Thursday, 23 February 2012

பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளமுடியும்

இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது. 


 இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.

 அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.


 இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.


 இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.



 ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!


 8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.


 இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.


 ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?


 ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?


 இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.


 பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
 நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.


 கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


 காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்!


Source:  Dinamani http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=556943&SectionID=132&MainSectionID=132&SEO=&Title= 



கருத்துகள்

 It is indeed a very serious observation, we need to take it for all possible evaluation of our school education system. First thing, politics is spoiling our school education, hence, educated politians should be appointed as education ministers. Secondly, in general, there is no commitment that is no sincerity and responsibility on the part of teachers, especially working in government and aided schools. In fact they earn a good salary comparing to other states. I thing these two things need to be taken care of. 
By Martin santha kumar 
2/23/2012 2:16:00 PM
 திறமையான,ஈடுபாடு உள்ள ஆசிரியர்கள் இப்போது குறைவு. அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கே இதெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்,பரீட்சை வைத்தால் தெரியும். அவர்களுக்கு யூனியன் வேறு! சம்பளம் இப்போது நிறைய வாங்குகிறார்கள்.ஆனால் தகுதி இல்லை. இவர்களையும், இன்றைய சூழ்நிலையில் மாணவர்களையும் என்ன சொல்வது? 45 ஆண்டுகால திராவிட கட்சிகளுக்கு இந்த சீரழிவின் முழு பொறுப்பும் உண்டு. 
By Tamilian 
2/23/2012 1:41:00 PM
 சார், எத்தனை கல்வி அதிகாரிகளுக்கு, தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு லெட்டர் இங்கிலிஷில் எழுத தெரிகிறது இன்ச்ளுடிங் ஜோஇன்ட் டிறேக்டோர்ஸ் அண்ட் டிறேக்டோர்ஸ் அப்புறம் எப்புடி பசங்க படிபங்க ப்ளீஸ் முதலில் aப்போயன்ட் திறமையான ஆபீசர்ஸ் 
By clakhmisen 
2/23/2012 1:32:00 PM
 தமிழா தமிழா விழித்தெழு 
By mohana 
2/23/2012 1:18:00 PM
