காபி பயிர் - உலகை மாற்றிய ஒரு சோமபானம்
உலகவாணிபத்தில் கச்சா எண்ணைக்கு அடுத்த படியாக பரிமாறப்படும் ஒரு பொருள், வேறென்ன காபிதான். என்ன ஷாக் அடிக்கிறதா? அரிசி போன்ற அத்யாவிசிய பொருட்கள் இருக்கையில் காபி என்று கேட்க தோன்றுகிறதா? ரொம்ப குழம்பிகாதீங்க! நீங்களே ஒரு கணக்கு போடுங்க! நீங்களே அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ, எத்தனை முறை டீ, காபி அருந்துகிறார்கள் என்று? குறிப்பாக கார்பரேட் ஆபீஸில் பணிபுரிவோர் நன்கு கணக்கிடலாம். ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதுமாக 500 கோடி கப் காபி அருந்தப்படுகிறது. இந்த காபி பயிர் உலகம் முழுவதும் பல சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தொடக்கம் முதல் ஏற்படுத்தி வந்திருக்கிறது. இப்பவும் இதன் தாக்கம் மிக அதிகம். ஒரு மறைமுக யுத்தமே நடக்கிறது.
இது ஒரு அங்கிகரிக்கப்பட்ட போதைப்பொருளாக இருக்கிறது. இது இல்லையேல், உலகத்தில் பலரது வாழ்க்கை முடங்கி விடும். உலக முழுவதும் இரண்டரை கோடி மக்கள் காப்பி பயிரிடுவதில் நேரடியாக பயனடைகிறார்கள். பத்து கோடி பேர் மறைமுகமாக பயனடைகிறார்கள். காப்பியை பற்றிய பூரண வரலாற்றை அதன் பல்வேறு தாக்கம் பற்றி இந்த கட்டுரையில் பதிகிறேன். இது பலரது வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கெடுக்கிறது, ஆனால் முன்பு கூறியது போல் தற்போதைய வாழ்க்கைக்கு பணமாக உதவுகிறது. எதிர்காலத்தை தொழைது நிகழ்காலத்தை வாழத்துடிக்கும் மக்கள் காப்பியை பருகுவோர், மற்றும் காப்பியை பயிரிடுவோர் மற்றும் வாணிபம் செய்வோர். உலகமயமாக காரமாக இருந்த காப்பியை பற்றிய செய்தியை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

கண்டுபிடிப்பு: ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காப்பி பலரால் கண்டுபிடிக்கபட்டது. எதியோபியாவில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், ஆடுகள் ஒரு செடியின் பழத்தை இலையை உண்டு விட்டு ஒரு மெதப்பில் ஒரு சுறுசுறுப்பில் அலைவதை கண்டான். அவனும் அதை உண்டு பார்த்தான் ஒரு புத்துணர்ச்சி வரவே, அதனை அங்குள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தினான். எதியோப்பிவின் சமீபத்திய நாடான அரேபியா, ஏமான் போன்ற பகுதிகளுக்கு பரவியது. எதொயோப்பியர்கள் இன்று காப்பியை தங்கள் பாரம்பரிய சொத்தாக, கலாச்சாரமாக கருதுகிறார்கள்.
