கல்வி என்பது யாதெனில்.....!! சிந்திக்க ஒரு நிமிடம்:
மத்திய பேருந்து நிலையம், மதுரை. ஒரு முதியவர் பக்கத்தில் ஒரு சிறியவன். பெரியவர் பேச ஆரம்பிக்கிறார். எங்கடப்பா போற? நான் காலேஜுக்கு போறேன். என்ன படிக்கிற? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அப்படியென்ன புரியாத விஷயம். நீ படிச்சத புரிய மாதிரி மித்தவங்களுக்கு சொல்ல முடியலைன்னா அப்புறம் நீ இத்தனை வருஷம் படிச்சு என்ன பிரயோஜனம்? அந்த பையனுக்கு தூக்கி வாரிப்போட்டது. மிகவும் எளிமையான மிகவும் தெளிவான கேள்வி. இந்த கதையை யாரோ கூற, எங்கோ கேட்ட ஞாபகம் (வயசாகுதுல்ல மறந்திடுச்சு, யாரும் கண்டுகாதீங்க) ! ஆனால், இது எனது கல்லூரி வாழ்க்கை மற்றும் சிந்திக்கும் திறனையே மாற்றியது என்றால் அது மிகையில்லை.
எனது அனுபவமும், விவசாய கல்வியும்:
விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும், விவசாயத்தை பிரதானமாக (குடுமபத்தின் அன்றாட செலவுக்கு) செய்யவில்லை எங்கள் குடும்பம். அப்பா ஆசிரியரானதால், அந்த வருமானத்தில் விவசாயமும் (முதலீடும்), குடும்பமும் ஓடியது. இரண்டாவது வருமானம் இல்லையெனில் விவசாயத்தை செய்ய இயலாது. அதில் வரும் சொற்ப லாபம் அடுத்த முதலீட்டிற்கு குடும்ப செலவுகளுக்கும் கட்டுபடியாகாது.
அம்மா முழுக்க முழுக்க விவசாயத்தையும், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டாள். வீட்டில் எப்போதும் ரெண்டு மாடு இருக்கும். முன்னெல்லாம் பத்து பதினைந்து உறுப்பிடிகள் இருந்தது (ஆடு, மாடு, எருமை, கோழி என). வீட்டில் சான எரிவாயுக்கலன் இருப்பதால் என் அம்மா மாடுகளை இன்று விற்க முற்ப்படவில்லை. இதுவரை எங்கள் வீட்டில் சிலிண்டர் வாயு வாங்கியது கிடையாது. அப்பாவிற்கு, இரண்டு வேலை காலையில் எழுந்து மாடுகளுக்கு நீர்காட்டுவது முதல் பால் கண்டு சென்று ஊற்றுவது வரை செய்து விட்டு பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும், பின்பு மாலையில் திரும்ப இதே வேலை. நிலத்தில் எதுவும் பயிரிட்டிருந்தால் அவற்றை மேற்ப்பார்வையிடுவது, வேலைக்கு தேவையான வேலையாட்களை கொண்டு சேர்ப்பது என்பது அப்பாவின் வேலையாக இருந்தது. முன்பெல்லாம் 2001 வரை மூன்று போகம் நெல் விளையுமாதலால் வருடம் முழுவதும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வேலை ஓயாது. எப்போது அது ரெண்டு ஒன்று என்று ஆகிவிட்டதால் வேலையும் குறைவு. மானாவாரி நிலத்திற்கு நீர் வருடம் நான்குமாதமே வருவதால் அதில் பெரிய வேலையும் வருமானமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு குடும்ப சூழலில், விவசாயம் மற்றும் பள்ளிபடிப்பு (ஆங்கில வழி) என்று எனது இளமை கழிந்தது.
விடுமுறை நாட்கள் முதல் கொண்டு காடு, வயல், ஆடு மாடு மேய்ப்பது என சுற்றித்திரிந்தேன். எனக்கு என ஒரு பூந்தோட்டம், அதில் பல பாடங்களை பள்ளியில் படிக்கும் போதே கற்றுகொண்டேன். விதைகளை சேகரிப்பதும், அறிய வகை செடிகளை கொண்டு சேர்ப்பதும் எனது பள்ளிபருவத்தின் பொழுது போக்கு.
