Tuesday, 27 April 2010

நீயா-நானா போட்டி!!! இயற்கையை மனிதனால் அடக்கி ஆள முடியுமா?


அனைவருக்கும் வணக்கம்! எல்லாதுக்கும் நமஸ்காரமுங்க!

நேத்தைக்கு விஜெய்தொலைக்காட்சியில் நீயா? நானான்னு? ஒரு விவாதம்நடக்கிறத பார்த்தனுங்க. "அண்ணன்" கோபிநாத் முடிஞ்சவரைக்கும் ரெண்டு பக்கமும்தனது வழக்கமான பாணியில்நழுவிக்கொண்டே இருந்தார். ஆத்துல ஒரு கால், சேத்துலஒரு கால். நமது காங்கிரஸ் ராசாக்கள் மாதிரி. எனக்கு சொஸியலிஸமும்வேணும், காபிடலிஸமும் வேணும்ன்னு நேரு மாமா அடம் பிடிச்ச மாதிரி. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மாதிரி. இந்த பயபுள்ளமன்னிக்கவும் "அண்ணன்" கோபிநாத்து ரெண்டு பக்கமும் ஜால்ரா போட்டபடிஇருக்காரு! என்ன பண்ணுவாறு பாவம்? அவருக்கு அவரது பொழப்பு. யாரையும்பகைச்சுக்க முடியாது. டி.வி. யும் நடத்தனும். அவரு நடுவுனிலைமையோடுபேசுராருன்னு யாரும் நெனச்சுகாதீங்க! அவரு பேசுர மாதிரி பேசினா விஜய்டி.வி. பிசினசுக்கு வேனா ஒத்துவரும். நடைமுறைக்கு ஒத்துவராது. எதாவதுநீதி இருந்துச்சா அங்க? கலைஞர் மாதிரி பேசி முடிசுட்டாரு "அண்ணன்" கோபிநாத்து! அண்ணன் அழகிரி மாதிரி இதுதான் இதுல்லைன்னு பேசுவாரா, அதஉட்டுபுட்டு இயற்கையும் தேவை நவீனமும் தேவைன்னு உடான்சு உடுரார். இதுக்கு சாலமன் பாப்பயாவும், கலைஞரும் தேவல! "அண்ணன்" கோபிநாத்துக்கு வர்ர செம்மொழி மாநாட்டுல "கலைஞர்" விருது கொடுக்கலாம். ரெண்டுமணிநேரம் பேசுனத வச்சு எது நீதியான வாதமுன்னு சொல்லமுடியல! ஒரு நீதியை ஒட்டி, எந்த ஒரு பொது வாத நிகழ்ச்சியின் தீர்ப்பும் இருக்கனம். நீதிபற்றியே இங்கு யாரும் பேசாமல் நடைமுறைக்கு எவ்வளவு ஒத்துவரும்ன்னுகேள்விகேட்டு அதற்கு தக்க முடிவெடுத்தால் தற்போதைய இந்தியா போல்குழப்பம்தான் மிஞ்சும் என்பது நிதர்சனம். ரெண்டு பக்கம்மும் பேசுவதுநடுவுநிலையுமல்ல! நீதியுமல்ல! மழுப்பல்! சந்தர்ப்பவாதம்! மொத்ததில்மக்களை குழப்பி விடவும், அறியாமையில் ஆழ்த்தவுமே இத்தகைய நீதியற்றமுடிவுகள் உதவும். இது வெறும் பொழுதுபோக்கே! இதற்காக தனது பொன்னானநேரத்தை செலவிட்ட இயற்கை விவசாய ஆர்வலர்களை கடிந்துகொள்கிறேன். மேலும், விவாத மேடையில், அரசியல் மேடையில் தீர்ப்பு வழங்குவது போல்நிகழ்ச்சியை முடித்த "அண்ணன்" கோபிநாத்துக்கு எனது ஆட்சேபங்கள்.

நவீன விவசாயமா? இயற்கை விவசாயமா?