 1. Government Order to make the children Pass until 8th std is the root cause of this evil - so without understanding the basics, children get thru' - If this is the case, how the teachers will do their best even if some of them are dedicated to their profession? 2. Teaching Tamil is not done properly now a days - when we studied, we did not find Tamil difficult - but now, students find Tamil difficult compared to English - they are not able to relate the sound with the letters - the reason being, students are not encouraged to read in Tamil classes. 3. In language classes ( English, Tamil, other languages ), students must be encouraged to read and do simple writing exercises - by this, they will be able to relate the alphabets with sounds and get familiar with the words. 
By Rajlakshmi 
2/23/2012 12:06:00 PM
 முன்பெல்லாம் படித்தவன் என்றால் வேதாந்தத்தையும் , வேதம் படித்தவனையும் தான் மனதில் கொள்வர். 
By gb 
2/23/2012 12:03:00 PM
 உலகிலேயே கௌரவமான முக்கியமான பணிகள் ஒன்று ஆசிரியர் இரண்டு செவிலியர்கள்.இவர்கள் மற்ற பணியாளார்கள் போலே சம்பலதுக்காகவே உழிப்பவர்களில்லை.மாணவர்களையும் நோயாளிகளையும் அக்கரையுடன் gavanitahukollugiraargal ஆனால் மாற்ற பணியாளர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த ஊதியமே பெருகிர்ரர்கள். மேலும் பள்ளி நிர்வாகிகளும் மருத்தவமனை நிருவாகிகளும் பெற்றோர் நோயாளிகளிடம் வசூலிக்கும் ட்சஹோகையில் இவர்கல்லுகு சரியான sambalam, கொடுபதில்லை.மேலும் katchi தலைவர்கள் இவர்கள் நியமனத்தில் தலையடுவதால் தரமான வர்கள் தேர்ந்து எடுக்கபடோவதில்லை பெற்றோர்களும் எதோ குழனதைகளை பள்ளியில் செர்துவிட்டாயிற்று என்றும் மெத்தனமாகவே இருந்துபிகிகிரார்கள். கட்சி தலைவர்கள் இவர்களை எட்டாவது வரையில் பாஸ் செய்யுமாறு ஆணை போட்டுவிடுக்பிரார்கள். அச்துவாரம் பாகமாக இல்லாவிட்டால் கட்டடம் வலுயழண்டு தானே இருக்கும். மக்கள் விழியது எழுந்தால் வொழிய இந்த பிரச்சினைக்கு தீர்வே இல்லை 
By karunganni 
2/23/2012 8:59:00 AM
 "தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?" - இவையெல்லாம் முறையான தமிழிலா இருக்கிறது. இவற்றில் ஆணிகிலக் கலப்பு அல்லவோ அதிகமாக இருக்கிறது. வீட்டிலும் தாய் மொழி தமிழ் என்று சொல்லிக்கொண்டாலும் அவை இயல்பான தமிழ் மொழியாக இல்லையென்பது கண்கூடு. பெரும்பாலும் அவை மொழிக்கலவையாக இருக்கிறது. ஆங்கிலம் போல தமிழை சொற்களைச் சொல்லித்தருவதன் மூலம் கற்பிக்க முடியாது. கற்பிக்கும் முறையில் கோளாறு இருப்பதென்னவோ உண்மைதான் ஆனால் அதை விடவும் வீட்டில் கற்றுக்கொள்ளும் சூழல் சிறப்பானதாக இல்லைஎன்பதும் அதற்கு பெற்றோர்களே காரணம் என்பதுமே உண்மை
By spr 
2/23/2012 8:17:00 AM
 நமது ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் உண்மையிலேயே இந்தியாவில் தலைசிறந்தவர்கள். அனால் தரமான ஆரம்ப, மற்றும் பள்ளிகல்வி மட்டும் மற்றவர்களைவிட குறைவு..தயவு செய்து மற்ற மாநில பாடநூல் தரத்தோடு நமது தரத்தை ஒப்பீடு செய்யுங்கள். காரணம், பெங்கால், ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், பிகார், மாணவர்கள் தற்போது கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து நடுவண் நிறுவனங்களிலும் அவர்கள்தான் உள்ளனர் அதிலும் முதல் இருமாநிலத்தவர் அதிகம்... நாமோ நமது தனியார் கொள்ளை கும்பலிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் நாம் பிகார் போல வரலாம்... 