மத்திய கிழக்கு முதல் துருக்கி வரை:
அரேபிய நாடுகளில் மலைபகுதிகளில் காப்பி பயிரிடப்பட்டு வாணிபமாக நடந்தது. செங்கடல் பகுதியிலிருந்து மெல்ல துருக்கிக்கு கொண்டு சென்றனர் அரேபியாயர்கள். துருக்கியர்கள், இதனை திராட்சை ரசத்திற்கு மாற்றாக பார்த்தனர். துருக்கிய சூபிக்கள் கோவில்களில் இதனை ஒரு பண்டிகை பானமாக மாற்றினர். மெல்ல இன்றைய "காப்பி டே" போல கடைகளை வைத்து பானங்கள் பரிமாற, ஒரு சமுதாய இணைப்பு பானமாக மாறியது காப்பி. காப்பி குடிக்கவே மக்கள் ஓரிடத்தில் கூடும் போது ஒரு சில பிரச்சனைகளையும் அளசுமிடமாக மாறி மக்கள் சண்டையிட்டனர். 1511 ன்னில், அரேபியா மெக்காவின் அரசர், காப்பி கடைகளுக்கு தடை விதித்தார். இது ஒரு போதைப்பொருள். குரானில், இது தடை செய்யப்பட பானம் என்று அறிவித்தார். ஆனால், எகிப்திய கைரோ சூல்தான் அதனை மாற்றினார். இதனால், காப்பிக்கு மேலும் புகழ் விரிவடைந்தது. இதனால், கிராக்கி அதிகமாகவே துருக்கியர் அரேபியாயர்களை அவர்களது காப்பி தோட்டங்களுக்கவே தாக்கினர். துருக்கியர்கள் காப்பி வணிகத்தை அவர்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றனர். ஓட்டோமான் சாம்ராஜியத்தில் காப்பியில் சார்க்கரை, உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் விரிவடைந்தது (துருக்கியின் பெரிய சாம்ராஜ்யம்).
அரேபியாவிலிருந்து இரோப்பாவிற்கு பயணப்பட்டது:
நூற்றாண்டில் இறுதியில் பாபா பூடான் என்பவர் விதைகளை கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வந்தார். இந்தியாவில் இறங்கியவர் இன்றைய கர்நாடக மாநிலம் சிக்க்மங்கலூரில் ஊன்றினார். டச்சுக்காரர்கள் இந்தியாவில் மேற்கு கடலோரம் இறங்கிய சமயமாதலால் அவர்கள் கையில் காப்பி விதைகள் சிக்கவே அவற்றை தங்கள் நாடான் நெதர்லாந்துக்கும், தங்கள் காலனி நாடுகளான ஜாவா (இந்தோனேசியா) விற்கும் கொண்டு சென்றனர். முதலில் நேதேலண்டின் தலைநகரான ஆம்ச்டர்தேமில், காப்பியை வளர்த்தனர். அதன் விதைகளை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு விற்றனர். ஆஸ்திரியாவின் விஎன்னா நகரில் அவர்கள் வாணிபத்தில் பெற்ற காப்பியை கொள்ளையடிக்க துருக்கியர்கள் வியன்னாவை தாக்கினர். ஆனால், ஆஸ்திரியா பிரான்சின் உதவியுடன் அவர்களை வென்றது. பின்னர் ஆஸ்ஸ்திரியாவில் "Blue bottle" என்ற ஐரோப்பாவின் முதல் காப்பி கடையை ஒருவர் நிறுவினார். அவர்களே முதலில் பாலையும், சர்க்கரையையும் சேர்த்து பருகும் பழக்கத்தை ஏற்படுத்தினார். வெனிஸ் நகரத்தில் இதனை இசுலாமியர்களின் ஒரு தந்திர பானம் என்று விளக்கினர். ஆனால், துருக்கியர்கள் மூலம் காப்பியின் வாணிபம் அதிகமாகவே, போப்பும் அதனை பருகி விட்டு மதிமயங்கி, இதற்க்கு புனித நீர் தெளித்து இத்தாலிக்கு வரவேற்றார்.