என்னை எப்போதும் வீட்டில் இதற்க்கு படி அதற்க்கு படி என்று வற்புறுத்தியது கிடையாது. பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் காலத்தில் எந்த ஒரு பெரிய குறிக்கோளுமின்றி பொறியியல் மற்றும் வேளாண் படிப்பிற்கு விண்ணப்பித்தேன் (மருத்துவத்திற்கு மதிப்பெண் குறைவானதால் செல்லவில்லை). வேளான்பல்கலையில் தோட்டகலை தொழிநுட்ப பாடத்தை எடுத்தேன். முதன்முறையாக வணிகம் சார்ந்த தொட்டகலைய ஊக்குவிக்க பல்கலையில் மேற்கொண்ட முயற்சி. அதனால் வாய்ப்புகள அதிகம் என்று சேர்ந்தேன். என்னுடன் இருபது மாணவர்கள் இத்தனை எடுத்திருந்தார்கள். அதில், பத்து மாணவர்கள், பத்து மாணவிகள். அனைவரும், பல்வேறு சூழ்லில் வளர்ந்தவர்கள். பெரும்பாலும் (75%) நகரத்திலும், விவசாயம் அல்லாத கிராம சுழலிலும் வளர்ந்தவர்கள்.
களபயிற்சியும், தொழிற்கல்வியும் :
இவர்களுக்கு விவசாயத்தை ஏன் செடிகளை புரிந்து கொள்வதிலேயே சிரமம் இருந்தது. "ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்" அது எங்கள் கல்லூரியில் நிதர்சனமாக பார்த்தேன். பாடம் பயிவிக்கும் முறையில், ஆங்கிலேயரது பணியை கையாளும் பல்கலை, எப்போதும் வெறும் ஏடுகளையே வைத்து கற்போரை உறங்க வைத்தது. மாணவர்களின் பின்புலம் தெரியாமல் அவர்களுக்கு போதனை செய்து கொண்டிருப்பது போன்ற விபரீதம் எங்கும் நிகழாது. நேரமும், பொருளும்தான் விரையம்.
மருத்துவம் பயிலும் மாணவர்கள் களபயிற்சி என்பதை ஒரு வருடம் செய்கிறார்கள். அவையும் செய்வதற்கு எளிதானதால், கல்லூரிகளாலும் அதனை செவ்வனே வழங்க முடிகிறது (ஒரு சதுர அறையில் பல கருவிகளையும் நோயாளிகளையும் கொண்டு முடித்து விடலாம்). அது போலவே பொறியியற்துறை. சாதனங்களும், பயில்விப்போறும் இருந்தால் போதும்.
களபயிற்சியும், வேளாண்கல்வியும் :
1960 களில்:
ஆனால், விவசாயம் என்பது பல்துறை சார்ந்தது. களபயிற்சி என்பது ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெரிய கிராமத்தில் இருந்தாலே ஒழிய அதிலிருக்கும் கஷ்ட நஷ்டங்களை மாணவர்கள் பயில முடியாது. விவசாய பல்கலை தொடங்கிய ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பாலும் விவசாய குடும்பத்தில் இருப்போரே விவசாயம் பயில வருவர். அதனால், களபயிற்சியின் முக்கியத்துவம் தேவைப்படவில்லை. பெயரிற்கு பாடத்தில் இருக்கும். அதனையும் ஏற்று மாணவர்களை மூன்று மாதம் கிராமத்தில் தங்கி கணக்கெடுக்க அனுப்புவர் (வெள்ளைக்காரன் கையாண்ட யுத்தி). விவசாய பல்கலை மாணவருக்கு அடிப்படை விவசாய கிராமிய சூழல் புரிந்ததால் பல துறைகளிலும் செம்மையான ஆராய்ச்சிகளை திட்டங்களை கொண்டுவர செய்படுத்த முடிந்தது.