இயற்கை விவசாய அணி:

நவீன விவசாயத்தின் ஏகாதிபத்திய வாயிலான தோற்றம், பண்டைய காலஇந்தியாவின் விவசாய அமைப்பு மற்றும் வாழ்க்கை பிணைப்பு, அதன் பிறகுஏற்பட்ட பேராசை சார்ந்த பொருளாதார அமைப்பின் விளைவு முதலியவற்றைஎடுத்து வைக்க முற்பட்டனர் இயற்கை விவசாய அணி. இன்னும் இதன்விளைவுகளை அடிப்படை கோளாறுகளை எளிமையாக விளக்கி இருக்கலாம். ஆணித்தணமாக எடுத்துரைத்திருக்கலாம். அதற்குரிய சந்தர்ப்பத்தை அண்ணன்கோபி வழங்கினாரா? இல்லை இயற்கை அணி சந்தர்ப்பத்தை கோட்டைவிட்டனரா? இல்லை இத்தகைய ஆழ்ந்த விசய ஞானம் இல்லையா? போன்றவைஎனக்கு தெரியவில்லை. எனினும், அனைவருக்கும் எனது நன்றிகள்! வாழ்த்துக்கள்! உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, என்றும் ஒற்றுமையாகஇருங்கள். தொடர்பில் இருங்கள். உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்துஒரு உன்னத பணியாற்றுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

நவீன விவசாய அணி:

இவர்கள் வேறு யாருமல்ல! 1835 ஆம் ஆண்டு "லார்டு மெக்காலே" கண்டகனவை, நனவாக்கிக்கொண்டிருக்கும் பிரிடிஷ் இந்தியாவின் ஒன்பதாம்தலைமுறை. இவர்கள் தேசிய நலன் என்று கூறிக்கொண்டு பாரதத்தின்தனித்தன்மையை அழிக்க முயற்சிக்கும் த்ரோகிகள். இவர்கள் குழப்பத்தில்இருக்கும் அணியல்ல! அறியாமையில் இருக்கும் அணி. அராஜக பாணியைநிகழ்ச்சி முழுவதும் கையாண்டனர். நான் சொல்வேன் நீ கேள் என்ற ஏகவசனத்தை இருவர் மூன்றுமுறை உமிழ்ந்தனர். நான் எஃஸிகுடிவ். நான்சொல்கிறென். அதன் படி நீங்கள் மஞ்சள் பயிரிடுங்கள் என்று ஒருபிதற்றல்வாதி கூற அதற்கு மறுப்பு தெரிவித்த ஆத்தூர் இயற்கை விவசாயி; நீங்கள் வந்து எனது பக்கத்து நிலத்தில் செய்து காட்டுங்கள் என்று கூற! எதற்காக அவ்வாறு கூறினார் என்று தெரியாமல் அண்ணன் கோபிநாத்து குறுக்குகேள்வி கேட்க, அதற்கு அந்த விவசாயி கூறிய பதிலின் சாராம்சம், பின்னனிதெரியாமல் அண்ணன் கோபிநாத்து வினவ, "லார்டு மெக்களே" அணி கெக்கபிக்க என்று சிறுகுழந்தை பாணியில் கொக்கானி காட்ட; இதைக்கண்டு அந்தவிவசாயி நொந்து போனார். அறிவிழந்த மக்களிடையே நல்கருத்தைபேசிவிட்டோமே என்று அந்த நிமிடம் கடிந்து கொண்டிருப்பார். இப்படிப்பட்டஉருப்படாத கூட்டத்தில் கணேசன் என்ற "லார்டு", ஐரோப்பிய பூச்சி மருந்துபுள்ளி விவரங்களை அள்ளி வீசியது. மேலும், தான் ஐரோப்பாவிலிருந்து நேரேவாரேன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டது, விவாத அரங்கின்விதிகளுக்கு மாறனது. மேலும், தவறான புள்ளிவிவரங்களை கொடுத்துசுல்தான் இஸ்மாயிலிடம் மாட்டிகொண்டது, நல்ல பாடம்.

இவர்கள் பேச்சிலும் நாகரிகமற்ற தன்மையை கையாண்டதுமுதலே இவர்களது அநீதியான போக்கு புலப்படுகிறது. உணவுப்பாதுகாப்புவேண்டும் என்று கரைந்த காகங்களை நல்ல விதமாக பதிழட்டிகொடுத்தானர்நியாயமான் அணியினர். வாழ்க்கைமுறை மாறவேண்டும் என்ற நீதியைவியாபார பக்கிகளுக்கு, ஆழமரத்தடியில் வைக்க வேண்டிய விவாத்ததைவடபழனியில் பலபலக்கும் ஜொலிஜொலிக்கும் அரங்கில் எடுத்துறைத்தால்எவ்வாறு ஏறும்? விஜய் டிவி. டீமுக்கு கிராமச்சூழல் அலர்ஜியா? அன்னியவாழ்க்கை முறை, முறையற்ற அநாவிசய வாணிப முறை, ஒவ்வாதபயிரிடுமுறை போன்றவையே இன்றய இயற்கை சீரழிவிற்கு, சமூக, ஆரோக்கிய சீரழிவிற்கும் காரணம் என்ற உண்மையை, நவீனவேளாண்மையாளர்களே உணர்ந்து விட்ட சூழ்நிலையில், "லார்டு மெக்காலே" அணியின் பிதற்றலைக்கண்டு எரிச்சல்தான் வருகிறது.