இத்தாலியின் காப்புசினோ முதல் பிரஞ்சு புரட்சி வரை:
காப்பி ஒரு அடிமைப்பட்டு கிடந்த ஐரோப்பா மக்களிடம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்த உதவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் இதனை புகழ்கிறார்கள் (அப்படியென்ன புரட்சி? எங்க ஊரு கும்போகோணம் ஐயர்வால் தினமும் காப்பி குடிக்கிறார், ஒரு புரட்சியாவது மண்ணாவது, ஒன்னையும் காணோமே!) . எப்படி என்ன புரட்சி ஏற்படுத்தியது. இத்தாலியில் போப்பின் வரவேற்ப்பையடுத்து பதினெட்டாம் நூற்றாண்டில் முதல் இத்தாலியின் முதல் காப்பி ஹவுஸ் "Lavena" திறக்கப்பட்டது. அதன் பின் ஜெர்மானியர் ஒருவர் அதற்க்கு எதிர்ப்புறமே "Florian" என்ற காப்பி ஹவுஸ் திறந்தார். அதன் பின் "Casanova" காப்பி என்ற புகழ் மிகுந்த காப்பியை சிறிது திரவியங்கள், க்ரீம், எஷ்ப்ரெஸ்ஸொ சேர்த்து கண்டுபித்து அறிமுகம் செய்தனர். காப்புசினோ பிறகு வந்தது. ஸ்பானியர்கள், "எஷ்ப்றேச்சொவை" நல்ல நறுமணத்துடன் குறைவான் கபைன் உள்ள காப்பியாக உருவாக்கினர். இது மேலும் நல்ல மதிப்பை பெற்றது. பிரான்சு தலைநகர் பாரிசில், கலைஞர்களும், அறிஞர்களும் சுறு சுறுபிற்காக ஒரு நாளைக்கு நாற்பது முறை காப்பி பருகினர். 1686 களில், இத்தாலியில் பெண்களிடையே காப்பி ஒரு நாகரிகமாக மாறியது. உயர் தட்டு மக்கள் ஒரு நாளைக்கு 7- 8 லிட்டர் காப்பியும் அறை லிட்டர் 100% சுத்தமான சாராயமும் பருகினர். காப்பி ஹவுசுகள் அரசியல் பேசுமிடமாகவும், மக்களை ஒன்று திரட்டும் கூட்டங்கள் மேற்க்கொள்ளும் இடமாகவும் மாறியது. பிரஞ்சு புரட்சியே காப்பி ஹவுசுகளில் திட்டமிடப்பட்டதாம்.
1652 இல், இன்ற்றைய லாயிட் காப்பீட்டு நிறுவனம் மற்றும் அரசு வர்த்தக மையமிருக்குமிடத்தில் "ஜோனதன்" என்ற முதல் காப்பி ஹவுஸ் திறக்கப்பட்டது. 1700 களில், லண்டனில் 2000 காப்பி ஹவுசுகள் இருந்தன. முதலில் காப்பியானது தாம்பத்திய வாழ்க்கைக்கு கெடுதி என்று கருதி பெண்கள் புறக்கணித்தனர். விபச்சாரவிடுதிகளின் கீழும், பணக்காரர்களின் புகழிடமாகவும் திகழ்ந்தது பல காப்பி ஹவுசுகள். பின்னர், டீ அறிமுகமானதும் பெண்களிடம் அது அதிக வரவேற்பை பெற்றது. எளிதில் செய்யக்கூடிய பானமாதளாலும், விலை குறைவாக இருந்ததாலும் மக்கள் விரும்பி வாங்கினர். காப்பியின் மதிப்பு இங்கிலாந்தில் குறைந்து டீ முக்கிய பாணமானது. சீனாவிலிருந்து நிறைய டீ இறக்குமதியாகவே, 1700 களில் இங்கிலாந்து டீ பருகும் நாடாகவே மாறியது. 1700 ரில் ஐரோப்பாவில் 500,000 பவுன்டுகளுக்கு விற்பனையான காப்பி 1800 களில் ஒரு மில்லியன் பவுன்டுகளுக்கு வர்த்தகமானது. பிரஞ்சுக்காரர்கள் ஒரு முடிவு எடுத்தனர். என்ன செய்தனர்? (மிஞ்சிப்போன என்ன செய்வான் இன்னைக்கு நம்ம தமிழ் நாட்டுல சாராயம் விற்கிறதா பாத்துட்டு கரும்பு சாகுபடிக்கும் சாராயம் காய்ச்சவும் அனுமதி குடுக்கிற மாதிரி இவனும் வியாபாரம் பண்ண ஏதாவது செஞ்சிருப்பான்).