2000 களில்:
ஆனால், இன்று நான் படிக்கும் இந்த காலகட்டம் அப்படியல்ல! விவசாயத்தை அறியாத புரியாத மாணவர்கள் விவசாய கல்லூரியில் விவசாயத்தை கற்க வேண்டும் என்று வரும்போது அவர்களுக்கு களபயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதனை உணராது, பல்கலையும் பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுதுகிறதே தவிர, இருக்கும் பாடத்திட்டம் மாணவர்களின் புரிதலை வளர்க்கிறதா? என்று ஒருநாளும் சிந்தித்த பாடில்லை. மாணவர்களும் ஒரு செயற்கையான சூழ்நிலையில் விவசாயத்தை படித்து விட்டு பின்பு மேற்ப்படிப்பிலும் சரி, வேலை செய்யும் போதும் சரி கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படித்ததிற்கும் வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லாமல் போய் விடுகிறார்கள். மாணவர்களை வேளாண்மையில் ஒரு குறிக்கோளுடன் செயல்பட வைக்காத பாடத்திட்டத்தினால் வேளாண்மை மேலும் நலிவுறும். போதிய அறிவில்லாத வேளாண் பட்டதாரிகளினால் அரசுக்கும் பயநில்லவிட்டாலும் விபரீதம் ஏற்படாவிட்டால் சரி.
விவசாய பல்கலையில் மாணவிகளின் சேர்க்கையும், வேளாண் முடக்கமும் :
ரெண்டாவது பெரிய கொடுமை பெண்களின் விவசாய படிப்பு. கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள். ஒரு பெண் ஒரு குடும்பதிற்க்கே கல்வி பயில்விப்பாள் என்றெல்லாம் கூறினார் பாரதிதாசன். இன்று வேளாண் பல்கலையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 70% விழுக்காடு. வேளாண், கிராமிய பொருளாதாரத்தின் அடிப்படையே பெண்கள்தான் என்று நினைக்கையில் இத்தகைய பெண்களின் வேளான்படிப்பு, கிராமத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கும் என்றே தோன்றும். ஆனால், இங்கும் கூட மேற்குறிப்பிட்ட விவசாய பின்னணிஇல்லாத குடும்பங்களிளிருந்தோ அல்லது விவசாயமிருந்தும் அதை பாராத பெண்கள்தான் அதிகம் சேர்கிறார்கள். அதிலும், அவர்கள் நோக்கம் வேளாண்மையை கற்பதல்ல. அக்ரி என்ற பெருமை, முடித்தால் வங்கி வேலை, நிழலோடு இருக்கலாம், கட்டிகொடுக்க எளிது என பல பெற்றோர்கள் விருப்பபடுவதால் இவர்கள் வந்து படிக்கிறார்கள். படித்து முடித்தும் திருமணமாகி எங்காவது சென்று தொழிந்து போகிறார்கள். இப்படி இருக்கிறது இவர்கள் நிலை.
முடங்கிய வேளாண்கல்வியும், விவசாய முன்னேற்றமும்:
இப்படி அடிப்படை புரிதல் இல்லாத தரம் குறைந்த வேளாண் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை பின்னாளில் அவர்களையே பயில்விக்க பணியமர்த்துகிறது. கிழிந்தது கிருஷ்ணகிரி! இத்தகைய அடிப்படை புரியதல் இல்லாத ஆசிரியர்களிடம் பயிலும் போது மனம் வெதும்பியதுண்டு. எதிர்த்து கேள்வி கேட்டு பின் பதில் தெரியாமல் முழிக்கும் இவர்களை கண்டு பரிதாபப்பட்டதுமுண்டு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வருடம் தோறும் ஆயிரகணக்கில் ஒன்றிக்குமுதவாத வேளாண் பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன். வேளாண்மை சீர் சீர் கெட இந்த வேளாண் பல்கலையும் விழிப்பில்லாமல் சீர்கெட்டு விட்டது. வேளாண்மையை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் பாணியிலேயே ஆராய்ச்சி கூடத்திற்குள் அடைத்து விட்டது.
திட்ட குழு தலைமை அதிகாரி திரு. மாண்டேக் சிங் அலுவாலியா ஒரு முறை ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்களால் அத்துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன. வேளாண்மை பயிலும் மாணவர்களால் ஏன் வேளாண்மை வளரவில்லை என்று கேள்வி எழுப்பினாராம். எங்கிருந்து வளரும். வேளாண் மாணவர்களுக்கு புரிதல்லளிக்காத, நம்பிக்கையளிக்காத வேளாண் கல்வியால், அதனை பயின்று வெளி வந்த பட்டதாரிகளால் எப்படி நாட்டிற்கு ஸ்திரமான திட்டங்களை வளர்ச்சிப்பணிகளை, ஆய்வுகள் மேற்க்கொள்ள முடியும்?