By murthi 
2/23/2012 8:09:00 AM
 முன்பெல்லாம் ஆசிரியர் பள்ளிகளில் மாணவனை ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக வரி வரியாக படிக்கச்சொல்லி அந்த வரிகளுக்கு விளக்கமளிப்பார். இதனால் அனைத்து மாணவர்களும் தமிழை நன்கு பிழையின்றி கற்று வேகமாக படிக்கவும் முடிந்தது. இப்பொழுது அந்த முறை எந்த பள்ளிகளிலும் நடை முறையில் இல்லை. இதனால் மாணவர்களின் தாய்மொழியில் படிக்கும் திறன் பேசும் திறன் வெகுவாக குறைந்திருக்கிறது. ஒவ்வொரு மாணவ/மாணவிகளையும் வகுப்பில் கட்டாயமாக ஆசிரியர்கள் பாடங்களை படிக்கச்சொல்லவேண்டும். 
By நாகராஜன்.சு 
2/23/2012 8:06:00 AM
 கிராம பகுதி பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டும்தான் உள்ளார்கள். 5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர்கள் எப்படி சிறப்பாக போதிக்க முடியும்? அர்ப்பணிப்பு உணர்வு இல்லாததும் ஒரு காரணம். அரசு ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், பணம் வாங்கிக்கொண்டு எதையும் கண்டுகொள்வதில்லை.கண்டிப்பான அதிகாரி நடவடிக்கை எடுத்தாலும் சாதி அடிப்படையில் ஒன்று சேர்ந்து மிரட்டும் ஆசிரியர்கள் இதுதான் இன்றைய அரசு பள்ளிகளின் நிலை. தேவை மனசாட்சி + அர்ப்பணிப்பு உணர்வு + சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு. இது இருந்தால் வாசிப்பு திறனின் சதவீதம் அதிகரிக்கும். 
By தில்லியார் cdm 
2/23/2012 8:03:00 AM
 கற்பித்தலுக்கு ஒரு PASSION வேணும் சார் . அது இப்போ ரொம்ப அரிதாகிவிட்டது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் ரொம்ப குறைவு. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுகின்ற மாட்டை பாடிக் கறக்கணும். முதிர்ச்சி பண்பாடு கொண்டவர்களுக்கு மாணவர்களை சரியாக கையாளுவார்கள். அப்படியே இன்னொரு விடயம். இந்த வருடம் மெட்ரிக்குலேசன் இல்லாததனால் CBSE Demand ஆகிவிட்டது. ஒரு குறிப்பிட மாதத்திற்குள் எல்லாப் பள்ளிகளும் சேர்க்கை நடத்தாதலாலும், Not Admitted என்றுகூட பள்ளிகள் பெற்றோர்களுக்கு தெரிவிக்காததாலும் பெற்றோர்கள் வேதனை அடைந்த்திருக்கிரார்கள். 
By Nallan 
2/23/2012 7:47:00 AM
 இந்த செய்தியை வெளியிட்ட தினமணிக்கு நன்றி. இது முற்றிலும் உண்மை. ஒரு நாட்டில் பஞ்சமும் படிக்காதவர்களும் இருப்பதால் தான் கொலை கொள்ளை நடப்பதாக சொல்லப்பட்ட காலம் போய். இன்று தனியார் பள்ளி/கல்லூரி-களில் பலகோடி ரூபாய் கொட்டி வெறும் மார்க்குகாக உயர் கல்வி படித்தவர்கள் திறமை இல்லாத காரணத்தால், வேலையின்றி பேங்கில் கொள்ளை அடிப்பதும், கடைகளில் கொள்ளை அடிப்பதும், பெண்ணிடத்திதில் கொள்ளை அடிப்பதும், பல வீட்டில் கொள்ளை அடிப்பதும் தொழிலாக கொண்டுள்ளனர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், குறிப்பாக சில தனியார் பல்கலைகழகம் பணந்த்துக்காக படிக்கவில்லை என்றாலும் B.Tech மாணவர்களுக்கு 80% லிருந்து 99% மதிப்பெண் போட்டு விடுகிறார்கள். பிறகு ஒரு வருடம் இரண்டு வருடம் ஆகியும் வேலை கிடைபதில்லை. அவர்கள் வீட்டுக்கு செல்லாமலும் தான் வேலையில் இருபதாக கூறிவிட்டு கொள்ளையில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். இன்று எங்கு பார்த்தாலும் மாணவர்கள் மோதி (சண்டை இட்டு) கொலை, மாணவர்களின் காதல் கொலை, மாணவர்கள் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி தான். அரசை வேண்டி கேட்டு கொள்வது கல்வி துறையும், கல்வி பயில்விக்கும் ஆசிரியர்களையும் சீர் 