பிரான்சிலிருந்து அட்லாண்டிக்கின் ஹைத்தியிர்க்கு :
காலனி ஆதிக்கம் நிறைந்த பிரான்சு, காப்பியை அமெரிக்க தீவு நாடான ஹைத்தியிக்கு கொண்டு சென்றது. கப்ரயேல் மத்தியு என்பவர் ஒரு செடியை பாதுகாத்து பிரான்சின் மார்டினி க்கு கொண்டு வந்தார். வரும் வரையில் அந்து ஒரு காப்பி செடியை கை பதற்ற பல கொள்ளையர்கள் பிரன்ச்சு கப்பலை தாக்கினர். பின்பு அந்தொரு செடியை பெருக்கி அமெரிக்காவிற்கு கொண்டு சென்ற பிரச்சுகார்கள் ஹைதியை காப்பி காடுகளாக, தனது ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு மாற்றினர். 1790 இல், ஹைத்தி உலகின் பாதி காப்பி உற்பத்தியை கொண்ட நாடானது. 1791 இல், ஆபிரிக்க காப்பி தோட்ட அடிமைகள் ஹைத்தியில் அரசுக்கு எதிராக புரட்சி செய்தனர். வெற்றியும் பெற்றனர். இது பிறகு புரட்சிக்கு ஒரு வித்தாக 1792 இல் அமைந்தது. மக்கள் காப்பி ஹவுசுகளில் கூடிய ஒன்று திரண்டு அரசை ஒழித்தனர். நெப்போலியன் பன்னிரென்று வருடங்களுக்கு பிறகு காப்பியை "DAMM coffee" என்று வர்ணித்தான். காப்பியின் மூலம் இவ்வளவு பெரிய சரிவு ஹைத்தியிலும், பிரான்சிலும் ஏற்ப்படும் என்று நினைக்கவுமில்லை. அதன் பிறகு காப்பியானது உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுசூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
காப்பி பயிர் - தங்கமா? சூன்யமா?
பிரேன்ச்சுகார்களால், அமெரிக்காவிற்கு அறிமுகமான காப்பி மெல்ல தென்அமெரிக்காவின் அமேசான் நாடான பிரேசிலை 1773 இல் அடைந்தது. வடஅமெரிக்காவை கூறு போட்டிருந்த ஐரோப்பியர்களில் பிரிடிஷ்காரர்கள் அதிகம். டீ க்கு பிரிடிஷ் அரசு அதிக வரி விதித்து கொள்ளை அடிக்க முற்படவே, அமெரிக்கர்கள் காப்பியை வேண்டுமென்றே விரும்பி டீ யை புறக்கணித்தனர். அதனால் பிரேசிலில் காப்பி பயிரிடும் தேவை அதிகமானது. அமேசான் காடுகளை அழிக்க ஆரம்பித்த ஐரோப்பிய ஆதிக்கம் இன்று சுமார் 10 % காடுகளையே விட்டு வைத்துள்ளது. அனைத்து காடுகளும் எரிக்கப்பட்டன. ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு வேலை வாங்கி மிக குறைவான விலைக்கு காப்பி உற்பத்தி செய்தனர். அமெரிக்காவிற்கு விற்றனர். 1816 இல் பிரேசிலில் 15 லச்சம் அடிமைகள் இருந்தனர் அதாவது நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை. காப்பி தோட்ட முதலாளிகள் மிகப்பெரிய செல்வந்தர்களாகவும், ஒரு குட்டி சர்வாதிகாரிகளாகவும் விளங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழிற் புரட்சிக்கு ஒரு வித்தாக அமைந்தது (முன்னால் பிரஞ்ச்சு புரட்சி இப்போது தொழிற்புரட்சி). தொழிற்சாலைகளில் வேலை செய்வோரை சுறுசுறுப்பாக வைக்க காப்பி பானமாக கொடுக்கப்பட்டது. இதனால் காப்பியின் தேவை மிக அதிகமானது.
உலக பொருளாதார ஏற்ற-இறக்க சுழற்சியின் ஆரம்பம் - காபியின் பிள்ளையார் சுழி!