காலத்திற்கும், மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வேளான்கல்வியை மாற்றியமைக்க விட்டால் விவசாயத்தை முன்னேற்ற நல்ல செயலாளர்களை நாடு உருவாக்க முடியாது. இதை கருத்தில் கொண்டு பல்கலையும் முடிவெடுக்க வேண்டும், பெற்றோரும், பள்ளி முடித்த மாணவர்களும் யோசித்து வேளான்பல்கலையை தேர்வு செய்வது உசிதம்.
தீர்வுகளாக நான் எண்ணுவது!
௧. வேளான்பலகலையில் மாணவர் சேர்க்கைக்கு தனியாக தேர்வுகள், முக்கியமாக வாய்முறைதேர்வுகள் நடத்தி, மாணக்கரின் ஆர்வத்தை புரிந்து இடம் கொடுக்கலாம். (பல்கலையில் சேருவோரின் எண்ணிக்கை குறைவதால் இந்த முடிவு சில வருடங்களில் எடுபடாது. பொறியியல் சேர்க்கை பனாலாகும்போது இந்த முடிவை மேற்க்கொண்டு மாணவர்களை வடிகட்டலாம்).
௨. வேளான்பல்களை மாணவர்களுக்கு தனித்தனியாக குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு பட்டம் அறுவடை செய்யும் வரை ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி அன்றாட வேலைகளில் தினமும் ஈடுபட்டு வேளாண்மையின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொள்ளும்வகையிலான களப்பயிற்சியை முதலாண்டு இறுதியிலேயே கொடுக்க வேண்டும். (நம் நாட்டில் இன்னும் 1000 விவசாயிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் இதை முன்னிறுத்துகிறேன். (குறும்பிற்கு, ஆனால் உண்மை: ----> மேலும் பேராசிரியர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்). இல்லையேல், விவசாய படிப்பிற்கு சேரும் போதே வேளாண்மையில் முக்கியமாக பட்டறிவு அனுபவம் இருக்க வேண்டும் என்று கொண்டு வரலாம்.
௩. வேளாண் படங்களுக்கான தேர்வை எழுதி கையொடிய விடாமல் அவர்களது பாட புரிதலை அலசும் வகையில் வாய்மொழிதேர்வாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (இதற்கும் ஆசிரியர்களுக்கு ஒரு புரிதல் தேவை).
௪. வேளாண் மாணவர்களுக்கு சுயமுடிவெடுக்கும், சுதந்திரமான சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டிய சில பாட திட்டங்கள் தேவை. அவர்களது, சமூக சிந்தனையை, செயல்பாட்டை வளர்க்க இது உதவும்.
௬. பல முற்போக்கு விவசாயிகளுடன் சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்தலாம். பல அரசாங்க வேளாண் வணிக மற்றும் செயலாக்க விரிவாக்க பணியாளர்களின், வேளாண் தொழிலதிபர்களின், கிராம முன்னேற்ற பணியாளர்களின், தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பணியாளர்களின் கலந்துரையாடல்களையும் வேளாண்கல்லூரிகளில் கொண்டு சேர்க்கலாம்.
௭. பள்ளியிலேயே விளையாட்டை விவசாய களபயிற்சியை பாடமாக வைக்கலாம்.
௮. விவசாய, சுற்றுசூழியல் மற்றும் இதர பயன்பாட்டு விஞ்ஞான பாடங்களை ஒரு பாடமாக வைக்கலாம்.
முடிவாக, முதலில் குட்டு போட்ட பெரியவரின் கூற்றே எனதும். புரிதல்லில்லாத ,பிறருக்கு புரிய வைக்க இயலாத கல்வியை கற்று என்ன பயன். "விழலுக்கு இரைத்த நீராகி விடும்". இவை படிப்போருக்கும், படிக்க வைப்போருக்கும் (பெற்றோர், ஆசிரியர் மற்றும் செயலாக்குனர்) புரிந்தால் சரி!!!
Hi, it's a very great blog.
ReplyDeleteI could tell how much efforts you've taken on it.
Keep doing!
I would say onething compared with other universities, TNAU is doing best. We they admit the student as per ur wish corruption will be at the most. But I support that the practical orientation is much need. The record writing, reports should be reduced. the students are copying from net and the professors are not reading anymore-waste of paper and time.