திமிர்பிடித்த அராஜக பேச்சாளர் நீலகண்டன்:

இப்போதுதான் தலைப்புக்கு வரேன். "லார்டு மெக்காள்லெ" அணியின்அறிவார்ந்த கருத்தாலோசகராக ஒருவர் வந்திருந்தார். Ex. Director நீலகண்டன், Madras Institute of Development Studies (MDIS). உலகை தவறான பாதைக்குஅழைத்துச்சென்றவர்கள், இந்த பொருளாதார கத்துகுட்டிகள். "அர்த்தஸாஸ்திரம்" கொடுத்த பாரத மக்கள், "லார்டு மெக்காலே" வின் சதிக்குபின்பு, அனைத்தையும் மறந்து நீலகண்டன் போன்ற பொருளாதாரசர்வாதிகாரியாகவும் மாறியுள்ளனர். இந்த மனிதரின் பேச்சு "அவதார்" படத்தில்வரும் கொடுமைகளை நினைவுபடுத்தியது. "Development" அதாவதுமுன்னேற்றம்" என்ற ஆங்கில வார்த்தையை கூறி, உலகில் "Development" அடைந்த நாடுகள் அனைத்தும், அனைத்து சிக்கல்களுக்கும் ஆளாகியுள்ளன, இந்தியா விதிவிலக்கல்ல என்றார். மேலும், "மனிதன் பிற உயிரினங்களைபோலல்லாது அனைத்தையும் இயற்கையையும் கட்டுக்குள் கொண்டு வரும்ஆற்றல் படைத்தவன்" என்று கூறி தன் அராஜகத்தை தலைக்கனத்தை, டார்வின், மார்ஃஸ் போன்றோரின் சித்தாந்தத்தை நினைவுபடுத்தினார். "

We didn't achieved development, we have progressed economically; Its nothing but growth; Its not development; Its cancerous; Not wholistic என்று இன்றய மேற்கத்தியஅறியவியல் Economic Growth மற்றும் Development ரெண்டிற்குமான வித்யாசத்தைகண்டுணர்ந்து "we need sustainable economic growth" என்றுகூறிக்கொண்டிருக்கையில் இந்த "முன்னாள்" இயக்குனர் "Development" பத்திடமாரம் அடித்து அதில் இயற்கையை வெல்வோம் என்று கூறியது, அவர்மார்ஃஸ் காலத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டியது. Indians economic theories and books were copied, including with its spelling mistakes என்று ஒருவர்கூறியது மீண்டும் இவர் மூலம் நினைவுக்கு வந்தது. இவர் போன்ற அராஜகம்மிகுந்த, இயற்கை விரோத, கொடூரமான, பொறுப்பில்லாத மனிதர்கள் சிலர்இன்னும் காசுக்காக கைக்கூலி வேலை பார்ப்பதால் மரபணு மாற்றுதொழினுட்பம், கலைக்கொல்லிகள் என்று பல வந்தவண்ணம் உள்ளன.

மனிதனை ஒரு அன்னிய சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது. மனிதன்இயற்கையே! மனித செயல்களும் இயற்கையே! ஆனால், அவன் செயல்களில்இருக்கும் சாத்வீகமும், வக்கிரமுமே அவனை வேறுபடுத்துகின்றன. சாத்வீகமாக பயபக்தியுடன் இருக்கிற சமூகம், ஆக்குகிறது. வக்கிரத்துடன்பயத்திலும், வெறியிலும், லோபத்திலும் மூழ்கிய சமூகம், அழிக்கிறது. நம்மைநாமே அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தேவை. அதை விடுத்துஇயற்கையை அடக்கி ஆள்வோம் என்று கூறுவோரை மனிதர்களாகவேஏற்றுக்கொள்ள முடியாது.

முடிவென்ன?

பயத்திற்கும், பயபக்திக்கும் வித்தயாசம் உண்டு.

