2500 வருடங்களுக்கு முன்பு வடக்கில் போதி மரத்தடியில் அமர்ந்த ஒரு இளைஞன் ஞானோதயம் பெற்றான். இன்றோ தெற்கில், அந்த இளைஞன் வழி நடக்கும் நாட்டிற்கு (??!!!) சென்று வந்துள்ள ஒரு முதியவர் காலம் கடந்த பின் ஞானோதயம் பெற்று வந்துள்ளார் போல தெரிகிறது. இதை வரவேற்கவே வேண்டும்.
சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசியவர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழப் பகுதிகளில் எத்தகைய விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும் என்று விவாதித்துத் திரும்பியிருக்கிறார். அப்போது கொடுத்த ஆலோசனைகள் கீழே சொல்லியிருப்பது.
விவசாயிகளின் விதியை நிர்ணயிப்பவை விதைகள்தான். இப்போது விதைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விதைக்காக விவசா யிகள் காத்து இருக்கக் கூடாது. நல்ல தரமான விதைகளை விவசாயிகள், தங்களது கிராமங்களி லேயே (Seed villages) உருவாக்க வேண்டும். மேலும், இயற்கை உரம், இயற்கைப் பூச்சிவிரட்டிகளை (Bio - fertilizer, Bio - pesticides) இந்தியா கொடுத்து உதவவேண்டும்.
ஊரெல்லாம் தோண்டியக் குழிகளாலும்... ஆங்காங்கே நிலப்பரப்பின்மீது தொடர்ந்து, ஓடிய கனரக வாகனங்களாலும்... மண்ணின் கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது. மண்ணின் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
விவசாய வேலைக்கு ஆட்களே கிடைப்பது இல்லை. (No one is willing to work under the sun) இருக்கும் கொஞ்ச விவசாயத்தையும் கவனிப்பது பெண்கள். எனவே, பெண்களின் தளிர் விரல்கள் தாக்குப் பிடிக்கிற அளவுக்கு விவசாயத்தை மாற்றி எளிமைப்படுத்த வேண்டும்.
மானியம், சில சமயங்களில் விவசாயிகளை மரணப் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ரசாயன உரங்களுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள், மண் ணின் நலனைக் காக்கும் உரங்களான பசுந்தாள் உரம், மண்புழு உரம், இயற்கை உரம், காற்றிலிருந்து நைட்ரஜனை பிடித்து பூமியில் சேமித்து வைக்கும் இரட்டை இலை பசுமைத் தாவரங்கள் இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, எளிதாகக் கிடைக்கும் ரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாக நிலத்தில் கொட்டி, மண்ணைக் கொன்று விட்டார்கள். எனவே, உடனடி தேவை மண் நலம் காப்பாற்றப்பட வேண்டும்.
அறுவடைக்குப் பிறகு தானியங்களை சேமிப்பது முக்கியம். அதற்கானத் தொழில்நுட்பம், கிடங்குகள், குளிர்சாதனக் கிடங்குகளை இந்தியா கட்டிக் கொடுக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக விளைபொருட் களுக்குக் கட்டுப்படியான... அதாவது அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை விஞ்ஞான முறைப் படி கணக்கிட்டு கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இருக்கும் விவசாயத்தையாவது காப்பாற்ற முடியும். இளைஞர்களை விவசாயத் தின் பக்கம் இழுக்க முடியும்.'
-இப்படிக்கு
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.
ஊழலில் மழுங்கி சின்னா பின்னமாகி, மக்களும் மதி மழுங்கியுள்ள தமிழகத்தில் நல்ல கருத்துகளை கூறுவதை விட உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்துள்ள தீவுபகுதியில் இது போன்ற நல்ல விசயங்களை மதி மழுங்காத மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று கூட எண்ணி நமது விஞ்ஞானி இவ்வாறு கூறி இருக்கலாம். எது எப்படியோ? இது வரவேற்க கூடியதே! பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி: பசுமை விகடன்
isnt this true?
ReplyDeletehttp://www.keetru.com/literature/essays/sudar.php
ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!
ReplyDeletehttp://www.puthinam.com/full.php?2b1VoUe0dycYI0ecKA4K3b4q6DX4d3f1e2cc2AmS2d434OO3a030Mt3e
isnt this true?
ReplyDeletehttp://www.keetru.com/literature/essays/sudar.php //
சிவப்பு-கருப்பு பூசிக்கொண்டு போலி சமத்துவம் பேசி திரிபவர்கள், ஒரு தனி மனிதன் செய்த காரியங்களை இடித்துரைக்கலாம். அதை விடுத்து ஜாதியை இழுத்து பேசும் இந்த திராவிட இனவாத எழுத்தாளர்களால், உண்மையை கொண்டுணர முடியாமல் நலல் விஷயம் நீர்த்து போகிறது.
