இது ஒரு முரண்பாடான ஒப்பீடுகளின் பதிப்பு. இங்கே இரண்டு கட்டுரைகளை பதித்துள்ளேன். ஒன்றுசர்க்கரை உற்பத்தி அதன் தட்டுபாடு பற்றி நாணயம் விகடனில் வந்தது. இரண்டாவது உணவின்பண்பு, அதன் தரம் முக்கியமாக வெள்ளை சர்க்கரையின் கெடுதி பற்றியும் அதனால் உடலுக்குஏற்ப்படும் விளைவுகள் குறித்தும் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரை. இரண்டையும் படித்துபுரிந்ததை நடமுறைபடுத்துங்கள், பிறர்க்கும் தெரிவியுங்கள். கரும்பில் இருக்கும் கசப்பானசமுதாய பக்கத்தை உணருங்கள்.
இந்த கட்டுரையை படிக்கும் முன் இதையும் படிக்கவும்:
http://www.agriculturetheaxisoftheworld.com/2009/04/blog-post.html
1. சர்க்கரை இன்னும் விலை உயரும்!
ஒருபக்கம் சர்க்கரையின் விலை ஏறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கரும்புத் தட்டுப்பாடு... என்ன செய்வதுஎன்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன
காணாமல் போன கரும்பு விளைச்சல்!
உலக அளவில் அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும்நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பிரேசிலுக்கு முதலிடம். நமக்கு அடுத்த இடத்தில் இருக்கிறதுசீனா. இந்தியா முழுக்க 4 மில்லியன் ஹெக்டேர் அளவுக்குகரும்பு உற்பத்தி ஆவதாக கோவையில் உள்ள கரும்பு வளர்ப்பு ஆய்வு மையம்சொல்கிறது. இந்தியாவில் மிக அதிகமான கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம்மகாராஷ்டிராதான். இந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் ஏக்கர் அளவுக்குஉற்பத்தி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து உத்தரப்பிரதேசம். இந்தமாநிலத்தில் சுமார் 17 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி நடக்கிறது. தமிழகத்தில் 7 லட்சம் ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.
இதுநாள்வரை அதிகமான கரும்பு விளைவித்து வந்த விவசாயிகள், சமீபகாலமாக அதைப் பயிர் செய்வதில் ஆர்வமே காட்டுவதில்லை. இதனால்கரும்பு உற்பத்தி பெருமளவில் குறைந்திருக்கிறது. விவசாயிகள் கரும்புவிளைவிக்க மறுப்பதன் காரணம் என்ன என்று இந்திய விவசாயச் சங்கங்களின்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் (தமிழ்நாடு) விருத்தகிரியிடம் கேட்டோம்...
''கரும்பு விவசாயத்தை விவசாயிகள் வெறுக்க ஆரம்பித்ததற்கு முதல் காரணம், அதில் கிடைக்கும் வருமானம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால்தான். கரும்புக்கான விலையை மத்திய, மாநில அரசாங்கங்கள் நிர்ணயம்செய்கின்றன. மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம்செய்கிறது. மாநில அரசாங்கம் குறைந்தபட்ச பரிந்துரை விலையை நிர்ணயம்செய்து அறிவிக்கிறது. இந்த இரண்டின் கூட்டுத்தொகைதான் கரும்பின்விலையாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் தமிழகம், பாண்டிச்சேரி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகியஐந்து மாநில அரசாங்கங்கள் மட்டுமேகரும்புக்கான மாநிலப் பரிந்துரை விலையை (Minimum Support Price) அறிவித்திருக்கின்றன. மற்ற மாநில அரசுகள் கரும்புக்கான பரிந்துரைவிலையை அறிவிப்பதே இல்லை. ஹரியானாமாநில அரசாங்கம்தான் கரும்புக்கு மிகஅதிகமான பரிந்துரையைக் கொடுக்கிறது. ஒரு டன் கரும்புக்கு அந்த அரசாங்கம்ரூபாய் கொடுக்கிறது. பஞ்சாப் மாநிலம் 1,600 ரூபாயும் உ.பி. 1,450 ரூபாயும், பாண்டிச்சேரி 1,150 ரூபாயும், தமிழக அரசாங்கம் 1,100 ரூபாயும்கொடுக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், கரும்புக்குக்கிடைக்கும் விலையைவிட நெல் பயிரில் அதிக வருமானம் கிடைப்பதால்விவசாயிகள் கரும்பை விட்டொழித்துவிட்டு, நெல் (பிற மாநிலங்களில்கோதுமை) பயிரிடச் சென்றுவிட்டனர். 1,700
தவிர, கரும்பு ஆலைகள் குறித்த காலத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பைக்கொள்முதல் செய்வதில்லை. அவர்களுக்கு வேண்டுமென்றால் அதிக விலைகொடுத்தாவது வாங்குவது, இல்லையென்றால் அப்படியே விட்டுவிடுவதுஎன்கிற போக்கே பல இடங்களில் இருக்கின்றன. இதனால் பாடுபட்டு வளர்த்தபயிரை கடைசியில் தீ வைத்துக் கொளுத்தவேண்டிய நிலைமைக்குஉள்ளானார்கள் பல விவசாயிகள். இத்தகைய கொடுமைக்குப் பிறகுயாருக்குத்தான் கரும்பு வளர்க்க மனது வரும்?