பயத்தால், "மனிதன் பிற உயிரினங்களை போலல்லாது அனைத்தையும்இயற்கையையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்தவன்" போன்றபேச்சுக்கள்,இயற்கை விரோத ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் நடக்கும். கடந்தகாலத்தில் 200 வருடத்தில், கண்டுபிடிக்கப்பட்ட பல விசயங்கள் பயத்தலும், போர்க்காலங்களில்ளும், அறியாமையலும் நிகழ்ந்தவையே. சுருக்கமாகசொன்னால், "விநாச காலே விபரீத புத்தி". ிி

பயபக்தி என்பது பயத்தை நீதியின் (தன்னை வாழ் வைப்பன, காப்பனஎ.கா.முன்னோர்கள்,மண்,நதி,சமுத்ரம்,மரம்,தான்யம், பசு முதலியன) மேல்வைத்து அதனை காத்து வாழ்வது. பயபக்தியால் இயற்கை காக்கப்படும். அதனால், இயற்கை விவசாயம் செய்தால் உணவுப்பற்றாக்குறை வரும் என்றஅச்சம் தவிர்த்து இயற்கை வளங்களை பயபக்தியுடன்பாதுகாக்கத்தொடங்கினால், ப்ரதேச வாழ்க்கைமுறைகளை கடைபிடித்தால் எந்தகெடுதலும் நடவாது. இதனை, மக்கள் உணர்வது என்னாளோ????


Monday, 12 April 2010

அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு


அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு

சி.வையாபுரி

First Published : 12 Apr 2010 12:00:00 AM IST

உழன்றும் உழவே தலை என உழவின் உயர்வைக் குறள் சொல்கிறது. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என ஒளவையின் நல்வழி உயர்ந்த வாழ்க்கைக்குத் திசைகாட்டுகிறது. உணவு எனப்படுவது நிலமும் நீரும் என உணவின் பிறப்பிடத்தைக் கூறி உழவனைப் பசிப்பிணி மருத்துவன் என புறநானூறு இலக்கணப்படுத்துகிறது.

குறிஞ்சி என்னும் மலை சார்ந்த வனங்களின் மழை வளத்தால் வழியும் நீர், முல்லை வழி ஆறுகளாகி, மருத நிலத்தில் நகர்ந்து செந்நெல் வயல்களைச் செழிக்கச் செய்தபின் மீன் வளம் பெருகிக் காணும் நெய்தலை ஒட்டிய கடலில் சங்கமிக்கும். மழை வளம் குன்றி குறிஞ்சியும், முல்லையும் வறண்டால் பாலை என சங்கத் தமிழ் நிலங்களை வரிசைப்படுத்துகிறது.

இந்நிலங்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் உணவு முறைகள், உறைவிட வழிகளை எல்லாம் வகை வகையாய்த் தொகுத்து தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

÷நாடு பூராவிலும் பூகோள, மண்வள, இயற்கை தட்பவெட்ப பருவகால மழையின் அளவுகள், தன்மைகளின் அடிப்படையில் பண்டைய அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர்வாரி முறை, மழை நீர், நிலத்தடி நீர் பயன்பாடுகள், பிரதேச உணவுப் பழக்கங்கள் அமைந்தாலன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு கானல் நீராகிவிடும்.

பருப்பு, பயறு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் விளையத்தக்க நிலங்களுக்கெல்லாம் பாசன வசதிகளைச் செய்து கொடுத்த கண்மூடித்தனமான செயல்களால் சாகுபடியில் கரும்பு, நெல் ஒருபுறமும், பருப்பு பயறு எண்ணெய் வித்துகள் மறுபுறமும் நிலைகுலைந்து விளைச்சல் சரிவடைந்தது. எள்ளும், கொள்ளும் விளைந்த நிலங்களில் நெல், கரும்பு என்றானால் மரபுவழி நஞ்சைப் பாசனம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியில் தடுமாற்றங்கள் வராதா?

