Sunday, 15 February 2009

கொழுத்தவனும், இளைத்தவனும் (Stuffed and Starved )



அனைவருக்கும் வணக்கம்,

"தனிமனிதர் ஒருவர்க்கு உணவில்லையேல் ஜகத்தை அழித்திடுவோம்" என்று முழங்கினான் பாரதி. "இளைத்தவன் பசித்திருந்தால் இந்த மண்ணு தாங்காதப்பா" என்று புரட்சியின் விதையை நாசூக்காக தெரிவிக்கிறது அன்பே சிவம் படத்தில் ஒரு பாடல். இந்த இரு வரிகளும் ஒன்றன் கருத்தையே வலியுறுத்துகின்றன. சமீபத்தில், Stuffed and Starved: The Hidden Battle for the World Food System என்னும் புத்தகத்தை படித்தேன். ராஜ் படேல் என்னும் இங்கிலாந்து வாழ், இந்திய வம்சாவழி பொருளாதாரா நிபுணர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். உணவு அரசியல், அதன் அடிப்படை, உணவு பழக்க வழக்க மாற்றம், உணவு வணிகம், வளரும் நாடுகள் என்று கருதப்படும் நாடுகளின் உணவு உற்ப்பத்தி, அதன் விவசாயம், அதன் பாதிப்பு, சந்தை வணிகத்தினால் உருவாகியுள்ள சீரழிவு, பன்னாட்டு உணவு மற்றும் எண்ணெய் கம்பனிகளின் சுரண்டல் என அனைத்தின் உருவாக்கம், செயல்பாடு போன்றவற்றை மிகவும் ஆழமாக ஆராய்து படைத்துள்ளார். இந்த புத்தகம் உணவு உண்பவர்கள் படிக்க வேண்டியது. முக்கியமாக வேளாண் விஞஞானிகள் படிக்க வேண்டிய ஒன்று. உலக வாழ்க்கை தரத்தின் போக்கினை மாற்றும் வலிமை வாய்ந்தது இந்த புத்தகம். நடுநிலமையான நேர்மையான கருத்துக்களை மிகவும்கவனமாக கண்டு சேர்த்துள்ளார். இவரை காது கொடுத்து கேட்க வேண்டும்.

இவருடைய சில ஆலோசனைகள்:
More Info:
http://stuffedandstarved.org/drupal/frontpage


1. Transform our tastes and get away from what commercial food production has taught us to want.

2. Eat locally and seasonally available food.

3. Eat agroecologically meaning eat food produced in harmony with the local environment as developed in Cuba and embraced by Masanobu Fukuoka's One Straw Revolution in Japan as well as the UN developed sustainable agriculture network.

4. Support locally owned business not supermarkets or big box stores. He points out the flaw in corporate responsibility because it hinges on profit being made.

5. All workers have the right to dignity through unions that are allowed to organize without persecution.

6. Profound and comprehensive rural change such as equitable land distribution, but also including education, healthcare and infrastructure.

7. Living wages for all so poor can access food.

8. Support for sustainable architecture of food. Local markets and Community supported Agriculture.

9. Snapping the food system's bottleneck. Curb power of monopoles through anti-trust laws.

10. Owning and providing restitution for the injustices of the past and present. Forgive debt owed by the Global South to the Global North and start paying back for damage we have done.

Stuffed and Starved - nations














Thursday, 5 February 2009

தாய்மண், தாய்மொழி, மண்ணின் மைந்தன், தமிழர்






"கரிசக்காட்டுமாந்தர்". மண் என்பதை பொறுத்தே மனிதனின் குணங்களும் இருக்கும் என்பது காலங்காலமாக நம்முள் இருக்கும் பேச்சுவழக்குகளில் ஒன்று. மண்ணிலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவு, நீர், பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்படுகிறது. மண்ணின் தன்மையே அதிலிருந்து உருவாகும் உயிர்களுக்கு இருக்கும். மண் எவ்வாறோ அவ்வாறே மக்களும். மண் மாறினால் அனைத்தும் மாறும் (செடிகொடிகள், விலங்குகள், மனிதர்கள், அவர்தம் பழக்க வழக்கம், நாகரிகம், உணவு முறை, போன்றவை). மண்ணே அனைத்திற்கும் வித்து.