இரண்டாவது முக்கியமான காரணம், அதிகமான ஆட்கள். மற்ற எந்தப் பயிரைக்காட்டிலும் கரும்பு விளைச்சலுக்கு அதிகமான ஆட்கள் தேவை. ஒரு ஏக்கர்கரும்பை வெட்டி வண்டியில் ஏற்ற 120 பேராவது வேண்டும். இன்றையதேதியில் விவசாயக் கூலிகள் வேலைக்குக் கிடைப்பதும் கடினம். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய சம்பளமும் அதிகம். இதனால் கரும்புவிளைச்சலே வேண்டாம் என்று பல விவசாயிகள் ஒதுங்கி வருகின்றனர். கரும்பு விளைச்சலை அதிகமாக்க வேண்டுமெனில் கரும்பு விவசாயிகள் மீதுமத்திய, மாநில அரசுகள் வைத்திருக்கும் கொள்கையைமாற்றிக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இனிவரும் காலத்திலாவது கரும்புஉற்பத்தி பெருகும். சர்க்கரைக்கும் தட்டுப்பாடு இருக்காது'' என்றார் அவர்.
விளைச்சல் இல்லை. உற்பத்தியும்இல்லை!
கரும்பு விளைச்சல் ஏகத்துக்கும்குறைந்ததால் சர்க்கரை உற்பத்தியும்பெருமளவில் குறைந்திருக்கிறது. 2006-07-ல் சர்க்கரை ஆண்டில்அக்டோபர் முதல் செப்டம்பர்வரையிலான காலமே சர்க்கரைஆண்டாகக் கருதப்படுகிறது!) இந்தியாவில் உற்பத்தியானசர்க்கரையின் அளவு 283 லட்சம் டன். இதுவே 2007-08-ல் சர்க்கரை ஆண்டில்லட்சம் டன் ஆக குறைந்தது. 2008-09-ல் 145 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி ஆகும் என்றுகணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுக்க 500 கரும்பாலைகள் உள்ளன. இவற்றுக்குத் தேவையான மூலப்பொருளான கரும்பு கிடைக்காததால் பலகரும்பாலைகள் சர்க்கரை உற்பத்தி செய்யமுடியாமல் மூடிக்கிடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக 91 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துவந்தமகாராஷ்டிராவில் இந்த சர்க்கரை ஆண்டில் வெறும் 45 லட்சம் டன் சர்க்கரைமட்டுமே உற்பத்தியாகுமாம். உ.பி-யில் கடந்த ஆண்டு 73 லட்சம் டன் சர்க்கரைஉற்பத்தியானது. ஆனால், இந்த சர்க்கரை ஆண்டில் வெறும் 42 லட்சம் டன்மட்டுமே உற்பத்தியாகுமாம். ( 263
கர்நாடகாவில் மொத்தம் 54 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இதில் 50 சர்க்கரை ஆலைகள் போதிய அளவு கரும்பு கிடைக்காததால் தற்காலிகமாககரும்பு அரவையை நிறுத்தி வைத்துள்ளன. இந்த ஆண்டு வெறும் 16 லட்சம் டன்சர்க்கரையை மட்டுமே கர்நாடகத்தைச் சேர்ந்த சர்க்கரை ஆலைகள் உற்பத்திசெய்துள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 சதவிகிதத்துக்கும் குறைவு.