தினை, சாமை, சீரகம், கடுகு, கேழ்வரகு, பழவகைகள், மூலிகைகள் என்று விளையும் மலைப்பிரதேசங்களில்கூட நிலத்தடி நீரை வைத்து நெல்லும் கரும்பும் பயிரிட அனுமதித்தால் மலைப்பகுதிகளும் விரைந்து வறண்டு, அங்கு வாழும் உயிரினங்கள் தாகத்தால் மடிவது பதற்றமான நிலையல்லவா? நீர், நிலப் பயன்பாடுகளில் சென்ற 35 ஆண்டுகளில் முரண்பாடுகள் முற்றிவிட்டன. புவிவெப்பமும் சேர்ந்து குடிநீருக்காக மலைஉச்சி வன உயிரினங்களும், நிலப்பரப்பு மக்களும் ஒருசேர அலைவதற்கு முற்றிலும் சுயநலத்தை உள்ளடக்கிய பாசனத் திட்டங்களும், நீர்பராமரிப்பும் திறமையற்ற அரசு நிர்வாகங்களுமே மூலகாரணங்கள்.

÷மக்கள் தொகை குறைவாகவும், தட்ப வெப்பநிலை மிதமாகவும், கொண்டுள்ள மேலை நாடுகள் தங்களுக்கு ஏற்புடையது என வகுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் வரம்பின்றி இந்தியாவுக்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் கொண்டு பலதரப்பட்ட தட்பவெப்ப மண்டலங்களையும் அவற்றுக்கு ஏற்புடையதான இயற்கையோடு இயைந்த உணவு மற்றும் உற்பத்தி சாதனங்களையும் புறந்தள்ளினால் வேலை இல்லாத் திண்டாட்டமும், எரிசக்தி பற்றாக்குறையும், சுற்றுப்புறச்சூழல் கேடும் தோன்றிவிடும் என்பதைச் சிந்திக்கத் தவறுவது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு நிகரான நிலைப்பாடாகும்.

இந்தியாவில் மிகைப்பட்ட வேளாண் எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத் தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும்.

நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி ரசாயன உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும் அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள் சூழ்ந்துவிடும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும், கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும் தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான். வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க வேண்டியதாகிறது.

வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும் அகல்வதற்கு இதைவிடவும் வேறு எது சரியானது, எளிதானது.

எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று மூன்று ஆண்டுகளாகத் திரிந்த பத்து வாலிபர்கள் வாய்ப்பு ஏதும் இருந்தால் தங்களுக்கு வழிகாட்டும்படி கேட்டார்கள்.

விவசாய வேலைக்குத் தயாரா என்று வினவியதற்கு தாங்கள் பட்டதாரிகள் என்றும், தங்களிடம் உள்ள நிலங்களில்கூட வேலை பார்க்க விருப்பம் இல்லாமல்தான் வேறு வேலை தேடி அலைவதாகவும் சொன்னார்கள்.

அவர்களில் சிலர் குழந்தைகளோடு இருப்பதும், மனைவியின் கூலியை வைத்தே தங்களது குடும்பம் நடப்பதாகவும் அறிய முடிந்தது. பத்துபேருமே பத்தாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை எதிலுமே சொல்லிக் கொள்ளும்படியாய் மதிப்பெண் பெறவில்லை என்பதை அறிய வேதனைமிகுந்தது.

தகுதி, திறமை என்று எதையும் பெற்றிராத அவர்களிடம் இருந்தது வயதும் உடலும் மட்டும்தான். 10-ம் வகுப்போடு இவர்களை வடிகட்டியிருந்தால் தாங்கள் வாழும் இடங்களிலேயே குலத்தொழில், அல்லது வேளாண்மையில் ஈடுபட்டு இந்நேரம் தக்க அனுபவமும், பயிற்சியும் பெற்று சொந்தக் காலில் நிற்கும் சுயமரியாதையான வாழ்வை உறுதி செய்திருக்க முடியும்.

ஆனால் நம் ஊர் விவசாயத்தில்தான் என்ன இருக்கிறது உழவடை, அறுவடை என்று எல்லாவற்றுக்குமே எந்திரங்கள் புழங்கிவிட்டன. அதனால் உடலுழைப்புக்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன.

மலை முதல் கடற்கரை வரையிலும் இப்போது குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலையும் எப்படி வந்தது என்கிற கேள்வி வலுவடைகிறது. இயற்கை வழி மண்டல வழியான பயிர்வாரி முறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்று உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோக்கிம் வான் பிரெüன் 2008-ம் ஆண்டு கூறியதை தீர ஆராய்வது இப்போது அவசியம் ஆகிறது.

ஆகவே, தேவையை உள்ளடக்கிய தன்னிறைவான உற்பத்திக்கு நதிப்படுகை வழி பயிர்வாரி முறையும், விளைநிலங்களில் இயற்கை சார்ந்த பயிர் சுழற்சி முறையும் அவசியம்.