தலைப்ப பார்த்து யாரும் குழம்ப வேண்டாம். காப்பியின் புகழ நீங்க இன்னும்படீங்க. அமெரிக்க தொழிலதிபர்கள் பிரேசிலிய காப்பி கொட்டையை வாங்கி காகிதபொட்டலங்களில் வருது கொடுத்தனர் (நம்ம ஊர் கடலை மாதிரி). இதற்குள் பலகம்பெனிகள் முதலீடு செய்தன. அமெரிக்காவில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 1840 திற்கு பிறகு சுரங்க வேளையில் ஈடுபடுவோரிடம் காப்பிவிற்க ஜிம் போல்ஜெர் என்பவர் சுரங்கதிற்க்கே வறுத்த காப்பியை கொண்டுசென்று விற்க ஆரம்பித்தார். பின்பு அமெரிக்காவின் புகழ் பெற்ற "Maxweell's house" , "Java & Mocha" போன்ற காப்பி கம்பனிகள் நுழைந்தன. மேலும் பல மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை காப்பி நாடுகளாக மாற்றின. 1880 களில் முன்பு சொன்னது போல் பொருளாதார ஏற்ற - இறக்க சுழலின்தொடக்கம் ஆரம்பமானது. இன்று உலகம் முழுவதும் பொருளாதாரம் வீங்கிவெடித்தது போல் முதல் முதலாக வீங்க ஆரம்பித்தது. பிரேசில் எக்கச்சக்கமாககாப்பியை உற்பத்தி செய்தது (விவசாய-தொழில் புரட்சி காரணமாக) .
1900 களில்பிரேசில் மிக குறைந்த விலைக்கு மலை மலையாக காப்பியை தள்ளியது. அமெரிககாவில் வாங்கும் சக்தியும் அதிகரிக்கவே, மக்கள் அன்றுஅறிமுகப்படுத்தப்பட்ட கார் மற்றும் ரேடியோ பங்குகளில் முதலீடு செய்தனர். சந்தை உச்ச கட்டத்திற்கு சென்று 1929 இல் பொருளாதார வீழ்ச்சிய்யாக வெடித்து. காப்பி விலை வீழ்த்து. பிரேசில் உற்பத்தி செய்த காப்பி கேள்விக்குறியானது. அனைத்து காப்பி கொட்டைகளும் மலை மலையாக எரிக்கப்பட்டன. மீண்டும் இரண்டாம் உலகப்போரில் "Super market" காப்பியை "nestle" அறிமுகப்படுத்தியது. போரின் பின் இந்த காப்பியை "Nestle" "Instant coffee" காப்பியாக வீட்டு இல்லத்தரசிகளுக்கு நோகாமல் காப்பி வைக்கும்தொழினுட்பதுடன் சென்று தனது வியாபாரத்தை பெருக்கியது. 1950, 1954,1977 களில் காப்பி விலை பெரும் சரிவை சந்திக்கவே, கவுதமாலாமற்றும் இந்தோனேசியா காப்பி நாட்டு கம்முநிசவாதிகள் புரட்சியை கிளறினார். இதனால் இந்த விலை வீழ்ச்சியை சமாளிக்க 1962 இல் ஒரு விலை நிர்ணயஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டு விலை சீரமைக்கப்பட்டது. ஆனால், 1989 இல்ரஷ்யா வீழ்ந்த பிறகு, ஒப்பந்தத்தை மீறி காப்பியை சந்தையில் குவிக்க காப்பிவிலை வீழ்ந்தது. விவசாய-தொழிற்புரட்சி காரணமாக பிரேசில் உலகின் 50% உற்பத்தியை கொண்டிருந்தது அதோடு மிக மலிவான விலையில் காப்பியைஉற்பத்தி செய்தது. இதில் வியட்நாமியர்கள் காப்பி உற்பத்தி செய்ய இன்னும்கடுமையான் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தென்அமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகள்வறுமையின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாயின. தங்களுக்கு தேவையான உணவுகளை கூட உற்பத்தி செய்யாமல் வேலைமுதலைகளுக்கு காப்பி உற்பத்தி செய்து சீரழிந்து போன நாடுகளில் தெனமெரிக்கநாடுகள முக்கியமானவை.