உதாரணம்:

கரிசக்காட்டு மண்ணில் விளையும் பருத்தி(விருதுநகர்) நன்கு செழித்து காணப்படும். செம்மண்ணில் விளையும் பருத்தி(சேலம்) செழிப்பட்ட்று காணப்படும். கரிகாட்டு மண்ணும், செம்மண்ணும் தன்மை மாறுவதால் அதில் விளைந்த பயிருக்கும் தன்மை மாறும். தஞ்சாவூரில் வளரும் வேப்ப மரமும், தர்மபுரியில் வளரும் வேம்பும் அதன் கசப்பில் அதன் வளர்ச்சியில் வேறுபடும். மண்ணின் தன்மையே இதன் வேறுபாட்டை தீர்மானிக்கிறது. Genus, Species, sub-species, varieties என்று taxonomical பாகுபாடும் இங்கனமே மண்ணை கொண்டு அமைகிறது. ஒரே செடிகொடிகளுள் உள்ள வேறுபாடு அதன் மண் ஊட்டி வளர்த்தவாரே வேறுபடுகிறது.

விலங்குகள்: விலங்குகளும் மண்ணை பொறுத்தே மாறுபடும். செம்மண்ணில் காணப்படும் தேள் செக்கசெவேல் என்று இருக்கும். கருமண்ணில் வாழும் தேள் கருமையாக இருக்கும். அந்த மண்ணிலே உயிர் வாழும் தாவர, சிறு விலங்குகளை உண்டு வாழும் உயிரினங்களும் அந்த மண்ணின் தன்மையையே பெரும். ராஜஸ்தானில் காணப்படும் மாடுகளும் (தார்பார்க்கர் இனம்), தமிழ் நாட்டில் காணப்படும் (காங்கேய இனம்) மண்ணின் தன்மைகளால் உருவான செடிகொடி மற்றும் இதர சுற்றுசூழல் மாறுபாடுகளால் வேறு படுகிறது. விலங்கினம் மறுபடவும் அடிப்படை மண்ணே!

௩செடிகொடி, விலங்கு அதனைசார்த்த சுற்றுப்புறம் இவையனைத்தையும் அடிப்படையாக கொண்டு வாழும் மனிதர்களும் மண்ணின் அடிப்படையிலேயே அமைகின்றனர். அவர்களது எண்ணம், உணவு, வாழ்க்கை முறை, வீட்டு அமைப்புகள், கல்வி, தொழில் என அனைத்தும் மண்ணை அடிப்படையாகக்கொண்டு உருவாகிறது. செடிகொடிகள் போல், விலங்குகள் போல், மனிதனும் மண்ணிற்கு மாறுபடுவான். ஒரு மனிதன் style="font-size: 100%;"> (இன்றல்ல) தான் வாழும் நாளில் ஒரு 100 மைல் தோல்விக்கு மேல் செல்லும் பழக்கம் இல்லாமல் தான் இருக்கும் இடத்திலேயே தான் வாழும் நாட்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்று வாழ்ந்தான். பல தலைமுறைகள் அந்த சுழலிலேயே வாழ்த்தமையால் அவன் அந்தமண்ணின் வளம் போலவே குணமும் பெற்று விட்டான். குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் எனும் நிலா பாகுபாட்டு முறை மண்ணை சார்ந்ததே. ஒவ்வொரு பாகுபாட்டு முறையிலும் அனைத்தும் வேறுபடும்.