"பானை சோற்றுக்கு பருக்கை பதம்' என்பதுபோல இதை அந்த பத்து பட்டதாரிகளின் நிலையை வைத்தே இன்றைய நடைமுறைகளை விருப்பு, வெறுப்பின்றி விவாதிக்க வேண்டும்.

மலிவான கல்விச் சாளரங்களின் வழியாய் உயர்கல்வி மாயைக்குள் நுழைந்து பட்டமும் பெற்ற பின்னர் போட்டிகளில் தாக்குப்பிடிக்க முடியாத அநேகர் அந்த 10 பேரைப் போலவே திகைத்துப் போயுள்ளனர்.

சுயநலத்தில் ஆளுமையைத் தொலைத்து நிற்கும் ஆட்சியில், போலி மருந்து தயாரித்து விற்பது போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு படித்த பலரும் வலிந்து தள்ளப்படுகிற துயரம் பெருகி வருகிறது. உணவுத் தேடலின் அருமையை இவர்களுக்குப் புரிய வைக்க அரசாங்கம் தவறிவிட்டது.

உற்றுநோக்கினால் 50 சதத்திற்கும் கீழ் பிளஸ் டூ படிப்பிலும் 60 சதத்திற்கு கீழ் பட்டப்படிப்பிலும், 75 சதத்திற்கு கீழ் மருத்துவம், சட்டம், பொறியியல் முதலான உயர் கல்வியிலும் மாணவர்களைச் சேர்ப்பது வேண்டாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்தே தீரவேண்டும்.

பட்டதாரிகளில் பலர் திறமை என்று எதுவுமின்றி எதிலும் நிலைக்க முடியாமல் சும்மா இருப்போர் பெருகுவதால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும். ஆக, அனைவருக்கும் கல்வி என்பதை 10-ம் வகுப்போடு அல்லது 14 வயதுக்குள் முடித்துவிடவேண்டும்.

அடுத்தகட்ட படிப்புக்கு விதை நேர்த்தி செய்வதுபோல தேவைக்கு ஏற்றாற்போல் தரம் பார்த்து அனுமதிக்கிற நடைமுறையைத் துணிந்து தோற்றுவிக்க வேண்டும். உயர் கல்வி என்பது ஓர் அலங்காரப்பொருள் அல்ல, ஆடம்பரத்துக்கு ஆனதும் கிடையாது, ஒளிரும் அறிவையும், மிளிரும் திறமையையும் மெருகேற்றிக் கொள்கிற அரியதோர் வாய்ப்பு என கருதும் மனப்பாங்கு கொள்கைத் திட்டங்களை வடித்து வழங்கும் அரசாங்கத்திடம் முதலில் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் 10 முதலாளிகளை வலுவடையச் செய்வதைக் காட்டிலும் 10 லட்சம் விவசாயிகளை தலைநிமிரச் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.

வேளாண்மையை மறந்து வெள்ளாமையை இழந்து, விவசாயம் விளங்காத ஒன்று என்று கருதி உயர்கல்வித் தொழில் முதல் கார் தொழில் வரை வரிச்சலுகைகளைத் தரும் ஆட்சியில் முரண்பாடுகள் முற்றி மக்களின் கும்பி எரிந்து குடலும் கருகிப் போவது உறுதி.

நன்றி: தினமணி

Thursday, 1 April 2010

எதிர்காலம் சாமியப்பன் (alias) சட்டை அணியா சாமியப்பன்


எதிர்காலம் சாமியப்பன் (alias) சட்டை அணியா சாமியப்பன்

"மாற்றத்திற்குரிய மாற்றமாய் இரு" என்ற பொன்மொழியின் உருமாய் இருக்கிறார் திரு.சாமியப்பன். அவநாசியை ஒட்டி இருக்கும் வாரணவாசிபாளையத்தைச் சேர்ந்தவர் இவர். மண்ணின் மீதும், சமூகத்தின் மீதும் கொண்டிருக்கும் இவர் கொண்டிருக்கும் ஈடுபாடு அளவற்றது. ஆனால், ஏனோ இவரைப்போன்றவர்களின் குரல்கள் எங்கும் ஒலிப்பதில்லை. கீழிருக்கும் சில ஒளிப்பதிவுகள், நமது எதிர்காலத்தை வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கும் எதிர்காலம் சாமியப்பன் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்கின்றன.