Friday, 7 August 2009

விவசாயிகள் - உள்ளூர் அகதிகளாக மாறும் நாள்


விவசாயியே வெளியேறு!

First Published : 23 May 2009 12:23:00 AM IST


1942"வெள்ளையனேவெளியேறு'' என்ற விடுதலைக்குரல் இந்தியாவில் ஓங்கிஒலித்ததன் விளைவால்தூங்கிய பாரதம் துணிவுடன்எழுந்தது. விடுதலை பெற்றஇந்தியாவில் இன்று நிகழ்வதுஎன்ன?

ஆட்சியைப் பிடித்தவர்கள்கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர்பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காதசில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.

எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள்தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில்குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக்கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத்தயாராக இல்லை. 1980 - 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம்வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 - 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள்என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மைவெட்டவெளிச்சமாகும்.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு - குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கானவிவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வைமுடித்துக்கொண்டு விட்டார்கள்.

அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொருமணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலைஎண்ணிக்கை மூன்று லட்சம்.

2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும்எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாகஎடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப்பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாகமாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால்அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில்நிகழப் போகின்றன.

ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாயவிஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக்கிடைக்கும்.

உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலைஎன்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக்கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடிமறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக்கண்டுபிடிக்கின்றனர்.

பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 - 69 பதிற்றாண்டில் விவசாயஉற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும்தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும்விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள்தற்கொலை செய்து கொள்ளவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும்பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்குஉலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும்உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்றநாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும்நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல்ஒப்பிடக்கூடியதும் அல்ல. அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமேவிவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.

இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள்இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர்விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டுவெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப்பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.

2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாகஎடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கைபுள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகைசுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும்விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும்விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக்கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின்எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்தியவிவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின்சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின்சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதேவிளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டுவெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாகக்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு - குறு விவசாயிகளின்எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. ""அமெரிக்காவில் அரிசியின்உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்தியவிவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்குஇணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்கவேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால்போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள்எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்...'' இப்படித்தான் நமதுநிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.

அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம்வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன்சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம்வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில்நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்திசெய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்துகடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.

நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், ""விவசாயிகள்எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக்கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல்தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக்கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது''.

ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள்நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டுநம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்றஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப்பயிர்கள் உண்டு.

இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர்பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின்பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு. ஏற்றுமதிஎத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள்திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர்சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்திகுறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு - நடுத்தர விவசாயிகள் வெளியேறிவிட்டனர்.

இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரியஅறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதியபுதிய நவீன ரசாயன - இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகிவிட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையேஇல்லாமல் போய்விடும்.

இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின்வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்தமண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நன்றி: http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=63759&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
1980-

No comments:

Post a Comment