ஆகவேதான் தாய்மண், மண்ணின் மைந்தன், நிலா மகன்/மகள், மண்ணின் மானம், மண்ணாசை, தாய் நாடு என அனைத்தும் மண்ணை, தாய் மொழி பொறுத்தே அமைந்தது. ஏனென்றால் அவன் வாழ்க்கைக்கு தேவையான உணவு, நீர், அடைக்கலம் என அனைத்தையும் மண்ணே தந்தது. கேல்வரகும், கம்பும், காய்ந்து போன மன்னனின் வெளிப்பாடுகள். அதன் வெளிப்பாடுகளே அதை உண்டு வாழும் மனிதன். அரிசியும், வாழையும் ஈர மண்ணின் வெளிப்பாடுகள் அதன் தன்மை கொண்டதே அங்கு வாழும் மனிதன் மனமும் வாழ்வும். இவர்கள் மண்ணின் மைந்தர்கள். மொழி, இனம், வாழ்வு உணவு, பழக்க வழக்கம், நாகரிகம், அறிவு என அனைத்திலும் மண்ணின் மைந்தர்கள்.தமிழஅர்களும் சரி, இந்தியர்களும் சரி இவ்வளவு வேறுபாடுகளுடன் காணப்படுவதன் காரணம் அவர்தம் மண்ணின் தன்மையே. இந்தியாவில் மண் தன்மை வேறுபாடு மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். இதனை நாம் நன்கு அறிவோம். BIODIVERSITY அதிகம் உள்ள நாடுகளில் இந்த்தியாவும் ஒன்று. இதன் காரணம் மண்ணே. இந்தியாவைப்போல் மனிதருள் வேறுபாடு அதிகம் கொண்ட நாடுகள் மிகச்சில. இத்தகைய வேறுபாடே மொழியிலிருந்து கலாச்சாரம் வரை அனைத்தையும் வேறுபடுத்துகிறது.

இதன் அனைத்திற்கும் அடிப்படை கருவியாக அமைந்தது விவசாயம். ஒரு மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகள் நிலா வளம் குன்றாமல் வாழ வழி கண்டு பிடித்தவர்கள் தெற்காசிய மக்களே! இதனாலேயே நம் மக்கள் ஒரே இடத்தில் (unlike migratory nomads of the western nations and africa) பலாயிரம் ஆண்டுகள் வாழமுடிந்தது. கலாச்சாரமும், வேறுபாடும் அதிகம் கொண்டு வளர்ந்தது. மொழி செழுமை அதிகம் ஆனதன் காரணமும் மண்ணின் அடிப்படைத்தன்மையே அங்கு உணவழிக்கும் வேளாண் குடியினரின் (மண்ணின் மைந்தர்கள்) வாழ்க்கையே.