ஆந்திர மாநிலத்திலும் இதே கதைதான். மொத்தமுள்ள 37 சர்க்கரை ஆலைகளில்ஆலைகள் கரும்பு அரவையை இப்போதைக்கு நிறுத்திவிட்டன. இதனால்ஆந்திராவில் மட்டும் 55% அளவுக்கு சர்க்கரை உற்பத்தி குறைந்திருக்கிறதாம். 35
கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் நிலைமை இப்படி இருக்க, தமிழகத்தில் மட்டும்நிலைமை வேறாக இருக்குமா என்ன! தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வரைலட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆகியிருக்கிறது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 22% குறைவு. 17
எகிறும் சர்க்கரை விலை!
சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால் சர்க்கரை விலையும்ஏகத்துக்கு ஏற ஆரம்பித்திருக்கிறது. இப்போதைக்கு இந்தியா முழுக்க உள்ளமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 225 லட்சம் டன் சர்க்கரை கட்டாயம் தேவை. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தியாகப் போகும் சர்க்கரையோ, வெறும் 145 லட்சம்டன் மட்டுமே. அதிகபட்சமாகத் தேவைப்படும் 80 லட்சம் டன் சர்க்கரையைஎங்கிருந்து கொண்டு வருவது என்று வழிதெரியாமல் திகைத்துப்போயிருக்கிறது மத்திய அரசாங்கம். உற்பத்தி குறைவதால் சர்க்கரையின்விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு குவின்டால்சர்க்கரை விலை 1,950 ரூபாயாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் இதுவேரூபாயாக அதிகரித்தது. வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு சர்க்கரையின்விலை இன்னும் அதிகரிக்கலாம் என்று இப்போதே வயிற்றில் புளியைக்கரைக்கின்றனர் சில நிபுணர்கள். 2,420
காலியாகும் சர்க்கரை கையிருப்பு!
பொதுவாக மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட அளவு சர்க்கரையைத் தொடர்ந்துகையிருப்பில் வைத்துக்கொள்ளும். இப்படி கையிருப்பில் வைத்துக்கொள்ளும்சர்க்கரைக்கு 'பஃபர் ஸ்டாக்' ( Buffer Stock) என்று பெயர். ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் டன் அளவு சர்க்கரையை மத்திய அரசாங்கம் கையிருப்பில்வைத்துக்கொள்ளும். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் சர்க்கரைவிலை தொடர்ந்து அதிகரித்தால் மக்களிடம் அதிருப்தி உருவாகி, மக்களின்ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என காங்கிரஸ் அரசாங்கம் பயப்படுகிறது. இதனால் சர்க்கரை விலை ஏறாமல் இருக்க தன்னுடைய கையிருப்பில்இருக்கும் சர்க்கரையைத் தொடர்ந்து வெளிமார்க்கெட்டுக்கு விற்று வருகிறதுமத்திய அரசாங்கம். மொத்தமுள்ள 50 லட்சம் டன் 'பஃபர் ஸ்டாக்'கில் 13 லட்சம்டன்னை மத்திய அரசாங்கம் ஏற்கெனவே கொடுத்துவிட்டது. இதனால்சர்க்கரையின் விலை ஒரு குவின்டாலுக்கு 400 ரூபாய் குறைந்திருக்கிறது. எதிர்காலத்துக்கு என வைத்திருக்கும் சர்க்கரையை இப்படி தொடர்ந்துவெளிமார்க்கெட்டில் விற்கலாமா? திடீரென சர்க்கரைத் தட்டுப்பாடு வந்தால்மத்திய அரசாங்கம் சர்க்கரைக்கு எங்கே போகும்? இன்று இருக்கிறது என்றுசெலவு செய்துவிட்டால் நாளைக்கு பூதாகாரமாக பிரச்னை எழுந்து நிற்குமே? என்று கேள்வி எழுப்புகின்றனர் சில நிபுணர்கள். தேர்தலுக்குப் பிறகுஇப்போதிருக்கும் காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அல்லது பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தாலும் சர்க்கரை பிரச்னையை எப்படிச் சமாளிக்கப் போகிறதோ!
இறக்குமதியால் பிரச்னை தீருமா?