ReplyDeleteI am much afraid of next generation inside, most the professor with agri family is getting retired. Urban professors are dominating, there never practiced agri in life expect on papers and trials. The knowledege is also not sound now a days. I am sad about the students passing out from them.......
The teaching learning process is always subjected to criticism. Any one can do that . But not the one who has the concern. All the systems from ancient Gurukula to the present e learning system have been subjected to criticisms and new systems continue to evolve . Gender issues, social issues in admission etc should not be undermined under indian conditions. The Universities in the East have their own context. Sitting at a Western University hitting the East that too alma mater is unpalatable. You are having better channels to communicate your ideas and concepts to TNAU as you are still part of the university . Let your criticism be part of your concern so that TNAU shall continue to evolve. The responsibility is with not only the teachers but with students also. Both make the University. You started your journey from a village but now live at Europe; How come you have forgotten that the journey performed was thru TNAU.
ReplyDeleteSitting at a western university hitting the east that too alma matter is unpalatable///
ReplyDeleteI have expected this comment. Even just for this expected comment, I have post-poned to write this article. I am not doing this willfully, but because of real concern over TNAU and its student's future. However, I will write to the top authorities of TNAU, TN Gov't and also to few known TNAU alumnis, soon regarding this issue.
I have been criticising the kind of education with students and professors, since 2002. Professors even confess, but whats the net result. Our democratic process of bringing reforms were very slow. But, one have to understand the students future as a matter of concern. Unless, bringing it to the view of the general public like in this article and provoke the thoughts of the people of concern (like the above anonymous), it is very difficult to spark the ignition out.
Forgive me, if the subject and the way of expression hurts you.
You started your journey from village but now live at europe; How come you forgotton that the journey performed was throu TNAU////
Oops...again. If I forgot, I couldn't have made this article. I can't deny my success on which TNAU also plays a major role.
Love and concern over my host institution can be expressed in many ways and this also a way.
I really do appreciate Yuva for writing this article. What ANONYMOUS told here is also not completely wrong but he/she should understand "no one (really) want to under rate/critisize unless they have strong love on his own school/university or even a teacher". When you look at the WHOLE TNAU (11 colleges), you can see the DRAMA in each colleges. Its starts from admission, student evaluation- I personally experienced in Kalavai where the Prof's wants to give more marks to students to show that their campus is doing best in EDUCATION??? Communication of INFORMATIONS is questionable!!! VERY POOR/NO response to (few) farmers who comes to solve their probelms, the ADO, HO are no more exceptions. The list continues like that... even it does ends even after completion of the degree (getting certificates, official letters and so on...).
ReplyDeleteWell I dont deny the prime role of TNAU in my growth but I can surely say its just because of very few TEACHERS (one who really want to teach us) existing in TNAU. The people have lot of respect in our university its all bcos of its service done before (2003- I was not part of TNAU before this year).
Atleat this kind of articles will bring some awarness among poeple and students which will make them to think twice/thrice before taking a final decision. I beleive it will bring some spark with students who wants to bring some reforms in our society through TNAU.
நம்ம கல்வி இப்படி இருந்த இது எப்படி நடக்கும்...
ReplyDeleteICAR chief wants farm graduates to be job creators
Monday, Feb 21, 2005. Hyderabad.
THE Director-General of the Indian Council of Agricultural Research, Dr Mangala Rai, emphasised the need to prepare agricultural graduates to start their own agri-business, preferably in the rural areas.
The agricultural graduates "must prove to be job creators and not job seekers," he said pointing out that a study done by Applied Manpower Research Institute indicated that 43 per cent of the agricultural graduates and 23 per cent of the postgraduates were unemployed after completion of their degree programme in 1999-2000.
The same study, he said, had revealed that by 2010, the cumulative excess supply over demand at current employment rates would be 34,000 for agricultural graduates and 6,000 for veterinary graduates as the existing annual demand for agricultural and veterinary graduates was about 7,000 and 1,550 respectively.
Addressing the 36th annual convocation of the Acharya N.G. Ranga Agricultural University (ANGRAU) here recently, Dr Rai said that unemployment among the youth in rural areas had also increased between 1993-94 and 1999-2000 from 9 per cent to 11.1 per cent among males and from 7.6 per cent to 10.6 per cent among females.
