ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்
தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
1. செயற்கை இனிப்புகள்: இந்த இனிப்புகளுடைய கலோரி மதிப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இனிப்புகள் நம்முடைய பசியைத் தூண்டிவிடுகின்றன. இந்த வகை இனிப்புகள் பல சாதாரண டேபிள் சர்க்கரையுடன் குளோரினை கலப்பதால் உண்டாக்கப்படுகின்றன. பிர்ச் மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சைலீட்டால் என்ற இயற்கையான சர்க்கரை இந்த செயற்கை இனிப்புகளைவிட நம் உடம்பிற்கு நல்லது. ஏனென்றால் சைலீட்டால் சாப்பிடும் பொழுது நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வேகமாக ஏறுவதில்லை.
2. அஸ்பிரின்: டாக்டர்கள் வலியை குறைப்பதற்கும், இதயத்தின் பாதுகாப் பிற்கும் நம்மை அஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அஸ்பிரின் சாப்பிடுவதால் நம்முடைய வயிறு புண்ணாகி வெந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே அஸ்பிரினுக்குப் பதிலாக மீன்எண்ணெய் மற்றும் இஞ்சியைச் சாப்பிட்டால் நாம் விரும்பும் பாதுகாப்பு நம் இதயத்திற்குக் கிடைக்கும்.
3. பாட்டில் ஜுஸ்: இந்தப் பழச்சாறுகளில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருப்பதால் பழச்சாறை சாப்பிட்டவுடன் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறுகிறது. முறையில் பதப்படுத்தப்பட்ட பழங்களிலிருந்துதான் இந்த பாட்டில் ஜுஸ் செய்யப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது இந்தப் பழங்களிலுள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையெல்லாம் வீணாகிப் போகின்றன.
4. பாட்டில் குடிநீர்: மினரல் வாட்டர் பாட்டில் என்று விற்கப்படுகின்ற இந்த குடிநீர் பாட்டில்கள் இவைகளை விற்கும் கம்பெனிகள் சொல்வதைப் போல கிருமிகள் இல்லாமல் இருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆகவே அவரவர் வீட்டில் வைத்துக் கொண்டு அதிலிருந்து வடிகட்டி பெறப்படும் குடிநீரை குடிப்பது நல்லது.
5. கால்சீயம் மாத்திரைகள்: கால்சீயம் கார்பனேட் கலந்துள்ள இந்த மாத்திரைகள் எலும்பு மெலிவு நோயை தவிர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் இந்த மாத்திரைகளில் காணப்படும் கால்சீயம் நாளைடைவில் நம் உடம்பில் சேர்ந்து சிறுநீரகத்தில் கல்லாக மாற வாய்ப்புள்ளது. நம்முடைய வழக்கமான உணவிலேயே நிறைய கால்சியம் இருப்பதால் நாம் இப்படி செயற்கை கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடத் தேவையில்லை.
6. சீரியல்: கடைகளில் விற்கப்படும் ஓட்ஸ் சீரியல் போன்றவைகளெல்லாம் மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவையாகும். அதே சமயத்தில் செயற்கை விட்டமின்களும் அதில் கலந்துள்ளன. மேலும் இப்படிப்பட்ட சீரியல்களில் சர்க்கரை அதிகமாகவும், இயற்கை விட்டமின்களும், நார்ச்சத்துக்களும் குறைவாகவும் இருக்கும். ஆகவே உண்மையிலேயே ஊட்டம் மிக்க காலை உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த சீரியல்களுக்குப் பதிலாக முழுமையான தானியங்களால் செய்யப்பட்ட சீரியல்களை உணவாக உட்கொள்ள வேண்டும்.
