ஜல்லிக்கட்டுக்கு தடை: சேவல் சண்டைக்கும் தடை வருகிறது? –Maalaimalar
|
அப்ப இந்த கொடுமையை யார் தடை செய்வார்கள்?
|
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மே 12, 11:38 AM IST
சென்னை, மே.12–ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதுபோல சேவல் சண்டை போட்டி நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய மிருக வதை எதிர்ப்பு இயக்கத்தின் இயக்குனர் மணிலால் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:– சேவல் சண்டை நடத்துவதால் சேவல்கள் காயம் அடைகின்றன. உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் மிருகங்கள் பறவைகள் துன்புறுத்தப் படக் கூடாது. அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு பிறப்பித்த உத்தரவில் மிருகங்கள், பறவைகள் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்கும் கடமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சேவல் சண்டையில்
சேவல்கள் காயப்படுத்தப்படுகின்றன.
எனவே மாநில அரசு இதை தடுக்கும் வகையில் சேவல் சண்டைக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே சேவல் சண்டைக்கும் தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
|
|
மிருகவதையை தடைசெய்யாமல் ஜல்லிக்கட்டை தடை செய்வது முட்டாள்தனம்
ஜல்லிக்கட்டு தடை என்பது நமது பாரம்பரியத்தை அழிக்கும் சதி!