By அறிவழகன் 
2/23/2012 7:14:00 AM
 1 .பரந்த வாசிப்பின்மை. 2 .எனகென்ன என்ற இன்டிfபிரென்ட் 3 .ஆசிரியத் 'தொழில் 'இரண்டாம் பட்சம். 4 .கடவுள் நம்பிக்கையும் இல்லை,மனித நேயமும் இல்லை. 5 .பிள்ளைகளுக்குள் தான் வணங்கும் கடவுளை பாராமை. 6 .தனக்கென்று தனித்த அடையாளமின்றி வாழ்தல். 7 .தனக்குத் தெரிந்ததைக் கூட பகிராத்தன்மை. 8 .அதிகாரிகளுக்கு கூஜா;கூட்டணிகளுக்கு ராஜா. 9 .காலம் கருதிய பணியின்மை. 10 .லேவாதேவி,ரியல் எஸ்டேட் ,அரசியல்,பெரு விவசாயம்... 
By பி.ஸ்தனிஸ்லாஸ் 
2/23/2012 7:00:00 AM
 பெற்றோர்களே தன பிள்ளைகளுடன் நேரம் பகிர்ந்து அளிப்பது இல்லை. வீட்டில் அவர்களுக்கு பாடங்களை சொல்லி தருவது இல்லை. புரியவைத்து மனதில் பதியும்படி கற்று தருவதில்லை, வேண்டாத விளையாட்டுகளில் மனம் ஈடுபடும்படி பொருட்கள் ,அஸ்திவாரம்தான் பலமாக அமைய வேண்டும் என்று கூட தெரியாத அரைகுறை பெற்றோர்கள்தான் இன்று அதிகம். முதிய தலைமுறையும் தன பங்களிப்பை தர சந்தர்ப்பம் இல்லை, நல்ல கதைகள் ஊக்கமூட்டும் விளையாட்டுக்கள் . இல்லை. செல்போன் டி.வீ. வீடியோ கேம்ஸ் கார்ட்டூன் எனதான் குழந்தைகள் நேரத்தை களிக்கின்றன பாவம். ஆசிரியர் கண்டித்தாலும் பெற்றோர் கேள்வி கேட்கின்றனர் , அவர்களுக்காவது பொறுமையுடன் சொல்லித்தந்து நல்ல படிப்பாளிகளை உருவாக்கலாம். இப்படியே தொடர்ந்தால் நம் சமுதாயம்தான் சீர் கேட்டு போகும். 
By saralatharani 
2/23/2012 6:54:00 AM
 தினமணி-யின் தமிழின் வாழ்வில் உள்ள அக்கரைக்கு நன்றி. ஆயினும் தமிழின் அழிவில் உள்ள காரணங்களை சுட்டுவதில் துணிச்சலே இல்லை. மழுப்பல்தான் உள்ளது! திருப்ப திருப்ப என்றாலும் ஒன்றை நான் வலியுறுத்த வேண்டியுள்ளது. தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் இந்திய பொருளாதாரம் வல்லாண்மை ஆதிக்கம் செலுத்தும் வரை தமிழர்கள் தங்கள் மொழியை இழப்பது தவிர்க்க இயலாது! மொழியின் வாழ்விலும் வளர்ச்சியிலும் அக்காரை செலுத்தவேண்டிய திராவிட கட்ச்சிகள் தங்களின் அரசியல் நோக்கை ஆட்ச்சியை பிடித்தவுடன் தமிழர்களின் வரலாற்றில் அடுத்த நிலை க்கு செல்லாமல பணம் சேர்ப்பதிலும் அதற்க்கு பதவிகள் கிடைக்க முயலுவதிலும் முடங்கிவ்ட்டன. என்போன்ற மொழி மற்றும் இன நலன் பேணுவோருக்கு இதன்று உள்ள ஒரே ஆறுதலும் நம்பிக்கையும் தினமணி தான். துநிச்ச்சல் இல்லையே! அல்லது காலம் வருவரை பொறுத்திருப்பது நல்லதா? சுவரின்ரி சித்திரம் வரையமுடியுமா? வலுவான சொந்த பொருளாதரம் இனறி தமிழ் மக்களை ஆங்கில வழி கல்வி கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதை தவிர்க்கவே முடியாது! அதிலும்தற்போது தமிழ் மண்ணின் எங்கள் மேற்கு பகுதியில் பன்னாட்டு பள்ளிகள் தான் மோகம். இவை நடுவன் அரச 
By P .Padmanaabhan 
2/23/2012 6:39:00 AM





























































No comments:

Post a Comment