7. பால்: பால் மூலம் நமக்கு நிறைய கால்ஷியம் கிடைக்கிறது என்றாலும் நாம் பாலை அதிகமாக உட்கொண்டால் நம் உடம்பில் மக்னீஷியம் சேருவது தடைப்படும். அது நமக்கு நல்லதில்லை. ஏனெனில் மக்னீஷியம் நம் உடம்பிற்குத் தேவையான ஒரு ஊட்டமாகும். பதப்படுத்தும் பாலில் உள்ள கேசின் என்ற பால் புரோட்டீன் கெட்டுவிடுகிறது. அது கெடுவதால் உடம்பிற்குத் தேவையான என்ஸைம்கள் மற்றும் விட்டமின்கள் ஆ-6 மற்றும் ஆ-12 ஆகியவற்றையும் சேர்த்துக் கெடுக்கிறது. மேலும் பதப்படுத்தும் பொழுது பாலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன. ஆகையால் நமக்கு கால்ஷியம் வேண்டுமென்றால் பாலுக்குப் பதிலாக சார்டின் மீன்களிலிருந்தும், கொட்டைகளிலிருந்தும் பெற்றுக் கொள்வது நல்லது.
8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.
9. ஈடிஞு உணவுகள்: இவைகளும் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளாகும், இவற்றிலெல்லாம் கார்ன்ஸிரப்பும், ஹைட்ரஜன் கலந்த எண்ணெயும் சேர்ந்திருக்கும். இவைகளை சாப்பிடுவதால் நமக்கு பசி அதிகம் உண்டாகி இதன் காரணமாக மேலும் அதிகமாக சாப்பிடுவோமே யொழிய உண்மையில் இவைகளால் நமக்கு நல்லது நிகழ்வதில்லை. இவைகளையும் உணவுக் கம்பெனிகளின் ஏமாற்று வேலையாகக் கருத வேண்டும்.
10. குறைந்த மாவுச்சத்து ஈடிஞு: இவைகளும் நம் உடம்பிற்கு நல்லதில்லை. ஏனென்றால் நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் கெட்ட கார்போஹைட்ரேட் என்று தரம்பிரித்து இந்த உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுவதில்லை.
11. ஈடிஞு குணிஞீச்: இந்த சோடாவில் உள்ள பாஸ்பரஸ் என்ற கெமிக்கல் நம் உடம்பிற்கு கெடுதல் என்பதால் சாதா சோடாவைவிட எந்த வகை யிலும் நல்லதில்லை என்றாகிறது. மேலும் கெமிக்கல்கள் நம்முடைய பசி உணர்வை மிகவும் தூண்டிவிடும். இதன் காரணமாக நாம் முன்பைவிட அதிகமாகச் சாப்பிட நேரிடும்.
12. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்: இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.
13. மாற்று கொழுப்புச்சத்து இல்லாத உணவுப் பண்டங்கள்: சில உணவுப் பண்டங்களில் இப்படியொரு முத்திரை குத்தி இருந்தாலும் அதனால் மாற்று கொழுப்புச் சத்து இல்லையென்றோ, ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இல்லை என்றோ அர்த்தமில்லை. ஒரு கரண்டி அளவிற்கு எடுத்துக் கொண்டால் அதில் 0.4 அளவிற்கு மாற்று கொழுப்புச் சத்து இருந்தால்தான் நாம் உண்மையில் மாற்று கொழுப்புச் சத்து இல்லை என்று சொல்லலாம். உள்ளிருக்கும் உணவுப் பண்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இருக்கின்றதா இல்லையா என்று தெரியும்.
14. பீட்ஸா: பீட்ஸா உலகம் முழுவதும் பாப்புலராகி விட்டது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால் பீட்ஸாவிலுள்ள ஹைட்ரஜன் கலந்து கொழுப்புச் சத்து இருக்கிறது. அதிலுள்ள கறியிலுமிருக்கிறது. அதிலுள்ள கோதுமையில் மாவுச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆகவே, அசைவ பீட்ஸாவைவிட சைவ பீட்ஸாவை சாப்பிடுவதே நல்லது.