அதனாலையே மண்ணை அடிப்படையாகக்கொண்ட (உணவு வழங்கும்) விவசாய மக்களை நம்மியே உலகம்/ சமுதாயம் வாழ்கிறது என்பதை கருத்தில் கொடு "சுழன்றும் ஏர்பின்னது உலகம்" என்றார் வள்ளுவர்.ஆனால் இன்றோ இத்தகைய வியசாயமும், மண்ணின் மகத்துவமும் அழிந்து supermarket இலும், கடையிலும், உணவகங்களிலும் உணவு கிடைக்கின்ற கலாச்சாரத்தில், மண்ணின் மைந்தர்கள் என்று கூற எவருமிலர். ஆந்திரா அரிசி, நியூ சிலாந்து ஆப்பிள், பர்மா பருப்பு, தாய்லாந்து மிளகு, அமெரிக்க கோதுமை, ஸ்பானிஷ் தக்காளி என்று பல நாடுகளில் பல மண்ணில் விளைந்த பொருட்களை உண்ணும் தமிழ் நாட்டு மக்கள் மண்ணின் (தமிழ் மண்ணின்) மைந்தர்கள் என்று கூறும் தகுதியை 50% இழந்து விட்டனர். வெறும் மொழி, கலை என்று இருத்தலால் அவர்கள் உண்மை தமிழர்கள் என்று கூற வியலாது. அந்த மண்ணிலேயே பிறந்து அந்த மண்ணில் விளைந்ததை உண்டு அந்த நாட்டுக்காக உண்ணும் நாள் வரும் வரை உண்மைத்தமிழர் எவருமிலர். தமிழ் நாட்டிலும் வாழும் தமிழர்கள் பெண்டு சர்ட்டு அணிந்து, பீசா பகற் போன்றவற்றை உண்டு, கொளுத்தும் வெயிலில் கண்ணாடி வீடுகளிலும், அலுவலகங்களிலும், பல மாடிக்கட்டிடங்களிலும் உண்மையாக மண்ணில் உழைத்து உண்ணும் பழக்கம் மறந்த இன்றைய தமிழர்கள் உண்மைதமிழர்கள், மன்னி மைந்தர்களே அல்ல. மேலும் விவசாயத்தை செய்ய மறந்த/ மறுக்கும் தமிழர்கள், அதம்னைப்பத்தி விவாதிக்க மறுக்கும் தமிழர்கள்,அடிப்படை தன்மை இழந்த தமிழர்கள் மண்ணின் மைந்தர்களே அல்ல. இவர்கள் அனைவரும் பல்வேறு உணவு, கலாச்சாரம், மொழி, குணம், என அனைத்திலும் பதிக்கப்பட்டு வாழும் MUTANT மைந்தர்கள். Hybridized தமிழர்கள். மண்ணின் மகத்துவத்தை, விவசாயத்தை உணவை, அனைத்தையும் மறந்த மானங்கெட்ட தமிழர்கள். வேட்டி அணிவதை, ஏர் பிடிப்பதை, மாடு பிட்ப்பதை, தமிழர் உணவு உண்பதை மறந்த அயோக்கியர்கள். பேருக்கு தமிழர் திருநாலேன்று மொட்டைமாடியில் பொங்கல் வைத்து உண்ணும் ஏமாற்றுக்காரர்கள். மண்ணின் மைந்தர்கள்- உண்மை தமிழர்கள் நாடு திரும்பும் நாள் எப்போது?

மண்ணின் மைந்தர்கள் யார்! விவசாயம் அடிப்படையாகொண்டு வாழும் சிலரே என்பது என் கருத்து. பிறர் பிழைப்பிற்க்காக நகரங்களுக்கு படையெடுத்து சென்று விட்ட நன்றி கெட்ட மைந்தர்களே!

Monday, 2 February 2009

கனவுகள் ஆயிரம் ! (Anti-terrestrial dreams of the earth’ pests)



அனைவருக்கும் "நமாஸ்"காரம்,

தமிழ்ல ஒரு பழமொழி உண்டு. "இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைப்பட்டாற்போல்" ன்னு. அது மாதிரி இவ்வளவு பெரிய உலகத்தில இயற்கையோடு வாழத்தெரியமா இருந்து இங்கு இருக்கிற இயற்க்கை வளங்களை தன் பேராசைக்காக அழித்துகொண்டு இப்போ சந்திரனில் விவசாயம் செய்யுரோம்ன்னு கெளம்பி இருக்காங்க நம்ப அறிவிலிங்க! உலகத்துல எப்படி விவசாயம் செய்யணம், இயற்க்கை வளங்களை எப்படி பாதுகாக்கனம் அப்படின்னு யோசிக்காம, சந்திரன், செவ்வாய், சுக்கிரன்னு கடலக்குடி ஜோசியர் மாதிரி பீலா வுட்டுக்கிட்டு இருக்கானுங்க இந்த பரதேசி பயலுங்க. இவனுகளுக்கு பூமியில வாழத்தகுதியே கிடையாது. இவனுகளுக்கு சந்திரனுக்கு பாஸ்போர்ட் கொடுத்து, அங்கயே கெடந்து சாவுங்கடான்னு தொறத்தனம். இதுக்கு செலவு பண்றது யாரு காசு? பொது மக்கள் காசு. கொல்லைப்பக்கம் குப்பைகூளங்களை அள்ள வசதி செஞ்சு தரமாட்டானுங்க இதுல சந்திரன் வேறு. பரதேசிங்க! இவங்கள எவ்வளவு அசிங்கமா திட்டினாலும் தகும். இதுல மாணவர்களை வேற சந்திரன்ல உணவு ஆராய்ச்சி பத்தி படிக்க ஊக்கபடுத்தராரு! ஒரு பாராட்டு விழா நடுத்துனா, அதுக்காக என்னவேண்ணாலும் பேசுவானுங்க! பரதேசிங்க! இத போடுறதுக்கு ஒரு ஊடகம்! த்தூ....! கீழ பாருங்க இந்த செய்திய!