Casual wage labour in the rural areas increased from 29.7 per cent of rural employment in 1977-78 to 37.4 per cent in 1999-2000.
Given this scenario, Dr Rai felt that it was essential for the agricultural education system (AES) to innovate course curricula suiting to concerns and issues relevant to real life.(நல்லா சொன்னீங்க!)
In essence, AES should "aim at producing professionals and academicians who are self-confident, self-reliant and self-competing individuals." (நம்ம கல்வி இப்படி இருந்த இது எப்படி நடக்கும்...)
Have u send this to any official belongs to TNAU. Say the truth boldly. Let them know what an aluminus think when he faces international situations.
ReplyDeleteSARAVANAN.V
Technical executive
Cadbury India Ltd.
மாணவர் நலனை விடுங்க......... இவர்களும் அதிருப்தி.....
ReplyDeleteவேளாண் பல்கலையை பூட்டும் போராட்டம்
ஈரோடு: "விவசாய விரோத ஆராய்ச்சிகளை செய்து வரும் வேளாண் பல்கலைக்கழகத்தை பூட்டும் போராட்டம் நடத்துவது' என தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் ஈரோட்டில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடந்தது. விவசாய போராட்டத்தின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு ஜூலை 6ம் தேதி காலை 11 மணிக்கு பெருமாநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி கூட்டம் நடத்துவது. ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் ஆறுகள், ஓடைகள், கால்வாய்களில் சாயக்கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. நச்சுத்திட கழிவுகள் திறந்த வெளிகளில் மலைபோல் குவிக்கப்படுகிறது. இதுபோன்று மாசுப்படுத்தும் சாயச்சலவை, தோல் மற்றும் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகமும், மாசுகட்டுப்பாடு வாரியமும் செயல் இழந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தை விவசாயத்தில் தடை செய்யக்கோரி தமிழக அரசிடமும், வேளாண் பல்கலைக்கழகத்திடமும் பலமுறை கோரப்பட்டும் அவர்கள் இதை ஏற்கவில்லை. விவசாய நலன்களை புறக்கணித்து அமெரிக்கா மற்றும் பன்னாட்டு வேளாண் கம்பெனிகளின் நலனை முன்னிறுத்தி ஆய்வுகளை வேளாண் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. "நமது நிலம், நமது விதை' என்ற முழக்கத்தை முன்னிருத்தி, விவசாய விரோத ஆராய்ச்சிகளை செய்து வரும் வேளாண் பல்கலைக்கழகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர்கள் அப்பன் குமாரசாமி, பொருளாளர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட அமைப்பு செயலாளர் கண்ணையன், ரத்தினசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to தினமலர் daily.
When computers were introduced by Mr.Rajiv Gandhi, the entire work force opposed across the country as they feared computer would rob away the jobs. But on the contrary IT sector happen to absorb the bulk of the youth . When tractors were introduced at Tanjore the communists opposed vehemently.... now what happened ... without combined harvester no cultivation of paddy.... Chemical Vs Bt Cotton? which is more harmful? The chemical firms are behind all such noise against GMs. These activists are propelled and fueled by the chemical giants no doubt.
ReplyDeleteLet them fight the pollution out of textile industries, waste out of leather industries and put an end to explosion of population...let them stop their sons and daughter getting migrated to Developed countries....
One logical question:
How to keep agriculture at eco nature level when every sector make headway with hightech products?
Are you prepared to get back to nomadic life which is tension free and absolutely natural?
Get rid off your mobile and give your ears to sounds of nature; Throw away your branded dress and get dressed with twigs to be intimate with nature; Avoid cars and planes and walk like cattle and have the full joy of life; Then shut your computer once for all and add real colours to your life And try to live for a day then you will understand.
Apply break to science in all sectors why to agriculture alone? Get back to village and be joyful , dive in rivers, run behind goat, relax at grandmas back , sing and dance at village festival.
I salute with reverence whenever I pass thru Arvind eye Hospital for the vision they have restored to me and equally iam saluting the Science behind the eye surgery.
Attention above Anonymous (Commented on Saturday, June 06, 2009 5:31:00 AM )
ReplyDeleteI didn't find much relevance in your comments to the subject of this article. May be you have commented from different point of view. I will posts a separate article for you comments.
