இயந்திர தொழிற்நுட்பத்தின் மறுபக்கம்
அனைவருக்கும் வணக்கம்,
நியூட்டன், ஐன்ஸ்டீன் முதல் அப்துல் கலாம் வரை நாம் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பருப்பொருளை ஆராய்ச்சி செய்து பல கருவிகளை கண்டிபிடித்தனர். கண்டுபிடிப்புகளை மனிதனின் தேவைகளுக்கு என்று பயன் படுத்த ஆரம்பித்தனர். இன்று மனிதனின் தேவைகள் என்பவை நிர்ணயிக்க முடியாததாக மாறி விட்டது. உணவு, உடை, இருப்பிடம் என்பது இயற்கையோடு இயந்து வாழும் போதுஅவை தேவைகள். ஆனால் இன்று, இயந்திர தொழிநுட்பம் அவனுக்கு இயற்க்கை தேவைகளை தவிர செயற்கையாக பல தேவைகளை சமுதாயத்தில் உருவாக்கியது. பொருளாதாரம் என்பது, குறுகிய அளவில் மனித உடல் உழைப்பிற்கு மதிப்பிடும் முறை மாறி, இயந்திர முறையில் இயற்கையை வளங்களை அடித்தலமாகக்கொண்டு ஒரு செயற்கை ஆடம்பர தேவைகளுக்கான ஒரு முறையை உருவாக்கியது. ஆடம்பரத்தை விற்ப்பனை செய்யும் காலம்தான் நவீன உலகமயமாக்கலின் முதல் கட்டம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்தது. ஏகாதிபத்தியத்தை விட்டொழித்த பிறகு, தாங்கள் வைத்திருந்த பொருளாதார திட்டத்தை அமல்படுத்தி ஒரு சாம்ராஜியத்தை மேற்கத்திய சமுதாயம் தொழிநுட்பம் என்ற பெயரில், உலக நாடுகளை மேன்படுத்துவதாக கூறிக்கொண்டு தங்கள் இயந்திர சாதனங்களை, அவர்கள் பொருளாதார கொள்கைகளை, கல்விமுறை, அவர்களது கலாச்சாரம் போன்றவற்றை திணித்து அடிமைபடுத்தியது. இதற்கிடையில் இயந்திரம் சார்ந்த வாழ்க்கை முறை மனிதனை வாழைப்பழ சோம்பேறியாக்கிவிட்டது. மக்கள்தொகையும் பெருக வித்திட்டது.
உணவு பொருள் பற்றாக்குறை அதிகமாகவே, உணவு உற்ப்பத்தியிலும் இயந்திரத்தின் கோரப்பல்லை செலுத்தியது. விளைவு, இன்று நிலம், நீர், காற்று, உணவு என அனைத்தும் பாழாகி, தொழிநுட்பம் மற்றும் அது சார்ந்த பொருளாதார மதிப்பான நவீன பணமதிப்பு (ஆதாரமில்லாத மதிப்பு) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு உலக பொருளாதாரம் இயங்கிக்கொண்டிருக்கிறது. எத்தனை நாள் இயங்கும்? இயந்திர பருப்பொருள் சார்ந்த இயற்க்கை கனிம வளங்களை சார்ந்த தொழிர்நுட்பத்திற்கு ஒரு எல்லை உள்ளது. அது இயற்கையின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் அது முடியாத ஒன்று. ஏனென்றால், இயந்திர தொழினுட்பங்கள் எல்லாமே இயற்கையின் அழிவில் உண்டானவையே. இன்று இயற்க்கை வளங்களை சிதைத்துவிட்ட நிலையில் அதனால் இயங்கமுடியாது என்ற நிலை உருவாகி வருகிறது. அதன் எதிரொலியே உணவு பற்றாக்குறை மற்றும் போலி பணமதிப்பீட்டின் வீழ்ச்சிகளும்.
"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்ற கூற்றுக்கு, இப்போது இருக்கும் நிலை ஒரு அருமையான எடுத்துகாட்டு. இயந்திர தொழிநுட்பம் சோறு போட உதவும் என்று நம்பும் சில மடச்சாமபராணிகள், அதன் அழிவிக்கும் தன்மை நிரந்தரமினமையை இப்போதாவது உணர்ந்து, இயற்க்கை வளங்களை மீட்டெடுக்க முயல வேண்டும். ஆடம்பரங்களை குறைத்து ஒரு எளிமையான இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்க்கையை அமைக்க வழிசொல்ல வேண்டும. இல்லையெனில், மனித இனம் சோம்பேறிகளுக்கு உரித்தான சில வியாதிகளால் பீடிக்கப்பட்டும், இயந்திர தொழிநுட்ப நச்சுகளாலும், உணவு இன்றியும் அழிய நேரிடும். அவனது இயந்திர தொழினுட்பமும் அவனது மூளையோடு மண்ணோடு மண்ணாகிவிடும். கீழுள்ள குறும்படம் இதனை எளிதாக விளக்கும்.
No comments:
Post a Comment