் தொகை ரூ. 2.86 லட்சத்தையும் ஊராட்சித் தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் மதினா மகிரியா, எழுத்தர் தங்கப்பாண்டியன் ஆகியோர் பணிகள் முடிந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடி சம்பவம் வட்டார துணை அலுவலர் சங்கரலிங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, கிழக்கு ஊராட்சி ஆணையர் மகேசன் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
எழுத்தர் கைது: புகாரின்பேரில் ஊராட்சித் தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் மதினா மகிரியா, எழுத்தர் தங்கப்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், தங்கப்பாண்டியனை மட்டும் போலீஸôர் கைது செய்து விசாரிக்கின்றனர். தலைவர், துணைத் தலைவரை தேடி வருகின்றன.
Thanks to Dnamani
06 Feb 2010 06:11:57 AM IST
ReplyDelete100 நாள் வேலை திட்டத்தால் விவசாயப் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் புகார்
திருவண்ணாமலை, பிப்.5: திருவண்ணாமலை தாலுகாவில் 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார் விவசாயி சற்குணன்.
எடப்பாளையம் வழியாக செல்லும் டி-5 நகர பேருந்து திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுகிறது. அதை மாற்றி 6 மணிக்கு இயக்க வேண்டும். இதனால் 5 கிராம மக்கள் பயன்படுவர் என்றார் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அழகேசன்.
சொரகொளத்தூர் கிராமத்துக்கு கிராம நிர்வாக அதிகாரியை சரியாக வருவதில்லை. இதனால் பல்வேறு சான்றிதழ்கள் கோரி வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றார் விவசாயி காமராஜ். மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் பேசினர்.
© Copyright 2008 Dinaman