சுற்றுசூழல் நாசமும், மாற்று வியாபார முறையும்:
பொருளாதார, சமுதாய அரசியல் தாக்கங்களை ஏற்படுத்திய காப்பி, அனைத்திற்கும் மேலே கண்ணுக்கு தெரியாத நிரந்திர சுற்று சூழல் கேடுகளைஏற்படுத்தியது. பசுமை மாறக்காடுகளை அழித்தால் பல உயிரினங்கள் அழிந்தன, அவற்றின் வாழ்வாதரதொடு மக்களின் வாழ்வாதாரமும் பதிக்கப்பட்டது. மண்அரிப்பு, நீர் தட்டு பாடு, பூச்சிகொல்லி பாதிப்புகள் என்று நிலைமை மோசமாகவேகாப்பி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கபட்டனர். இதனை சரி செய்ய பலதன்னார்வ தொண்டு நிறுவனகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பிதோட்டங்களுக்கு புதிய வருமான, வியாபார யுக்தியையும் சுற்றுசூழலைமையமாக கொண்டு செயல்படுத்தின. இன்று "Bird friendly coffee", Fair trade coffee", "organic coffee", " Coffees farm Eco tourism" என பல வழிகளில் காப்பி உற்பத்திநாடுகளின் விவசாயிகளை நல்ல விலை கிடைக்க வழி செய்கிறது. ஆனால் இது மிகவும் தாமதமாக மேற்கொள்ள பட்ட ஒரு விடயம். ஏற்க்கனவேஅழிக்க வேண்டியவற்றை அழித்தாயிற்று. இனி காப்பி பயிரையே அழித்துபுலனின்பதிலிருந்து" மனித சமூகம் வரவில்லையெனில், காடுகளை மீண்டும்தளிக்க செய்யவில்லையெனில் பாதிப்புகள் கடுமையாக இருக்கும். "
தென் இந்தியாவும், காப்பியும்:
உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் தென் இந்தியாவில் கர்நாடக, தமிழ் நாடு, கேரளா மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காடுகள் இருந்த சுவடு போய் வெறும் காப்பிகாடாக நிர்வாணமாக் மலைகள் நிற்கின்றன. தென் இந்தியாவின் ஜீவ நதிகள் இன்று வறல ஆரம்பித்து விட்டன. காடுகளை காப்பி, டீ மற்றும் பல மலை பயிருக்கு இறையாக்கியதன் விளைவே. காப்பி சாப்பிட ஆசைப்பட்டு, நீராதாரங்களை நாசம் செய்து, நீரில்லாமல் உணவையும் உற்பத்தி செய்ய முடியாமல், நடுத்தெருவில் சாகும் காலம் தென் மாநிலங்களை நெருங்கி விட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றைய நதி பிரச்சனைகள் அனைத்துமே பயிரின் தேர்ந்தெடுப்பும், காடுகளைஅழித்தமையும், நகரமய நீர் விரயமாக்களும் காரணமென்பதை சென்ற மாதம்வான் பொய்ப்பினும் தான் பொய்க்கும் காவிரி" என்னும் கட்டுரையில் விளக்கிஇருந்தேன் (http://www.agriculturetheaxisoftheworld.com/2009/03/blog-post.html). "இத்தகைய காப்பி, அதில் போடும் சர்க்கரை (http://www.agriculturetheaxisoftheworld.com/2009/04/blog-post.html), அதனால் பல பிரச்சனைகள் இவையெல்லாம் தேவையா என்று மக்கள் யோசிக்க வேண்டும். காப்பியை மறப்போம், நம் வாழ்வாதரங்களை, வாழ்கையை சீரமைப்போம்.

நன்று. பாராட்டுக்கள்.
ReplyDelete