"மீண்டும் 1974இல் “நியூ சயன்டிஸ்ட்'' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், “ஸ்டேட்ஸ்மேன்'' நாளேடு 1977 மே 17ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகள் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. அவரது மோசடிகள் நாடெங்கும் நாறத் தொடங்கியதும் வேறுவழியின்றி, தான் தவறிழைத்து விட்டதாக சுவாமிநாதன் ஒப்புக் கொண்டார்"
மேலே அவரே ஒப்புக்கொண்ட விஷயம் ஒன்று உள்ளது. பசுமை புரட்சி நிர்வாகத்திறன் குறைவு மற்றும் தொலைநோக்கு பார்வை இலாத காரணத்தால் விளைந்தவையே என உலகில் பல விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். எம்.எஸ்சும் இதனை ஒப்புக்கொண்டதின் அடையாளமாக அவரது அறக்கட்டளையின் கீழ் பல நிர்வாக சீர்திருத்த திட்டங்களை மேற்க்கொண்டுள்ளார். ஆனால், அவருக்கு இயற்க்கை விவசாயம், தற்சார்பு கிராமம் போன்ற வற்றின் மீதான நம்பிக்கை குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இந்த இலங்கையில் பேசியுள்ளது எனக்கு சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவுமே இருக்கிறது.
அமெரிக்க கைக்கூலியா? வெங்காயமா? என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் அந்நிய துணிகளை மறுப்பார்களா? துண்டும், வேட்டியும் உடுத்தி நடக்கா தயாரா? இவர்கள் வெறும் பேச்சு உணர்ச்சி வீரர்களே! செயல்பாடு என்று வருகையில் இரட்டை நிலையையே கடைபிடிப்பார்கள்.
அவர் செய்ததை மறந்துவிட்டு, அவர் கூறும் விசயத்தில் உள்ள நல்லதை, சாத்த்யக்கூறுகளை ஜாதி, இன த்வேசங்களை விட்டு உருப்படியாக விவாதித்தால் நாட்டுக்கு நல்லது. செத்த பாம்பை அடித்துக்கொண்டே இருப்பதால் பலனில்லை.
ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!
http://www.puthinam.com/full.php?2b1VoUe0dycYI0ecKA4K3b4q6DX4d3f1e2cc2AmS2d434OO3a030Mt3e /////
எம்.எஸ். ஸ்ஸை இனவெறி ஆராய்ச்சியாளர் Joseph Mengele வுடன் சீமான் ஒப்பிட்டு ஒரு கிழவரின் மேல் வன்மையை தூண்டுவது போல் எழுதுவது அவரது வீரத்திற்கு அழகல்ல! அவருக்கு விளம்பரம் வேண்டுமானால் வேறு ஏதாவது வழியை பயன்படுத்த சொல்லுங்கள். தயவது செய்து மொட்டைதலை-முழங்கால் முடிச்சு போன்ற கருணாநிதி அறிக்கைகளை விமர்சனங்களை கூறாமல் இருக்கலாம். தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு என்று ஏன எம்.எஸ். நினைத்து ''ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது", என்று கூறி இருக்க கூடாது.
என்னமோ எம்.எஸ். மட்டுதான் வேளாண் ஆராய்ச்சியாளர் மாதிரி அவரைய்யே சுத்தும் மீடியாக்கள், இந்தியாவில் இருக்கும் 33 வேளாண் பலகலையில் இன்றைய நிலையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள், ஏன் அவர்கள் ரசாயன வேளாண்மையை ஆதரிக்கிறார்கள், ஏன் எதிர்க்கிறார்கள்? என்று ஒரு விசாரணை நடத்தி, விகடன் போன்ற பத்திரிக்கைகள் செய்யுமாயின் நன்றாக இருக்கும். சீமான் போன்றோரின் கற்பனை கலந்த பேச்சிற்கு விகடன் இடம் கொடுக்க கூடாது.
எம்.எஸ். ஸ்ஸை இனவெறி ஆராய்ச்சியாளர் Joseph Mengele வுடன் சீமான் ஒப்பிட்டு ஒரு கிழவரின் மேல் வன்மையை தூண்டுவது போல் எழுதுவது அவரது வீரத்திற்கு அழகல்ல! அவருக்கு விளம்பரம் வேண்டுமானால் வேறு ஏதாவது வழியை பயன்படுத்த சொல்லுங்கள்//
ReplyDeleteதீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு என்று ஏன எம்.எஸ். நினைத்து ''ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது", என்று கூறி இருக்க கூடாது.
//
உண்மை.