However, for your logical questions,
How to keep agriculture at eco nature level when every sector make headway with hightech products?
break பிடிக்காத பொருளாதார வளர்ச்சி என்ற விமானத்துக்கு break தான் agriculture. அதிலும், இயற்க்கையோடு இயைந்த விவசாயம் தடுமாறி விழும் விமானத்துக்கு ஒரு ஆறுதலான parachute. எனக்கு இந்த parachute வேணும். இப்பவே எடுத்து ஆயத்தமா வச்சுக்கிறேன்....மித்தவங்களுக்கு யோசிப்பாங்க!!
Are you prepared to get back to nomadic life which is tension free and absolutely natural?
மனமிருந்தால் மார்க்கபந்து:P (sorry) மார்க்கமுண்டு.....:)
அதுசரி நாம இபோ வாழ்றது nomadic life -நாடோடி வாழ்க்கை (MGR படம் இல்லைங்க), இல்லைங்களா????
One man in our country had an eternal vision on this. But, we never heed to it. Now, we are facing the consequences. He said, “I believe that if India and through India the world is to achieve real freedom then sooner or later we shall have to go and live in the villages in huts, not in palaces.
Millions of people can never live in cities and palaces in comfort and peace”.
That person is none other then Mr. M.K. Gandhi.
Mr. Anonymous,
ReplyDeleteIts sad that you dont know the difference b/w the machines and living beings..
Science can invent and advance on inorganic things.. at the same time, when it touches the living matter, the result will be unimaginable..
Genetically modifying a crop is akin to genetically modifying any living being, to suite our needs.. if it goes on uncontrolled, then the entire living population would be contaminated with mutated/modified genes, whose impact cannot be known in a short time..
I dont know how did you come across the conspiracy theory of chemical agents... do you know, that a GM crop requires more chemical than a natural crop?
And please go to the beaches of the scientifically advanced western nation.. they are so advanced that they dont want to even wear a decent dress there.. that is far worse than the nomadic life.. atleast in nomadic life, there would be some level of humane touch..
Its pity that people are so selfish, that they think everything in terms of their own selfish needs.. so if an Arvind eye hospital gave you vision, then all sciences are great.. that's the height of hypocrisy displayed by many urbanised people..
வேளாண் கல்லூரிகளில் ஆன்-லைன் தேர்வு
ReplyDeleteகோவை: "தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆன்-லைன் தேர்வு, வரும் ஆண்டுகளிலும் நடத்தப்படும்' என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்-லைன் தேர்வுகள், 2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலையின் கீழ் இயங்கும் 10 கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கல்லூரிகளிலும் பருவ இடைத்தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் ஆன்-லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இளநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதி வரை இறுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 14 கல்லூரிகளில், ஆயிரத்து 50 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த ஜூன் 4ம் தேதி துணை வேந்தராக பதவியேற்ற முருகேச பூபதி, ஆன்-லைன் தேர்வைப் பார்வையிட்டு, "வரும் கல்வியாண்டுகளிலும் ஆன்-லைன் தேர்வு தொடர்ந்து நடைபெறும்' என தெரிவித்தார்.
தேர்வு கட்டுப்பாட்டு மையத்தில் வெளியிடப்படும் கேள்வித்தாள்களை, தேர்வு நேரத்தில் மட்டுமே காண முடியும். தேர்வு அறையில் ரகசிய குறியீட்டை பதிவு செய்த பின்னரே, மாணவர்கள் கேள்வித்தாளை பார்க்க முடியும். கோவை பல்கலை வளாகத்தின் மைய கட்டுப்பாட்டில், கல்லூரிகள் இணைய வழி தேர்வை நடத்துகின்றன. மேலும், இத்தேர்வுகள் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகின்றன. அன்றைய தேர்வு பாடத்திற்கான கேள்விகளுக்கு, லேப்-டாப்பில் மாணவர்கள் விடையளிப்பர். இறுதியாக, தம் விடைத்தாளை ஆன்-லைனில் சமர்ப்பித்து, இணைய தளத்திலிருந்து வெளியே வர வேண்டும். விடைத்தாளை ஆன்-லைனில் சமர்ப்பித்தவுடன் மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். கோவையில் உள்ள முதன்மை வளாகத்தில் இருந்து கொண்டே, அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் ஆன்-லைன் தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
__________________________
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பேப்பர் மிச்சம். "பேராசிரியர்"களுக்கு பேப்பர் திருத்த வேண்டியதில்லை. திருட்டுத்தனம் செய்ய இயலாது. மாணவர்களுக்கு, கம்யூட்டரில் உள்ள பல பயன்பாடுகள் தெரியவரும். வேளான்பல்கலையில் "லேப்டாப்" கட்டாயமாக்கப்பட்டதால் இந்த வகையான உபயோகத்தில் தவறில்லை. மீண்டும் சொல்கிறேன் இவ்வகையான தொழிநுட்பங்களின் மேலான பயன்பாடு கல்வி அணுகுமுறை மாறினால்தான் சிறப்பாக இருக்கும். "benz" காரை வாங்கி வைத்துக்கொண்டு முள்ளுக்காட்டில் ஓட்டினால் எப்படி இருக்கும்? அதுபோலதான் இதுவும் உள்ளது.
A Quotes from Hindu Businessline about GENDER ISSUES in Agriculture, published on Dec 30, 2005(http://www.blonnet.com/2005/12/30/stories/2005123000281100.htm)...With reference to agricultural education and gender issues it states the following.........
ReplyDeleteWomen in agriculture
According to the 2001 Census, 28 per cent of all working women are farmers — even though not all have land titles — and 46 per cent are labourers, the remaining being in non-agricultural areas. In agricultural labour, 56 per cent are men and 44 per cent women. "In the previous Census it was 62 per cent men and 38 per cent women, which means that more women are becoming labourers as men either migrate or do something else. In Tamil Nadu, it is already 51 per cent women and 49 per cent men, with men migrating to other jobs," says Ms Mina Swaminathan, adding that farming too is getting more feminised thanks to men's migration, leaving women to take care of the land. On the gender curriculum, she says that "hundreds of letters" sent to vice-chancellors of agricultural universities, the ICAR, the Agriculture Ministry, etc., have had no impact. Recently, AFPRO (Action for Food Production), a Non-Governmental Organisation providing socio-technical support to village-level NGOs, asked for a course for 15 of its officers. And she is still waiting "for at least one agricultural university to introduce this course; we're willing to do a demo, train the teachers, etc, but so far there is absolutely no interest. And it is frustrating to see so many years of work go waste." Another concern is that though more girls are entering the agricultural stream of education, "after they finish, they don't want to go to the field; they want lab or teaching jobs." But this is more because of the lack of transport and accommodation facilities in the field and issues related to safety and security. "Also, when women with children prefer to return home during field trips, this is considered a privilege; people don't understand that women need to be given support services if they are to do a good job," she says. She adds that the recent murder of a woman in the ITES industry had raised such a hue and cry, "but in the rural areas the security of women is always an issue. Where are the transport or hostel facilities for women? The BPOs get so much publicity, but the women working there do not face any more a problem than faced for years by women who work as nurses or telephone operators on night shifts."
___________________
^^^^^^^^^^^^^^^^^^
அட நீங்க வேற.....இங்க வர பொன்னுங்க கிராமத்துல போய் வேலை பாக்கனம்ன்னு எத்தன பேர் வாராங்க .......இப்படிப்பட்டவங்களுக்கு ஆர்வமூட்டுருமாதிரியும், நீங்க சொல்ற மாதிரி கிராமத்தில் வேலை பார்க்கிறவர் அங்கு ஏற்ப்படும் பணியிடர்களை எதிர்கொள்வது பற்றிய கல்வியையும், பயிற்சியையும் கொண்டு வரணும்ன்னு யோசிக்கிராங்களா? நீங்கல்லாம் சொல்லியே இவர்களுக்கு ஏறலை. நாங்க சொல்லித்தான் ஏறுமா? (ஒருத்தர் anonymous மேல சொல்லி இருந்தாரே!)
http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=14273
ReplyDeleteAgain the MOney making DMK family rejected Madras Univ VC's request of providing free education for all Govt university students. The reason coated by the Govt is "they dont want to pressurise the Govt for allocating 15 crores for this purpose!!!
Unless a serious attention not given for the development or atleat survival of Govt schools and colleges, then it (already) will be completely ruled by private (Alcohol makers, Politicians).