சர்க்கரை உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பதால் வேறுவழியில்லாமல் வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய முடிவுசெய்திருக்கிறது மத்திய அரசாங்கம். 2008-09-ல் சர்க்கரை ஆண்டில் 35 லட்சம்டன் சர்க்கரையை வெளிநாடுகளிலிருந்து உற்பத்தி செய்ய முடிவுசெய்திருக்கிறது. இதில் 25 லட்சம் டன் சர்க்கரை கருப்புச் சர்க்கரை ( Raw sugar) ஆகும். மீதமுள்ள 10 லட்சம் டன் சர்க்கரை வெள்ளைச் சர்க்கரை.
''இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியாகும் சர்க்கரை 145 லட்சம் டன். அரசாங்கத்தின் கையிருப்பு சுமார் 30 லட்சம் டன். வெளிநாடுகளிலிருந்துஇறக்குமதியாகும் சர்க்கரை சுமார் 35 லட்சம் டன். ஆக மொத்தம் 205 லட்சம் டன். நாட்டின் மொத்தத் தேவையான 225 லட்சம் டன்னுக்கு இன்னும் 20 லட்சம் டன்சர்க்கரை வேண்டும். இதற்கு மத்திய அரசாங்கம் எங்கே போகும்? இறக்குமதியால் சர்க்கரை பிரச்னை தீர்ந்துவிடாது'' என்று சொல்கின்றனர் வேறுசிலர்.
சர்க்கரைத் துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் பற்றி சர்க்கரை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் என்ன நினைக்கின்றன என்பதை அறிய தமிழகத்தில்உள்ள முன்னணி நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டோம். எந்தப்பதிலும் கிடைக்கவில்லை. இன்றுள்ள நிலையில் வாய் திறந்து பேசினால் வம்புஎன்று நினைக்கின்றன சர்க்கரை நிறுவனங்கள். என்றாலும் சர்க்கரைநிறுவனங்களின் சிந்தனைப் போக்கை நம்மிடம் கோடிட்டிக் காட்டினார்கள் சிலநிபுணர்கள். அவர்கள் சொன்னதாவது:
''சர்க்கரை அதிகமாக உற்பத்தியாவதும், உற்பத்தி ஆகாமலே போவதும்மாறிமாறி நடக்கும் விஷயம்தான். அரசியல்வாதிகளின் நிலையற்றகொள்கையினால்தான் சர்க்கரைத் துறை வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறது. அரிசிக்கோ, கோதுமைக்கோ எந்தக் கட்டுப்பாட்டையும் அரசாங்கம்விதிப்பதில்லை. ஆனால், சர்க்கரையை மட்டும் இவ்வளவுதான் மார்க்கெட்டில்இருக்க வேண்டும்; இன்ன விலைக்குத்தான் விற்கவேண்டும் என்றெல்லாம் பலநிபந்தனைகளை எங்கள் மீது திணிக்கிறது. தினமும் மூன்று வேளைசாப்பிடக்கூடிய அரிசியை ஒரு கிலோ ரூ.35-க்கு விற்க அனுமதிக்கும் இந்தஅரசாங்கம், சர்க்கரையை மட்டும் ரூ.30க்கு மேல் விற்கக்கூடாது என்றுநினைக்கிறது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் 5 கிலோ சர்க்கரையைபயன்படுத்தினால்கூட 150 ரூபாய்க்கு மேல் ஆகாது. சர்க்கரையின் விலையைஅரசாங்கம் அனுமதித்தால் கம்பெனிக்கும் லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்'' என்றனர்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் சர்க்கரைத் துறை கலகலத்துத்தான்போயிருக்கிறது.
நன்றி: விகடன் http://www.vikatan.com/pasumai/dig8vc.html
2. நோயும், வெள்ளை சர்க்கரையும்
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பைபலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக்கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப்பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்டகொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப்பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ்மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம்அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள்எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன்விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்தசர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்துஎல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரைமயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ளபயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில்சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தைஅவை பாதிக்கின்றன.
2. பதப்படுத்தப்பட்ட வெள்ளைமாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால்செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக்வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள்அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள்எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின்அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்தகூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம்செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழுகோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களைசாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.
3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன்கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்தஎண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ளமாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.
உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம்உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவைஅடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில்இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.
4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிசஉணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும்பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.
உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம்அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுதுதேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும்பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும். தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்தஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவைநேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.
5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும்தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.
உடல் நலத் தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும்வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய்ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம்ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடையஉடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில்டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால்நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்புஏற்படுகின்றது.
நன்றி: http://www.abolishdiabetes.com/?p=75