Sunday, 27 December 2009

குடிவாழ்க்கை மண்ணின் கலம் போல

நல்வழி

.First Published : 04 Oct 2009 12:11:00 AM IST
.
.உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
.எண்பது கோடிநினைந்து எண்ணுவன - கண்புதைந்த
.மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம் போலச்
.சாந்துணையும் சஞ்சலமே தான். (பா-28)
.
.
ஒவ்வொருவருக்கும் உணவிற்கு நாழி (படி) அரிசியும், உடுப்பதற்கு நான்குமுழத்துணியும் தேவை. இப்படியிருக்க, மனதால் எண்ணக்கூடிய காரியங்களோஎண்பது கோடியாகும். எனவே, அகக்கண்ணாகிய அறிவிழந்த மாந்தரின் குடும்பவாழ்க்கையானது, மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் போல இறக்கும்வரையிலும் துன்பமே ஆகும் (மேலும் மேலும் ஆசைப்படுபவர் துன்பமேஅடைவர் என்பது கருத்து).

SOURCE: http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=134282&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF

No comments:

Post a Comment