லண்டன் பொருளாதாரம் 1970 களில் வீழ்ந்த சமயத்தில் அதை மீட்கவழி வகுத்ததாக கூறி, 1974 களின் நோபல் பரிசு பிரிட்ரிக் பான் ஹைக் க்கும், குன்னர் மிர்டாளுக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. மிர்டால் நவீன பொருளாதாரத்தை எதிர்த்தார். எதிர்ப்பாளர்களின் வாயை அடைக்க அங்கீகரிப்பு என்ற பெயரில் கொடுக்கப்படும் லஞ்சம் என கருதி மிர்டால் அதனை வாங்கமறுத்தார்.
இன்றும் அதே போல் அமைதிக்கான நோபல் பரிசை அமைதி இழக்கும் நிலையில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் அமைதியை நிலை நாட்டினர் என்று கூறி ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கு வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற பல துறைகளில் வியாபார ரீதியான ஆராய்ச்சிகளுக்கு நோபல் பாரிஸ் கொடுத்து அவர்களை நவீன பொருளாதாரத்தை தக்கவைக்க மேலும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க கொடுக்கும் இந்த பரிசின் சாயம் இப்போது வெளுத்துள்ளது. வெந்த புண்ணில் வேலை குத்துவது போலாகும்.
அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதில் சர்ச்சை
பிரசல்ஸ்: "அமைதிக்கான நோபல் பரிசை, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் தலைவர்கள், ஒன்று சேர்ந்து பெற்று கொள்ள வேண்டும்' என, வற்புறுத்தப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு, ஐரோப்பிய கூட்டமைப்புக்கு, அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரின் போது, சண்டை போட்ட நாடுகள், தற்போது ஒன்றிணைந்து அமைதியாக இருப்பதை பாராட்டி, 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு, இந்த அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் 44 நாடுகள் உள்ளன. ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகள், இந்த விருதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. நோபல் பரிசைல நேரில் யார் சென்று பெறுவது, பரிசு பணத்தை பிரித்து கொள்வது உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவுகிறது.
"ஐரோப்பிய யூனியனின் தலைவர், வான் ராம்பி, நேரில் சென்று இந்த பரிசை பெற்றுக் கொள்வார்' என, பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் அதிபர்கள் தெரிவித்திருந்தனர்."நம்மை மதித்து அளித்துள்ள இந்த பரிசை, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அனைவரும், ஒன்று சேர்ந்து பெற வேண்டும்' என, ராம்பி வற்புறுத்தியுள்ளார்.நோபல் பரிசை, ராம்பி பெற்றுக் கொண்டால், யார் ஏற்புரை நிகழ்த்துவது என்பதில், தற்போது சர்ச்சை நிலவுகிறது. நோபல் பரிசை உருவாக்கிய, ஆல்ப்ரெட் நோபலின், நினைவு தினமான, டிசம்பர், 10ம் தேதி,நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment