ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே ஆனச்செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு பசுமை கொண்டு
பஞ்சமும் நோயுமின்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வமிங்கு செராதோ தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ!
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பருவம் கொண்டு பெண்ணைப்போலே நாணம் என்ன சொல்லம்மா!
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேண்டும் கேளம்மா!
அறுவடை காலம் உந்தன் திருமண நாலம்மா! திருமண நாலம்மா!
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவனின்றி போர் செய்யும் வீரன் ஏது? போர் செய்யும் வீரன் ஏது?
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்.
இது 1964 ஆம் வந்த பழனி என்னும் படத்தில் வரும் பாடல்.
உழவா ! உன் வியர்வைக்கு ஈடுண்டோ ?
ReplyDeleteவெறும் காசு உன் உழைப்புக்கு ஈடோ ? நாங்களெல்லாம் உன் பிச்சையில் அல்லவா வயிறு வளர்க்கிறோம் ?
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் !!!!
இது வெறும் கவிதையாய் எனக்குத் தோன்றவில்லை . காலம் காலமாய் நிலவி வரும் உண்மை கவிஞன் வில் வந்திருக்கிறது
யுவ செந்திலுக்கு நன்றி இந்த ஓலி ஓளி விருந்துக்கு !
நான் ஒரு வேளாண்மை பட்டதாரி என்பதில் மிக்க பெருமை அடைகிறேன்.. ...இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் மிக்க அருமை...மிக்க நன்றி ..
Delete