சந்திரனில் குடியேற முடியுமா?

கோவை : ""சந்திரனில் குடியேற முடியுமா, அங்கு விவசாயம் செய்து உயிர் வாழ முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன,'' என்று சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறினார். கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில், விஞ்ஞானி அண்ணாதுரை பேசியதாவது: சந்திரனில் நாளை குடியிருப்பு அமைக்கும் போது பிற நாடுகளும் அதில் இணைய வேண்டும்
என்பதற்காகவே, சந்திரயான் பயணத்தில் பிற நாடுகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. "நாசா' அமைப்பு ஏழு ஆண்டுகள் சிரமப்பட்டு சாதித்த ஒரு சாதனையை நாம் நான்கு ஆண்டுகளில் சாதித்துள்ளோம். விண்கலத்தில் இதுவரை எந்த நாடும் எடுத்துச் செல்லாத 11 நவீன சாதனங்களை நாம் இவனுகளுக்கெல்லாம் இந்த, சர்வதேச தொழிநுட்பம் ங்கிற பேருல ஆராய்ச்சி பாராட்டு கிடைத்துள்ளது. சந்திரயான்-1 மூலமாக சந்திரன் குறித்த விசேஷ தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா, ஜப்பானை விட மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவுக்கு கூடுதல் கனிமங்கள் தேவை. சந்திரனில் உள்ள கனிம வளங்களில் ஹீலியத்தை மட்டுமே பூமிக்கு கொண்டு வர முடியும். விண்வெளி ஆய்வில் உணவு மற்றும் மருத்துவத் துறையினரின் பங்களிப்பு முக்கியம் என்பதால், இத்துறையில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தலாம். இப்போது சந்திரனில் உயிர்கள் இல்லை. எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, விவசாயம் செய்ய முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது.

கடந்த 1960, 70ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட விண்கற்களைக் கொண்டு தண்ணீர் வளம் குறித்து ஆய்வு செய்தனர்; அதன் முடிவு இப்போது தான் தெரிய வந்துள்ளது. அதேபோல் இப்போது கிடைத்துள்ள படங்கள், தகவல்களை வைத்து முடிவுக்கு வர சிறிது காலமாகும். இந்தியாவின் 20 கோடி இளைஞர்களும் ஒரே லட்சியப் பாதையில் சென்றால் பல சாதனைகள் புரியலாம். குழுவாக செயல்பட்டால் அனைத்து துறைகளிலும்இந்தியாவை மேம்படுத்த முடியும். தகுதி இருந்தால் பெண்கள் 33 சதவீதஒதுக்கீட்டுக்காக போராடத் தேவை இல்லை. இந்திய இளைஞர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள் என்பதால் அனைத்து துறைகளிலும் 33 சதவீதத்தை விடஅதிக ஒதுக்கீட்டை பெறலாம். நாளைய இந்தியாவை உயர்த்த நாம் அனைவரும்ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.

http://dinamalar.com/pothunewsdetail.asp?News_id=10670&cls=&ncat=TN

Dear friends and general public, please never encourage these anti-terrestrial ideas. These people are pests for the humanity on earth.