15. சோடா: சோடா பாப்புலரான பானமாக இருந்தாலும் அதில் நிறைய சர்க்கரை இருக்கிறது. மேலும் அதில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த பாஸ்பரஸ் கால்சியம் உடம்பில் சேர்வதைத் தடுக்கிறது. இதன் காரணமாக உடம்பில் அமிலத் தன்மை அதிகமாகிறது. 12 அவுன்ஸ் சோடா பாட்டிலில் 10 டீஸ்பூன் அளவிற்காவது சர்க்கரையிருக்கும். அது 120 கலோரிக்குச் சமமாகும்.
16. சர்க்கரையில்லாத தின்பண்டங்கள்: சர்க்கரையில்லாத திண்பண்டங்களில் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் பசியைத் தூண்டும் மறைமுகமான சர்க்கரை பொருட்கள் உள்ளன. இவற்றின் காரணமாக நம் உடலில் கூடுதல் கொழுப்புச் சத்து சேருகிறது.
17. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
18. தயிர்: பதப்படுத்தும் பொழுது தயிரிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் எல்லாம் அழிந்துவிடுகின்றன. ஆகவே இப்படிச் செய்யாமல் இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்
இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.
உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக உடம்பில் சேர்ந்தால் நம் உடம்பிற்கு நல்லது இல்லை என்றாலும் சரியான அளவில் சாப்பிடும் பொழுது அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. கொலஸ்ட்ரால் நம்முடைய ஈரலில் தயாரிக்கப்படுகிறது. நம்முடைய உடம்பில் உள்ள செல்களுக்கு அது ஒரு திண்மை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் கூடுதலாக இருக்கும் பொழுது நம்முடைய ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்றாலும் அளவோடு அது இருக்கும் பொழுது இதயத்தை பாதிக்கக்கூடிய தனித்து சுதந்திரமாக இயங்கும் anitioxidents என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆக்ஸிஜன் கூறுகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
கொலஸ்ட்ராலை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நிறைய பேர் முட்டையை முழுவதுமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான அணுகு முறையாகும். ஏனென்றால் முட்டையில் நிறைய புரதச்சத்துள்ளது. இதில் சோளின் (ஒமேகா 3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபாலிக் ஆசிட் ஆகியவை கிடைக்கின்றன. இவையெல்லாம் நம்முடைய இதயத்திற்கு நல்லதாகும். முட்டையில் 200 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுபோக 4 மி.கி. கொழுப்புச்சத்துள்ளது. இக்கொழுப்புச்சத்தில் 2.4 கிராம் தனித்த கலப்பில்லாத கொழுப்புச் சத்தாகும். 0.6 கிராம் அளவிற்கு கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்தும் உள்ளது. இவையிரண்டும் நல்ல வகையான கொழுப்புச் சத்தாகும். ஹைட்ரஜன் கலந்துள்ள தவிர்க்கப்பட வேண்டிய கொழுப்புச்சத்து முட்டையில் 1.6 கிராம் அளவிற்குத்தான் உள்ளது. முட்டையில் உள்ள மஞ்சளை நாம் விலக்கினோம் என்றால் அதன் வழியே நாம் கொலஸ்ட்ராலை தவிர்த்து விடலாம். முட்டையிலுள்ள வெள்ளை பாகத்தில் மஞ்சளில் இருப்பதைவிட அதிக புரதச்சத்துள்ளது. மேலும் அதே சமயத்தில் வெள்ளைப் பாகத்தில் கொலஸ்ட்ரால் எதுவுமேயில்லை.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதைப் பற்றி மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டிருப்பதைப் போல் கார்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது பற்றியும் அச்சம் எழுந்துள்ளது. மாவுச் சத்தை அறவே தவிர்ப்பது என்பதும் சரியில்லை. தேவையான அளவிற்கு நாம் காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை சாப்பிடவில்லை என்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை கிடைக்காது போய்விடும். இவை பற்றாக்குறையானால் நாளடைவில் உடம்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நன்றி: http://www.abolishdiabetes.com/?p=75